Shadow

Tag: Team Aim

நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

சினிமா, திரைச் செய்தி
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டுடியோஸ் & பேவியூ ப்ராஜெக்ட்ஸுடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தைச் சாடும் ஓர் அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 ஆவது நாளைப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர். முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்...
பீரியட் ஃப்லிமாக உருவாகும் ‘மூத்தகுடி’

பீரியட் ஃப்லிமாக உருவாகும் ‘மூத்தகுடி’

சினிமா, திரைத் துளி
தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து, தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான 'முத்துக்கு முத்தாக', 'கோரிப்பாளையம்', மற்றும் 'சாவி' படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்கோபியும் இணைந்து நடிக்கின்றனர். 'வெல்டன்', 'கடைசி பெஞ்ச் கார்த்தி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் “மூத்தகுடி” படத்தின் திரைக்கதை எழுதி இயக்குகிறார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அன்விஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் R.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழம்பெரும் நடிகை K....
கேசினோ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கேசினோ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி
மாதம்பட்டி சினிமாஸ் & MJ மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். புதுமையான வகையில், ஓர் இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தைத் தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வாணி போஜன் ...
O2 விமர்சனம்

O2 விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
கோவையில் இருந்து கொச்சிக்குச் செல்லும் பேருந்து நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து விடுகிறது. பேருந்தில் சிக்கியவர்கள் ஆக்சிஜனுக்காகப் போராடும் சர்வைவல் த்ரில்லர்தான் படத்தின் கதை. சர்வைவல் த்ரில்லர் என வகைமைப்படுத்தினாலும், தன் மகனுக்காகப் போராடும் ஒரு வீரத்தாயின் கதை என்ற சிறப்பும் உண்டு இப்படத்திற்கு. தன் மகனுக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவரது செல்ல அழகு மகனாக யூ-ட்யூப் புகழ் ரித்விக் நடித்துள்ளான். அவனது திறமைக்குத் தீனி போடுமளவிற்கான வாய்ப்பு இல்லையெனினும், கிடைத்த ரோலில் ஆழமாகத் தன் முத்திரையைப் பதிந்துள்ளான் சுட்டிப் பையன். படத்தின் ஆரம்பமே, இயற்கையைப் பற்றிய ஓர் 2டி அனிமேஷனில் இருந்து தொடங்குகிறது. அதை அழகாகக் க்ளைமேக்ஸில் கொண்டு வந்து முடித்திருப்பது சாதுரியமான முடிச்சு. இயக்குநர் G.S.விக்னேஷ் எடுத்துக் கொண்ட மாறுபட்ட களம் ஈர்...
ஃபிங்கர்டிப் சீசன் 2 – விரல்நுனி ஆபத்து

ஃபிங்கர்டிப் சீசன் 2 – விரல்நுனி ஆபத்து

சினிமா, திரைத் துளி
ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரின்  செய்தியாளர் சந்திப்பானது படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே  நடைபெற்றது. ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C. வில்லியம்ஸ் தயாரிக்க,சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை  வேடங்களில் நடிக்க, மாரிமுத்து, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி, திவ்யா துரைசாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி இந்தத் தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். ஜீ5 கிளஸ்டரின் ஹெட்டான சிஜு பிரபாகரன், "சமூக வலைதளம் மற்றும் அதன் ஆபத்தைப் பற்றி எடுக்கும் தொடர்கள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும்...
அருள்நிதியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் ‘தேஜாவு’

அருள்நிதியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் ‘தேஜாவு’

சினிமா, திரைத் துளி
வொயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் வெளியீட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் படத்தின் நாயகனான அருள்நிதியின் பிறந்த நாளான ஜுலை 21 ஆம் தேதி வெளியிடவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E. சித்தார்த்தும், சண்டை பய...
விக்ரம் விமர்சனம்

