Shadow

Tag: Sony Pictures Animation

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்) பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் - மேன்களும், ஸ்பைடர் - வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும். இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஸ்பைடர் சொசைட்டிக்கும் செல்கிறார் மைல்ஸ் மொரால்ஸ். போன பாகத்தில், அழகான சின்னஞ்சிறு பன்றி ஸ்பைடர்-மேன் பூமிக்கு வரும். ஆனால், ஸ்பைடர் சொசைட்டியிலோ, ஆச்சரியமூட்டும் எண்ணிலடங்கா ஸ்பைடர்-மேன்கள் உள்ளனர். டைனோசர் ஸ்பைடர்-மேன். பூனை ஸ்பைடர்-மேன், குதிரை வ...
பீட்டர் ரேபிட் விமர்சனம்

பீட்டர் ரேபிட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட். துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் என்ற வார்த்தைப் பார்த்ததும் 2டி, 3டி போல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். உடை அணிவிக்கப்பட்ட உயிருள்ள முயல்களை அப்படியே பாத்திரங்களாகத் திரையில் உலாவ விட்டுள்ளார்கள். தன் பெற்றோரை இழந்து வாடும் பீட்டர் ரேபிட், ப்யா எனும் பெண்ணின் பாசத்தில் திளைக்கிறது. ப்யாவிற்கும், பக்கத்து வீட்டில் குடியேறும...