Shadow

Tag: Team Aim

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் வெளியாகிறது

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் வெளியாகிறது

சினிமா, திரைத் துளி
பார்வதி நாயர் நடிப்பில் வரும் 'உன் பார்வையில்' எனும் ஓர் அதிரடியான த்ரில்லர் படம், டிசம்பர் 19 அன்று, தென்னிந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான Sun NXT-இல் நேரடியாக வெளியாகிறது. இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையைத் தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகிற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணைப் பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். மேலும், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோரின் வலுவான நடிப...
“திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெறமுடியும்” – காஸிமா | தி கேரம் குயின்

“திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெறமுடியும்” – காஸிமா | தி கேரம் குயின்

சினிமா, திரைத் துளி
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6 ஆவது சர்வதேச கேரம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஸிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டைச் சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஸிமா. இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. காஸிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்தப் படத்துக்கு 'தி கேரம் குயின்' எனப் பெயரிட்டு, பிரம்மாண்டமாகப் பூஜையுடன் படத் தொடக்க விழா நடை பெற்றது. இப்படத்தில் காஸிமாவின் கதாபாத்திரத்தில் நடி...
அர்ஜுன் தாஸ் – அன்னா பென் – யோகிபாபு | புதுப்படப் பூஜை

அர்ஜுன் தாஸ் – அன்னா பென் – யோகிபாபு | புதுப்படப் பூஜை

சினிமா, திரைத் துளி
முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் (Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு, வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந...
Moonwalk – எல்லாப் பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே!

Moonwalk – எல்லாப் பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே!

சினிமா, திரைச் செய்தி
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர்.ரஹ்மானும் பிரபுதேவாவும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’ ஆகும். பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனரும் சி.ஈ.ஓ.வுமான திரு. மனோஜ் நிர்மல ஸ்ரீதரன் இப்படத்தினைத் தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, ஒரு படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 'ஏத்து', 'மெகரினா', 'மயிலே', 'டிங்கா', 'ஜிகர்' என இந்தப் படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு, ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும் வகையில் உருவாக்கியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு...
4000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

4000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

சமூகம், சினிமா, திரைத் துளி
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, ஜியோ ஹாட்ஸ்டார் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்தியத் திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். ஜியோ ஹாட்ஸ்டார்-இன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் கூட்டாண்மை தமிழ்நாட்டின...
45 – அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாண்டல்வுட் படம்

45 – அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாண்டல்வுட் படம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பான ‘45: த மூவி’ படத்தில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டி ஆகிய முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குநர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்தப் படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையிடப்படத் தயாராகியுள்ளது. ஏற்கெனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றான “45: த மூவி” படைப்பு, தனது கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் ட்ரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி ட்ரைலர் வெளியாகவுள்ளது. சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ...
மொய் விருந்து – ஓர் ஊரே ஒழுக்கமாக வாழும்

மொய் விருந்து – ஓர் ஊரே ஒழுக்கமாக வாழும்

சினிமா, திரைத் துளி
எஸ்கே ஃப்லிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C.R. மணிகண்டன் இயக்கத்தில், ஓர் அழகான ஃபேமிலி எமோஷ்னல் டிராமாவாக உருவாகியுள்ள 'மொய் விருந்து' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப் படத்தின் மையக்கருவாகும். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C.R. மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.இயக்குநர் C.R. மணிகண்டன், “நான் பேராவூரணி எனும் ஊருக்குஸ் சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதைப் பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பிச் செய்ய வேண்டு...
Heartiley Battery – சாதாரண காதல் கதை அல்ல | Zee5

Heartiley Battery – சாதாரண காதல் கதை அல்ல | Zee5

OTT, Web Series
தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி (Heartiley Battery’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலைப் புதிய கோணத்தில் ஆராய்கிறது. தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும் இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர்.‘ஹார்டிலே பேட்டரி’ சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்தத் தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அள...
JioHotstar South Unbound – தென்னிந்தியப் படைப்புத் திறனைக் கொண்டாடும் விழா