விக்ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைதியின் தொடர்ச்சியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படமாக வந்துள்ளது விக்ரம். மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போல் ஒரு மேல்தோற்றம் தெரிந்தாலும், போதை வஸ்துகளற்ற சமூகத்திற்கான போராடும் வேட்டையாளராக விக்ரம் காட்டும் ஆக்ரோஷம் தான் படத்தின் கதை. மல்டிஸ்டார் படத்தை எப்படி ஹேண்டில் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகப் படம் திகழ்கிறது. ஒற்றை நாயகனின் சூப்பர் ஹீரோயிச பாணியில் சிக்குண்ட தமிழ்த் திரையுலகின் நார்சிஸ சூழலில் இருந்து வெளிவந்து, படத்தின் முதற்பாதி நாயகனாகப் பஹத் பாசிலை மிளிர விட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் வில்லன் யார், நாயகன் யார் என பஹத் பாசிலின் இன்வெஸ்டிகேஷனில் முதற்பாதி பரபரவென ஓடுகிறது. இந்த யுக்தி, சந்தனமாக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கும், பின்பாதியில் விக்ரமாகக் கர்ஜிக்கும் கமல் ஹாசனிற்கும் ஆழமான அடித்தளம் அமைத்துள்ளார். அதே போல் படம...
ஜூன் 17 முதல் ஜீ5 இன் ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’

ஜூன் 17 முதல் ஜீ5 இன் ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’

சினிமா, திரைத் துளி
ஜீ5 பார்வையாளர்களை மகிழ்விக்க மற்றொரு ஒரிஜினல்களுடன் மீண்டும் வந்துள்ளது. "ஃபிங்கர்டிப்" -க்குக் கிடைத்த அபிரிமிதமான வரவேற்பைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தற்போது இரண்டாவது சீசனுடன் மீண்டும் வந்துள்ளனர். இந்த இரண்டாவது சீசன் ஜூன் 17, 2022 முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபிங்கர் டிப் இரண்டாவது சீசன் ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர் ஆகும். டிஜிட்டல் தளம் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சக்தி, நம் விரல் நுனியில் எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றி வரும் ஒரிஜினல் சீரிஸ் இது. டிஜிட்டல் உலகில் முக்கியமாக இருக்கும் ஆபத்துகளை இந்தக் கதை ஆராய்கிறது. குறிப்பிடத்...
யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

சினிமா, திரைச் செய்தி
அருண் விஜயும், இயக்குநர் ஹரியும் இணையும் யானை திரைப்படம், ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி, “நானும், அருண் விஜயும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தைக் கொஞ்சம் வேற மாதிரி எடு...
ஆயிரம் மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் கடந்த RRR

ஆயிரம் மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் கடந்த RRR

சினிமா, திரைத் துளி
எஸ்.எஸ்.ராஜமௌலியின் “RRR (ஆர் ஆர் ஆர்)” திரைப்படம் 1000 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படமான RRR, மே 20, 2022 அன்று ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது. இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., “நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள RRR திரைப்படத்தின் மீது காட்டும் அன்பிற்கு மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்குப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார். நடிகர் ராம் சரண், “ஜீ5 இல் வெளியாகியுள்ள ‘ஆர் ஆர் ஆர்’ மீத...
நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆர்டிகள் 15 எனும் ஹிந்திப் படத்தைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு, மிக நேர்த்தியாக மூலத்தின் சாரம் குறையாமல் கொடுத்துள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜா. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் என்றில்லாமல், சில காட்சிகளைத் தவிர்த்தும், உதயநிதி ஸ்டாலினின் அரசியலுக்கு பலம் சேர்க்கும் காட்சிகளைச் சேர்த்தும், நெஞ்சுக்கு நீதியைத் தூக்கி நிலைநிறுத்தியுள்ளனர். விஜயராகவன் ஐ.பி.எஸ்., பொள்ளாச்சி வட்டத்திலுள்ள கிராமப்பகுதிக்கு மாற்றலாகி வருகிறார். இரண்டு தலித் சிறுமிகளைக் கொன்று மரத்தில் தூக்கில் போட்டுத் தொங்க விட, அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார் விஜயராகவன். அரசியல் செல்வாக்குள்ள மனிதர்களின் குறுக்கீடுகளைத் தாண்டி, எப்படிக் குரலற்றவர்களுக்கு விஜயராகவன் நீதி வாங்கித் தருகிறார் என்பதே படத்தின் கதை. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஐயராக சுரேஷ் சக்கரவர்த்தி கலக்கியுள்ளார். அவரது போலியான பணிவும், அச்சுறுத்தும் நயவஞ்சகம...
ஜீ5 இன் அசத்தும் அனந்தமும், கலக்கும் கார்மேகமும்

