Shadow

Tag: Thirai vimarsanam

ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம்

ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பெரிய முதலீட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளார் துல்கர் சல்மான். சூதாட்டத்தில் தன் வயமிழக்கும் டேன் ஜானிற்கு விபத்து நேரிட்டு வலது கையை இழக்க வேண்டி வருகிறது. அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒரு நன்கொடையாளரின் கையைப் பொருத்துகின்றனர். அந்தக் கை, ஒரு தனி உயிர் போல் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கிறது. டேன் ஜானைத் தான் இழுத்த இழுப்பிற்கு அலைக்கழிக்கிறது. முத்தாய்ப்பாக, டேவிட் ஆப்ரஹாம் எனும் பெரும் தொழிலதிபரைக் கொலை செய்யவும், அந்தக் கை துணிகிறது. தன்னை மீறி இயங்கும் ஒரு கைக்காகக் கொலைப்பழியைச் சுமக்க முடியாது என டேன் ஜான் மருத்துவர்களிடம் கெஞ்சுகிறான். கையாவது, தனித்துச் செயற்படுவதாவது, கொலை செய்ய நினைப்பதாவது என டேன் ஜானை யாரும் நம்ப மறுக்கின்றனர். அந்தக் கைக்கும், டேவிட் ஆப்ரஹாமிற்கும் என்ன பகைமை, அப்பகைமையில் சிக்கிக் கொள்ளும் டேன் ஜான் எப்படி அதை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு....
ஏன் என்னை ஏதோ செய்தாய் | Yen Ennai Edho Seidhai review

ஏன் என்னை ஏதோ செய்தாய் | Yen Ennai Edho Seidhai review

இது புதிது
படத்தின் தலைப்புத்தான் படத்தின் கருவும் கூட! நாயகியைப் பார்க்கும் நாயகனுக்கு, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ எனத் தோன்றுகிறது. மது எனும் பாலியல் தொழிலாளியைச் சந்திக்கும் கார்த்திக்கிற்கு, அவள் மீது காதல் வருகிறது. மதுவும் கார்த்திக்கை விரும்ப, இருவரும் லிவிங் டுகெதரில் இணைகின்றனர். இவ்வுறவு கல்யாணத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்க, குடிப்பழக்கமுடைய கார்த்திக்கோ போதையில், மதுவிடம் கோபத்தில் வார்த்தையை விட்டுவிட, மனதுடையும் மது கார்த்திக்கை விட்டுச் சென்று விடுகிறாள். அந்தப் பிரிவாற்றாமை கார்த்திக்கை என்ன செய்கிறது என்றும், அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதும்தான் படத்தின் கதை. மது கதாபாத்திரம், வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டது. அதனாலோ என்னவோ, படத்தின் வசனங்களில் ஏகத்திற்கு ஆங்கிலத்திலேயே உள்ளன. லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் என்பதால், பின்னணி இசையைக் கழித்துவிட்டு வசனங்களை உற்றுக் கே...
Immortal விமர்சனம்

Immortal விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இம்மார்ட்டல் என்றால் இறப்பற்றவர் எனப் பொருள் கொள்ளலாம்.மஹி எனும் இளைஞனுக்கு, தனது வீட்டில் ஓர் அறையைக் குறைந்த விலையில் உள்வாடகைக்கு விடுகிறார் அழகான யுவதியான சிந்து. சிந்துவால் மிகவும் கவரப்படும் மஹி, சிந்துவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால், அந்த வீட்டை விட்டுத் தன்னால் என்றைக்கும் வெளியேற முடியாதபடி சிந்துவால் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற விபரீத உண்மை மெல்ல மஹிக்குப் புரியத் தொடங்குகிறது. சிந்து யார், அவர் ஏன் மஹியைச் சிறைப்பிடித்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை.மஹிக்கு முன்பு அவ்வீட்டில் மாட்டிக் கொள்ளும் ஆகாஷ், சிந்துவை வாம்பயர் பறவை (குருதியுண் பறவை) என்கிறான். மேற்குலக தொன்மவியல் நாட்டார் கதைகளில் வரும் ரத்தக்காட்டேரி போல் என்று சொல்லலாம். ஆனால் ஹாலிவுட்டைப் பொறுத்தவரை அவ்வகை ரத்தக்காட்டேரிகள் சூரிய வெளிச்சத்தில் வர அச்சமுறும். இயக்குநர் மாரியப்பன் சின்னா, தன்னுடைய குரு...
7 ஸ்டார் பாய்ஸ் | 7 Star Boys review

