சோலோ இசை – ஒரு பார்வை
'வாயை மூடி பேசவும்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் நேரடி மூன்றாவது தமிழ்த் திரைப்படம் "சோலோ". தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அக்டோபர் 5 அன்று உலகெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார்.
சோலோ - ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். இதில் துல்கர், ருத்ரா (பூமி), சிவா (நெருப்பு), சேகர் (நீர்), திரிலோக் (காற்று) என நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு 11 இசையமைப்பாளர்களை பிஜாய் நம்பியார் நாடியுள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. தமிழில் அவர் இயக்கத்தில் வெளியான டேவிட் படத்திலும் இத்தகைய முறையையே கையாண்டார்.
துல்கரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப "சிவாவின் உலகம்", "சேகரின் உலகம்", "ருத்ராவின் உலகம்" என்று பிரிக்கப்பட்டு பாடல்கள் வெளியிட்டு உள்ளனர்.
W...