JioHotstar South Unbound – தென்னிந்தியப் படைப்புத் திறனைக் கொண்டாடும் விழா

OTT, சினிமா
கிருஷ்ணன் குட்டி (JioStar Head Entertainment Business, South Cluster), பாலச்சந்திரன். R (JioStar Executive Vice President – Tamil), R. மகேந்திரன் (CEO – Turmeric Media) ஆகியோர், நவம்பர் 5 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் 'JioHotstar South Unbound' என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர். இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்தியக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்துக் குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஜியோ ஸ்டாட் வழங்க...
மாயபிம்பம்‌ – படப்போஸ்டர் | சுந்தர்.சி வெளியீடு

மாயபிம்பம்‌ – படப்போஸ்டர் | சுந்தர்.சி வெளியீடு

இது புதிது
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் 'மாயபிம்பம்' ஆகும்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புதுமுக நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுக்க முழுக்கப் புதுமுகங்களே. படத்தின் பாடல்களைப் பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 2005 இல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டுப் படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவைப் பாராட்டினார்....
ரேகை | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த த்ரில்லர்

ரேகை | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த த்ரில்லர்

OTT, Web Series
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் தினகரன் M, இந்த இணையத் தொடரை உருவாக்கி எழுதி இயக்கியுள்ளார். இதனை S.S. க்ரூப் ஃபெளண்டேஷன் சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்தத் தொடரில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்.உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது? S.I. வெற்றியும் (பாலஹாசன்), காவலர் சந்தியாவும் (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்கத் துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது...
ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

சினிமா, திரை விமர்சனம்
டிராகுலா பாண்டியன் எனும் பெரிய ரெளடி, ரீட்டாவின் வீட்டில் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். டிராகுலா பாண்டியனின் பிணத்தைக் கைப்பற்ற நினைக்கும் மார்டின் குழு, டிராகுலா பாண்டியனின் தலைக்காகக் காத்திருக்கும் ஆந்திர ரெட்டி, தந்தைக்காக எதையும் எந்த எல்லைக்கும் போய்ச் செய்யும் அவரது மகன் டிராகுலா பாபி, ரீட்டாவைப் பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் ஒரு காவலதிகாரி ஆகியோரிடமிருந்து ரீட்டா எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. சீட்டாவாகப் பேசிக் கொண்டே இருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் தொல்லை பொறுக்க முடியாமல், அவரைக் குளியல் அறையில் வைத்துப் பூட்டி விடுகின்றனர். பூட்டப்பட்ட குளியலறையில் இருந்து ரெடின் கிங்ஸ்லி வெளியேறுவது ரசிக்க வைக்கிறது. ப்ரோக்கர் லல்லுவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தியின் மாடுலேஷன் அவரேற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. கொடூரமான சைக்கோ டிராக...
தாஷமக்கான் – ராப் இசைக்கலைஞராக ஹரிஷ் கல்யாண்

தாஷமக்கான் – ராப் இசைக்கலைஞராக ஹரிஷ் கல்யாண்

சினிமா, திரைச் செய்தி
இடா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் தின்க் ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வடச் சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்” ஆகும். மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டது. இந்நிகழ்வினில் பேசிய ஹரிஷ் கல்யாண், “தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழ்நாட்டிற்...
ரிவால்வர் ரீட்டா – ஒரு டார்க் காமெடி படம்

ரிவால்வர் ரீட்டா – ஒரு டார்க் காமெடி படம்

சினிமா, திரைச் செய்தி
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், தி ரூட் நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK. சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகரும், ரேடியோ ஜாக்கியுமான பிளேடு சங்கர், “இது என் நண்பன் படம். கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட், மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன ச...
ஆர்யன் விமர்சனம் | Aryan review

ஆர்யன் விமர்சனம் | Aryan review

சினிமா, திரை விமர்சனம்
விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷாலே தயாரிக்க உருவாகியுள்ள படம் ஆர்யனாகும். ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலில் நெறியாளராக இருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரைப் பேட்டி எடுக்கிறார். அப்போது அங்கு பார்வையாளராக வரும் செல்வராகவன், துப்பாக்கியை எடுத்து நீட்டி மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்புகிறார். அத்துடன் தான் ஒரு எழுத்தாளர் என்றும், தன்னுடைய படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றும் கூறுகிறார். தொடர்ந்து 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தன்னுடைய மாஸ்டர் பீஸை எழுதியிருக்கிறேன் எனச் சொல்வதோடு, தொடர்ந்து ஐந்து கொலைகளைச் செய்யப் போவதாகவும், முடிந்தால் போலீஸார் தடுத்து நிறுத்தட்டும் என்ற சவாலை விடுக்கிறார். போ...