7 ஸ்டார் பாய்ஸ் | 7 Star Boys review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘ஆணப்பரம்பிலே வேர்ல்ட் கப் (Aanaparambile World Cup)’ எனும் மலையாளப் படம் 2022 இல் வெளியானது. அப்படத்தைச் சிறப்பாக மொழிமாற்றம் செய்துள்ளனர். கால்பந்து உலகக் கோப்பை 2018 இன் முதல் போட்டியில் தொடங்கும் கதை, கடைசிப் போட்டியில் நிறைவுறுகிறது. பன்னிரெண்டு வயது ஆகவில்லை என்று சொல்லி மைதானத்திற்குள் சிறுவர்களை அனுமதிக்க மறுக்கிறார் பயிற்சியாளர். அவர் பயிற்சியளிப்பதும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கே! பயிற்சியாளரால் துரத்தப்படும் ஏழு சிறுவர்களிலேயே இளையவனான 9 வயது உமர், ‘7 ஸ்டார் ஆத்தங்கரை டீம்’ என தங்கள் அணிக்குப் பெயர் சூட்டுகிறான். கிளப்பில் இருந்து தடை செய்யப்பட்ட இஸ்மாயில் எனும் இளைஞனைத் தங்கள் பயிற்சியாளராக இருக்கும்படி சிறுவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். இஸ்மாயிலோ, இந்தியக் கால்பந்து அணியில் ஜாம்பவனாகத் திகழ்ந்த I.M.விஜயனிடம் அழைத்துச் செல்கிறார். பன்னிரெண்டு நாட்களில் தொடங்கும் ‘கேரள பிள...
பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review

பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பிரேமலு படத்து இயக்குநர், மீண்டும் மமிதாவுடன் இணைந்து, ஒரு ஜாலியான நகைச்சுவையான ஃபீல்-குட் காதல் படத்தைக் கொடுத்துள்ளார். கேரளத்தின் சில சர்ச்களில், பிரார்த்தனை கூட்டங்கள், தான தர்மங்கள், சமூக தொண்டுகள் மற்றும் சர்ச்சின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்க, தேவாலயத்தில் கூடும் குடும்பங்களைப் பிரிவுகளாகப் பிரித்து, அப்பிரிவுக்குப் புனிதர்களின் பெயரையோ அல்லது புனித இடத்தின் பெயரையோ சூட்டிக் குடும்ப யூனிட்களை உருவாக்குவார்கள். அது போன்ற ஒரு யூனிட்டான பெத்லகேம் எனும் குடும்ப யூனிட்டைச் சேர்ந்த ஜஸ்டினின் பக்கத்து வீட்டுக்கு ஆஷ்லி புதிதாகக் குடி வருவதில் இருந்து கதை தொடங்குகிறது. ஆஷ்லியை விட பத்து அல்லது பன்னிரெண்டு வயது மூத்தவர் ஜஸ்டின். ஆஷ்லியின் மனதில் ஒரு பூ மலர்வது போல், இலையிலிருந்து சொட்டும் மழைத்துளி போல அழகாய், இயல்பாய் ஜஸ்டினின் மீது காதல் அரும்புகிறது. நாளொரு மேனி, பொழுதொரு வண...
Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம்

Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் காதல் கைக்கூடாத விரக்தியிலும் கோபத்திலும் உள்ள ஒருவனது வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவனுக்கு இரண்டாவது காதல் மலரும்போது, முதல் காதல், 'மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும்' எனக் கோரி நிற்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை. மிகவும் இறுக்கமாகவும், பிரபஞ்சத்தின் மீது கடுங்கோபத்துடனும் இருக்கும் ரகுவரனை, மிக அதிகமாகக் காதலிக்கிறார் அவரது கல்லூரி ஜூனியரான அஞ்சலி. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் ரகுவரன், அஞ்சலியை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த மனத்தடையுடன் தவிக்கிறார். ஆனால் அஞ்சலியின் உறுதி ரகுவரனின் இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறது. ரகுவரனுக்கும் அஞ்சலிக்கும் நிச்சயம் ஆனதும், ரகுவரனை இறுக்கமாக்கிய இந்திரா எனும் அவனது கடவுளிண்ட தேசத்துக் கடந்தகாலம் மீண்டும் கரை தட்டுகிறது. இசையும் நடனமும் கனவுகளும் இளமையாயும் வேகமாக வளர்ந்த அந்த இந்திரக் காதல், அப்போது ஏனென்ற காரணமே தெரியாமல் ரகுவரனுக்கு இல்லாமல் போக...
Hi :) விமர்சனம்

