மெட்ராஸ்காரன் விமர்சனம்
திருமணத்திற்கு முன் தினம், ஒரு கர்ப்பினி பெண் மீது காரை மோதி விடுகிறான் நாயகன். ஊரே அவனுக்கெதிராகத் திரண்டு விடுகிறது. அவ்விபத்தினால், கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை இறந்து பிறக்க, ஐம்பதாயிரம் அபராதமும், இரண்டு வருடம் சிறைத் தண்டனையும் பெறுகிறான். அக்குழந்தையின் மரணத்திற்கு, தான் காரணமில்லை எனத் தெரிய வர, உண்மையைக் கண்டறியப் புறப்படுகிறான் நாயகன். நாயகன், உண்மையைக் கண்டுபிடித்து தன் குற்றவுணர்வில் இருந்து மீள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.
இப்படத்திற்கு, 'மெட்ராஸ்காரன்' எனத் தலைப்பிட நிச்சயம் ஒரு முரட்டுத் தைரியம் வேண்டும். கதையின் களம் புதுக்கோட்டை, கதாமாந்தர்களோ அம்மண்ணின் மைந்தர்கள். நாயகன், சென்னையில் வேலை பார்ப்பதாலும், அவன் சென்னை ரெஜிஸ்ட்ரேஷன் கார் வைத்திருப்பதாலும், அவனை மெட்ராஸ்காரன் என அழைக்கின்றனர். சொந்த ஊர் மெச்சும்படி தன் கல்யாணத்தை நடத்தவேண்டுமென்ற லட்சியம் கொ...