சாஹோ விமர்சனம்
சாஹோ என்றால் 'வெற்றி உனதே!' எனப் பொருள்படும் என பிரபாஸ் பேட்டியில் கூறியுள்ளார். எந்த மொழியில் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சித்தாந்த் நந்தன் சாஹோ என்பதே படத்தின் தலைப்பிற்கான காரணம் என முடிவுக்கு வந்துவிடலாம்.
இந்திய அரசாங்கத்தின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டுக்கூடிய ராய் எனும் மிகப் பெரும் தொழிலதிபர் கொல்லப்படுகிறார். அவரை யார் கொன்றார்கள், ராய் வகித்த பதவிக்கு எவரெல்லாம் ஆசைப்படுகிறார்கள், ராயிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை.
கே.ஜி.எஃப், லூசிஃபர் போன்ற படங்கள் தமிழ் மார்க்கெட் மீது குறி வைத்து மேக்கிங்கில் மெனக்கெட, 'பாகுபலி பிரபாஸ் நடித்த 350 கோடி ரூபாய் பட்ஜெட்டுடைய படம்' என்றால் மட்டும் போதாதா என்ற மெத்தனத்துடன் களமிறங்கியுள்ளார் இயக்குநர் சுஜீத்.
படத்தின் தொடக்கம் ஓர் எதிர்பார்ப்பைத் தூண்ட...