Hi :) விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'யாரடி நீ மோகினி' படப்பாணியில் ஒரு படம் தர முயற்சி செய்துள்ளது தயாரிப்பாளர் மற்றும் நடிகை நயன்தாராவின் குழு. ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகையாகவும் நிறைய முரண்களோடு இருக்கும் கவினும் நயன்தாராவும் ஒன்று சேர்வது தான் கதையின் ஒருவரிக்கதை. காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள கவின் ஊரைவிட்டு ஓடி வந்துவிடுகிறார். இன்னொரு புறம் தன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவருகிறார் நயன். இருவரும் சென்னையில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பைக் காலம் அல்ல, பழைய ஃபார்மட்டிலான திரைக்கதை வழங்குகிறது. அதன்பின் இந்த ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகியாக நயன்தாரா, பார்வையாளர்களுக்கு மிகவும் பரீச்சயமான அவரது வழக்கமான நடிப்பையே மீண்டும் அள்ளித் தெளித்துள்ளார். ஒருசில எமோஷ்னல் ஏரியாக்...
டாக்ஸிக் விமர்சனம் | Toxic review

டாக்ஸிக் விமர்சனம் | Toxic review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவே எதிர்பார்ப்போடு இருந்த ஒரு படம். இது, பான்-இந்தியப் படம் இல்லை; பான்-உலகப்படம் என்றளவுக்கு எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தும், கோவா அந்த சுதந்திர எல்லைக்குள் 1947 ஆம் ஆண்டு வரவில்லை. அங்கு வெளிநாட்டவர் கோலோச்சுகிறார்கள். கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. கோவாவைக் கட்டியாளும் ஒரு பெரிய டான் சால்வடாரின் அடியாட்கள் போல் வலம் வருகிறார்கள் ராயாவும், அவரின் அக்கா கங்காவும்! ராயாவிற்கும், டானின் மகள் ரெபேக்காவிற்கும் இடையில் நெருக்கம் ஏற்படுகிறது. ஆனால் ராயாவை வெறுக்கிறார் ரெபேக்காவின் தாய் எலிஸபெத். எலிஸபெத்தின் தம்பியான டோனி ராயாவைக் கொல்ல முயல, டோனியைக் காப்பாற்ற முடியாமல் தனது கைகளாலேயே கொல்கிறார் அவரது சகோதரி எலிஸபெத். சர்க்கஸில் சந்திக்கும் நாடியா மீது காதல் கொள்கிறார் ர...
ONE MAN விமர்சனம்

ONE MAN விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சினிமா மீது ஒப்பற்ற காதலும், தன் மீது அசாத்திய நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய மகத்தானதொரு முயற்சியை மேற்கொண்டு சாதித்துள்ளார் இயக்குநர் ராச்குமார். சினிமா என்பது பலரின் கூட்டு முயற்சியைக் கோரும் தொழிலாகும். ஆனால், சங்ககிரி ராச்குமார் தனி ஒருவராக, ஒப்பனை, VFX, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு என சுமார் 78 துறை சார்ந்த வேலையைக் கையாண்டுள்ளார். கற்பனைக்கு மிஞ்சியதொரு அசுரத்தனமான உழைப்பைச் செலுத்தியுள்ளார். அவரே ஒப்பனை போட்டுக் கொண்டு, கேமராவை இயக்கி, நான்கு வேடங்களில் தோன்றி, நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் பூமியில் இருந்து மறைந்து விட, ராஜா, ஜாக், பூமா, ரூபி ஆகிய நான்கு நண்பர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். யாருமில்லா உலகில், பத்து நாட்கள் மகிழ்ச்சியாக வலம் வரத் திட்டமிடுகின்றனர். அதன் படி நாடு நாடாகச் சுற்றி அமெரிக்காவை அடைகின்றனர். பத்து நாட்கள் முடி...
மகுடம் விமர்சனம் | Magudam review

