Shadow

Tag: UV Creations

கங்குவா விமர்சனம்

கங்குவா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தந்தைக்கும் மகனுக்குமான ஜென்மாந்திர பந்தத்தைப் பேசுகிறது படம். நவீன ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் ஜீடோ எனும் சிறுவன், ஃபிரான்சிஸ் தியோடரிடம் அடைக்கலம் புகுகிறான். இது 2024 இல். பெருமாச்சியின் வீரனும் இளவரசனுமான கங்குவா, பெருமாச்சிக்குத் துரோகம் செய்யும் கொடுவாவின் மகனைத் தத்தெடுத்துக் காப்பதாக வாக்களிக்கிறார். அடைக்கலம் புகுந்தவனை ஃபிரான்சிஸ் காப்பாற்றுகிறாரா, கொடுவாவின் மகனைக் கங்குவா காப்பாற்றுகிறாரா என இரண்டு கதைகள் இணையாகப் பயணிக்கிறது. பெருமாச்சி, அரத்தி, முக்காடு, வெண்காடு, மண்டையாறு என ஐந்து தீவுகள் பாரதத் தேசத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்றன. பாரதத் தேசத்தைப் பிடிக்க, 25000 வீரர்களோடு அரசர் அரிலியஸின் ரோமானியக் கப்பற்படை வருகிறது. போருக்கு முன், பயிற்சி எடுக்க நிலம் தேவைப்படுகிறது. இதுவரைக்கும் கதை சரி. சிலுவைப் போர் தொடங்குவதற்கு முன்னான ஆரம்பகட்ட பூசல்கள் நிக...
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி,  தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.  அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல்,  தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  இதற்காக  மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும்  ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார்.  அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது.  இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி மிஸ்...
மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

Movie Posters, அயல் சினிமா, கேலரி, சினிமா, திரைச் செய்தி
தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் தனது ‘பிம்பிசாரா’ திரைப்படம் மூலம் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும். மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவ...