டெவில் விமர்சனம்
ஆண் பெண் இருபாலருக்குமான உறவுநிலைச் சிக்கலை சிக்கலே இல்லாமல், சிரத்தையும் இல்லாமல், த்ரில்லர், தத்துவார்த்தம், ஆன்மீகம் என பல தளங்களின் வழியே பேச முயன்றிருக்கும் திரைப்படம் தான் டெவில்.
டெவில் என்கின்ற தலைப்பிற்கான நேரடியான விளக்கங்களோ, பூடகமான விளக்கங்களோ கதை மற்றும் திரைக்கதையில் இல்லை. நாம் கதையாடலை மையமாகக் கொண்டு, மானசீகமாக எல்லோர் மனதிற்குள்ளும் ஒளிந்திருக்கும் சாத்தான் என்று சொல்ல முற்பட்டால், மணம் தாண்டிய உறவுகளையும் அந்த உணர்வு நிலைகளையும் நாம் சாத்தானாக உருவகப்படுத்திகிறோம் என்கின்ற தவறான பொருள் கொள்ளல் தோன்றும். எனவே அதைத் தவிர்த்து நாயகன் விதார்த்தின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, இந்த டெவில் என்பதன் அர்த்தத்தை ஆணின் மனதிற்குள் ஒளிந்திருக்கும் கயமை என்று பொருள் கொள்ளலாம்.
தான் தவறிழைக்கும் போது அதை மன்னிக்கக் கூடிய குற்றமாகக் கருதி , எதிர்பாலாகிய மனைவியிடமோ அல்லது காதல...