மகுடம் விமர்சனம் | Magudam review

சினிமா, திரை விமர்சனம்
ஊருக்கு நல்லது செய்யும் ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவ்வொருவரைத் தவறாக நினைத்து ஒதுங்கி வாழும் அவரது மகன்தான் அடுத்து தலைமையேற்று ஊருக்குக் காவலாக இருக்கவேண்டுமென மகுடம் சூட்டுகின்றனர் மக்கள். கிருபாவின் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. பொருளாதாரச் சூழல் உவப்பாக இல்லாத சூழலிலும், ஒரு பயன்படுத்தப்பட்ட BMW காரை வாங்குகிறார் கிருபா. அந்தக் கார், கிருபா மறக்க விரும்பும் அவரது பால்யத்துடன் மீண்டும் தொடர்பை உருவாக்கிப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏற்படும் இழப்பு என்ன, அது அவரை எங்கு இட்டுச் செல்கிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படத்திற்கு, 185 நிமிடங்கள் கால அளவு என்பது ரொம்பவே அதிகம். படத்தொகுப்பாளர் N.B.ஸ்ரீகாந்த் மிகக் கறாராகப் படத்தின் நீளத்தைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். கிருபாவின் நண்பராக வரும் அர்ஜெய்க்கு ஒரு பில்டப் காட்சி வருகிறது. ஆனால் அதன் ப...
விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விஸ்வநாத் எனும் தொழிலதிபர், சான் பிரான்சிஸ்கோ சென்று வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்கிறார். திடீரென அக்குழந்தைக்கு மிக அரிதான நோய் ஒன்று வர, அதற்குத் தீர்வாகத் தாயின் எலும்பு மஜ்ஜை வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. விஸ்வநாத், வாடகைத்தாயான மதனகாமேஸ்வரி ஜோதிலிங்கம் எனும் மேடி J-வைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்து வருகிறார். மேடியின் வரவால், விஸ்வநாத் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே படத்தின் கதை. கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகள் படத்தின் பெரும்பலம். சூர்யா, ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, ரவீனா டாண்டன், பவானிஸ்ரீ ஆகியோர் தங்கள் ஏற்றப் பாத்திரத்திற்கு மிக நிறைவான பங்களிப்பை அளித்துள்ளனர். அந்த மாளிகையின் உட்புறத்தோற்றமான ஹால் மட்டும் ஓர் அந்நிய உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் நடிகர்கள் அதைத் தங்களது நடிப்பால் மறக்கடித்து விடுகின்றனர். இயல்பாகவே ஓர் அப்பாவித்தனம் அப்பி...
டிசி விமர்சனம் | DC review

டிசி விமர்சனம் | DC review

சினிமா, திரை விமர்சனம்
நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறியவண்ணம் இருந்தது. அதற்குத் தீனி போடும் வகையில், ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ஆக்சன் மேளாவை அரங்கேற்றியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். தாஸ் (D), சந்திரா (C) எனும் மையப் பாத்திரங்களினுடைய பெயர்களின் முதலெழுத்தே தலைப்பாகும். லோகேஷ் கனகராஜ் மற்றும் மூவர் 2011-இல் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். கொள்ளையடித்தது காவலர்களிடமிருந்து. பெரும் ஆயுதங்களைக் கொள்ளையடித்த அவர்களைக் காவல்துறை வலை வீசித் தேடுகிறது. சென்னையில் லோகேஷ் & டீமை கொஞ்சநாள் கமுக்கமாக இருக்கச் சொல்கிறார் அவர்களது லீடரான தலைவாசல் விஜய். சென்னைக்குச் செல்லும் லோகேஷ் ஒரு லாட்ஜில் தங்குகிறார். அந்த லாட்ஜில் பாடகியாகப் பணி புரியும் சஞ்சனா ஏ.கே மீது காதல் கொள்கிறார். அத...
அருள்வான் விமர்சனம் | Arulvaan review

