Shadow

Tag: The Marvels vimarsanam in Tamil

தி மார்வெல்ஸ் விமர்சனம்

தி மார்வெல்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
லிட்டில் வுட்ஸ் (2018), கேண்டிமேன் (2021) ஆகிய படங்களை இயக்கிய நியா டகோஸ்டாவின் மூன்றாவது படம், ‘தி மார்வெல்ஸ்’ ஆகும். நியா, மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் முதல் கறுப்பினப் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றாற்போல், படத்தில் மூன்று பெண் சூப்பர் ஹீரோக்கள் என்பது இன்னொரு சிறப்பம்சம். சூப்பர் ஹீரோ படமென்றால், ஒரு பலமான சூப்பர் வில்லன் வேண்டும். ஆனால் அதி சூப்பர் வில்லனான தானோஸைத் தடுக்க, அத்தனை சூப்பர் ஹீரோக்களும் இணைய வேண்டியதாகி இருந்தது. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் முடிவில், தானோஸ் ஒரு புன்னகையுடன், ‘என்னை விட சூப்பர் வில்லன் யாரிருக்கா?’ என ஒரு சொடுக்கில், மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களுக்கே உரிய கலகலப்பையும் சுவாரசியத்தையும் தன்னுடனேயே கொண்டு சென்றுவிட்டார். அதற்குப் பின்னான மார்வெலின் படங்கள், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ரகமாக உள்ளது. இணை பிரபஞ்சம், பன்னண்டம்,...