Shadow

Tag: Veera Dheera Sooran – Part 2

வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காவல்துறை உயரதிகாரியான எஸ்.பி. அருணகிரி, கண்ணனையும் அவரது தந்தையான பெரியவர் ரவியையும் என்கவுன்ட்டரில் கொல்ல நினைக்கிறார். இதையறியும் பெரியவர் ரவி, தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார். அதற்காக எஸ்.பி.யைக் கொல்ல, மளிகைக் கடை வைத்திருக்கும் காளியை அணுகுகிறார். யார் யாரைக் கொன்றார்கள் என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர் S.U.அருண் குமார். தன் கணவன் ஃபோன் எடுக்காததால் பதற்றமடையும் ஒரு மனைவியின் கோபம், ஒரு நாள் இரவுக்குள் என்னென்ன களேபரங்களுக்குக் காரணமாகிறது எனும் கதையின் மையக்கருவே திடுக்கிட வைக்கிறது. மனித மனங்களின் சிடுக்குகளையும், அகங்காரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும் நேர்த்தியாகத் திரைக்கதையில் கையாண்டுள்ளார் S.U.அருண் குமார். தனது வேலைக்கு உலை வைத்தவர்களைக் கொன்றே ஆகவேண்டுமென எஸ்.பி. அருணகிரியின் அதீத செயற்பாடுகள், அதி...
வீர தீர சூரன் பார்ட் 2 – மார்ச் 27

வீர தீர சூரன் பார்ட் 2 – மார்ச் 27

இது புதிது, சினிமா, திரைத் துளி
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன் - பார்ட் 2' திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'வீர தீர சூரன் - பார்ட் 2' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ‌.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி.எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார். ஆக்சன் த்ரில்லர் என்டர்டெய்னராகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து படப்பிடிப...
ஜனவரி 2025 இல் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’

ஜனவரி 2025 இல் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’

Teaser, இது புதிது, காணொளிகள், சினிமா, திரைத் துளி
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான S.U. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'வீர தீர சூரன் - பார்ட் 2 ' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஜி.கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் என்டர்டெய்னராகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிற...