Shadow

Tag: Sivakarthikeyan

சிவகார்த்திகேயனைச் சந்தித்த செஸ் சாம்பியன் குகேஷ்

சிவகார்த்திகேயனைச் சந்தித்த செஸ் சாம்பியன் குகேஷ்

இது புதிது, சமூகம்
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ், அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையைப் பாராட்டிய சிவகார்த்திகேயன், ‘இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம்’ என்றார். மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன்....
“காமெடியனால் உணர்வுப்பூர்வமாக நடிக்கமுடியும்” – சிவகார்த்திகேயன் | கருடன்

“காமெடியனால் உணர்வுப்பூர்வமாக நடிக்கமுடியும்” – சிவகார்த்திகேயன் | கருடன்

சினிமா, திரைச் செய்தி
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கருடன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாள...
#SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

#SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார்....
அயலான் விமர்சனம்

அயலான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நெடுநாளாக புரொடெக்‌ஷனில் இருந்து, படம் வெளியாகுமா இல்லை கைவிடப்படுமா என்பதான சந்தேகங்கள் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து, அவைகளை வெற்றிகரமாக கடந்து இந்த பொங்கல் பண்டிகைக்கு வெள்ளித் திரையில் வெளியாகியிருக்கிறார் அயலான்.  ‘இன்று நேற்று நாளை’ என்கின்ற அறிவியல் புனைவு கதையை தன் முதற்படமாக செய்து பெரும் வெற்றி கண்ட இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படம். சிவகார்த்திகேயன் நடிப்பில்  பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்தப் படம் என்று படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். படம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்  பூர்த்தி செய்திருக்கிறதா…? என்று பார்ப்போம். ஏலியன்ஸ் வகை திரைப்படம் என்றாலே வழக்கமான, அதற்கென்றே அளவெடுத்து தைத்தார் போன்ற ரெடிமேட் திரைக்கதை ஒன்று உண்டு. அதுயென்னவென்றால் ஏலியன்கள் பூமியை தாக்கி அழிக்க வருவார்கள். ந...
கனா விமர்சனம்

கனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் 'கனா'க்கள் திரை கண்டுள்ளது. "விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க" என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை. விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என கனவு காண்கிறாள். அந்தக் கனா எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே படத்தின் கதை. கெளசல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது நிச்சயம் ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதா, அதுவும் ஆண...