ஜீ5 இன் அசத்தும் அனந்தமும், கலக்கும் கார்மேகமும்

சினிமா, திரைத் துளி
ஐ.எம்.டி.பி. (IMDB)-இன் ‘டாப் தமிழ் வெப் சீரிஸ்’ பட்டியலில் இடம் பெற்ற 7-எபிசோட் கொண்ட ஜீ5 தொடரான, நடிகர் விமல் நடித்த “விலங்கு” இடம்பெற்றுள்ளது. இத்தளத்தின் சமீபத்திய வெளியீடுகளான ஏப்ரல் 2022 இல் பிரீமியர் செய்யப்பட்ட ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ வெளியான நாளிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் ப்ரியாவின் ‘அனந்தம்’ அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது, பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுபூர்வமான கதையினைக் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில், எண்ணற்ற நினைவுகளை, ஞாபகங்களை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு வீட்டையும் போற்றும் ஒரு அஞ்சலியாகப் இத்தொடர் பாராட்டப்பட்டு வருகிறது. நன்கு எழுதப்பட்ட கதாபாத்திரங்கள், வித்தியாசமான உணர்வுகளுடன் கதைசொல்லலில் யதார்த்தமான அணுகுமுறை, நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு என இத்தொடரின் அனைத்து ...
புத்தம்புது பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ்

புத்தம்புது பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ்

சினிமா, திரைத் துளி
புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளைத் தந்த தமிழ்த் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்திட்ட இந்தத் தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடகத் துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர்...
கண்ட நாள் முதல் பிரியாவின் ‘அனந்தம்’

கண்ட நாள் முதல் பிரியாவின் ‘அனந்தம்’

திரைத் துளி
ஜீ5 ஒரிஜினல் சீரீஸான “அனந்தம்” வரும் ஏப்ரல் 22 அன்று ஜீ5 தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகிறது. 'கண்ட நாள் முதல்', 'கண்ணாமூச்சி ஏனடா' முதலிய வெற்றிப் படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்." இந்தத் தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரியா V, "வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன். முரளி சார், கௌசிக் இருவருக்கும் நன்றி. 'கண்ட நாள் முதல்' படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இத...
வந்தான் சுட்டான் ரிப்பிட்டு | இயக்குநர் ராம்பாலா

வந்தான் சுட்டான் ரிப்பிட்டு | இயக்குநர் ராம்பாலா

சினிமா, திரைத் துளி
தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பாளர் "2 MB" ரகுநாதன் P.S, தற்போது தொடர் வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" எனும் புதிய படத்தைத் தயாரிக்கிறார். ஏப்ரல் 7 ஆம் தேத்க் அன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். >> ஒளிப்பதிவு - செவிலோ ராஜா >> இசை - சந்தோஷ் தயாநிதி & K.C.பாலசாரங்கன் >> கலை - கிருஷ்ணா >> படத்தொகுப்பு - K.J.வெங்கட்ரமணன் >> காஸ்ட்யூம் டிசைனர் - சோபியா ஜெனிபர் >> ஒப்பனை - ராஜா >> சண்டை - விக்கி >> ப்ரொடக்‌ஷன் எக்ஸிக்யுடிவ...