அருள்வான் விமர்சனம் | Arulvaan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அருள் என்பது இறைவனின் எல்லையற்ற கருணை, இரக்கம் மற்றும் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் ஆன்மிகச் சொல்லாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் கடவுளின் ஐந்தொழில்களில் மிக மேன்மைமிக்க ஒன்றாகும். அத்தகைய தெய்வத்தின் தொழிலை, ஒரு மனிதனால் செய்ய முடியுமா? 'புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' எனும் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, 'முடியும்' என்கிறார் இயக்குநர். பூங்கொடி எனும் மலைக்கிராமத்தில் வாழும் குறிஞ்சி எனும் சிறுமி, கல்வியே தங்களுக்கான விடியலைத் தரும் எங்கின்ற முயற்சியில் மேற்கொள்ளும் நம்பிக்கைப் பயணமே இப்படத்தின் கதையாகும். காளி வெங்கட்டைக் கதையின் நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமிது. ஆரவும் அருள்நிதியும் படத்திற்குள் வர, காளி வெங்கட்டிற்குப் பத்திரிகையாளர் தன்ராஜ் எனும் சிறு வேடமே வாய்த்துள்ளது. மருத்துவமனைக் காட்சியில், குறிஞ்சியின் நிலைமையைக் குறித்து உருக்...
அன்பே டயனா விமர்சனம் | Anbe Diana review

அன்பே டயனா விமர்சனம் | Anbe Diana review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பெரம்பூர் பையனுக்கும், ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் ஆச்சா என்பதே அன்பே டயனா படத்தின் ஒரு வரிக்கதை. பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட ஏரியாவில் குடியிருக்கிறது ஹீரோ பாரி இளவழகனின் குடும்பம். அம்மா ரோஜா, அவர் சாதிப்பற்றுக் கொண்ட கண்டிப்பான அம்மா. கதாநாயகனுக்கு அம்மா என்றால் பயம். அதே போல்தான் கதாநாயகனின் அப்பா சேத்தனுக்கும். அக்கா ஒருவர், தன் கணவனோடு ஒரு மனக் கசப்பில் மூளை சார்ந்த நோய்மை கொண்ட மகளோடு தாய்வீட்டிலேயே இருக்கிறார். கதாநாயகனின் தம்பி அநியாயத்திற்கு சமர்த்து. இப்படியான கதாநாயகனின் குடும்பத்திற்குக் குட்டைப்பாவடையும், குடும்பக் குடியுமாக வாழும் நாயகி ரம்யா ரங்கநாதன் எப்படி செட்டாவார் என்ற கேள்விக்கான பதில் தான் படத்தின் மீதிக்கதை. ஜமா படத்தில் கதாபாத்திரத்தோடு அவரைப் பிரித்துப் பார்க்க முடியாத படி நடித்திருந்தார் பாரி இளவழகன். அப்படம் இன்றும் நெஞ்சில் பசுமையாக நிற்பதற...
இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘இதயம்’ எனும் படம், 1991 இல் வெளியாகி அந்தக் கால இளைஞர்களின் இதயங்களை வென்றது. மறைந்த நடிகர் முரளியின் திரைவாழ்வில் ஒரு மைல்கல் அப்படம். அப்படத்தின் நாயகனின் குணாதிசயத்தைக் கதைக்கருவாகக் கொண்டு அதர்வாவை வைத்து இதயம் முரளியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். 90’ஸ் கிட்ஸ் அதர்வாவிற்கு சிறுவயது பெண்களிடம் காதலைச் சொல்வதற்கு தயக்கம். அந்த தயக்கமே அவரின் காதல்களுக்குத் தடையாக மாறுகிறது. பள்ளிவாழ்வில் பாடமெடுக்கும் மிஸ்ஸிடம் காதலைச் சொல்லத் தவறுகிறான். அதன்பின் பருவ வயதில் ட்யூஷன் ஜோடியான ப்ரீத்தி முகுந்தனிடம் காதலைச் சொல்லாமல் அந்தக் காதலையும் தவறவிடுகிறார். முத்தாய்ப்பாக இளைஞர்களின் கனவு நாயகியான கயாடு லோகரிடம் காதல் சொல்லும் வாய்ப்பு வருகிறது. அதையும் தவறவிடுகிறார். ஒரு கட்டத்தில் துணிச்சலை வர வைத்துக் காதலைச் சொல்லச் செல்கிறார் அதர்வா. ஆனால் காதலிகள் என்ன நிலையிலிருந்தார்கள் எ...