
SISU: Road to Revenge விமர்சனம்
ஃபின்னிஷ் மொழியில், சிசு (SISU) என்றால், தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் முயன்று கொண்டிருப்பது என்பது போல் பொருள்படும். மன உறுதி, நெஞ்சுரம், முடிக்கவே முடியாத அசாத்தியமான செயல்களை முடிக்கக் கூடிய விடாமுயற்சி என்பனவும் சிசு எனும் சொல்லுக்கான அர்த்தங்களாகக் கொள்ளலாம். ஆட்டாமி கோர்பி, அத்தகைய ‘சிசு’வைத் தனக்குள்ளே கொண்டவர். அவர் போரால், குடும்பம் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகத் தனித்து விடப்பட்டவர். சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கரேலியாவில் தன் குடும்பம் வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார். அம்மர வீட்டைப் பலகை பலகையாகப் பிரித்தெடுத்து, ஃபின்லாந்தில் அமைதியானதொரு சூழலில் மீண்டும் அவர்கள் ஞாபகமாக வீட்டை அமைக்க விரும்புகிறார் ஆட்டாமி கோர்பி.
ஆனால், அவரைக் கொல்ல நினைக்கின்றது சோவியத்தின் உளவு அமைப்பான KGB. அதற்காக சைபீரியன் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் போர் குற்றவாளியாகக் ...








