Shadow

Tag: Warner Bros. Pictures

தி பிளாஷ் விமர்சனம்

தி பிளாஷ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
டிசி (DC) என்றால் டார்க் காமிக்ஸ் என்றொரு பொதுவான அபிப்ராயம் உலகளாவில் நிலவியது. வொண்டர் வுமன் (2017), அக்வா மேன் (2018), ஷசாம் (2018) முதலிய படங்களின் மூலம் தங்களுக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் போல் கலகலப்பான கொண்டாட்டத்தை அளிக்கக்கூடிய படம் எடுக்க முடியும் என நிரூபித்தனர். ‘தி பிளாஷ்’ படமும் அத்தகைய கொண்டாட்டத்திற்கு உறுதியளிக்கிறது. பேரி ஆலன், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தனது சக்தியைப் பயன்படுத்தி கடந்த காலத்திற்குள் செல்லமுடியுமென தற்செயலாகக் கண்டுபிடிக்கிறார். கடந்த காலத்திற்குள் சென்று, தனது தாயின் மரணத்தைத் தடுக்க முனைகிறார் பேரி ஆலன். ‘அது நடைமுறை சாத்தியமில்லா ஒன்று’ என பேட் மேன் எச்சரித்தும், ஸ்பீட் ஃபோர்ஸ் மூலமாகக் கடந்த காலத்திற்குள் விபரீதப் பயணத்தை மேற்கொள்கிறார் பேரி ஆலன். கடந்த காலத்தை மாற்றிவிட்டு, நிகழ்காலத்திற்கு வரும் வேளையில், ஸ்பீட் ஃபோர்ஸ்க்குள் நுழையும...
Shazam! Fury of the Gods விமர்சனம்

Shazam! Fury of the Gods விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
டிசி காமிக்ஸின் ஷசாம் எனும் படம், 2019 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பில்லி பேட்ஸன் எனும் பதின்ம வயது சிறுவனுக்கு எதிர்பாராதவிதமாக, சூப்பர் ஹீரோவாகும் மந்திர சக்தி கிடைக்கிறது. பதின்ம வயது மனத்துடன் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தைக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மையக்கரு. முதற்பாகத்தில், தத்தெடுக்கப்படும் புதிய குடும்பத்தில் தன்னை ஓர் அங்கமகாக இணைத்துக் கொள்ளாமல், தன் பெற்றோரைத் தேடியவண்ணமே இருப்பான் பில்லி. இப்படத்தில், ‘குடும்பம்தான் எல்லாம்’ என தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மீது அதீத பாசத்தோடு இருக்கிறான் பில்லி. விரைவில் பதினெட்டு வயது எட்டப் போகும் தன்னைக் குடும்பத்தை விட்டு அனுப்பிவிடுவார்களோ, மீண்டும் குடும்பத்தைப் பிரியவேண்டுமோ என கவலையிலே உள்ளான் பில்லி. ஷசாம் படத்தின் அழகே, சிறுவன் பில்லி தனக்குக் கிடைக்கும் சக்திகளைத் தன் சகோதர சகோதரிகளுக்குப் பகி...
அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்?

அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்?

அயல் சினிமா, திரைத் துளி
‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம் (FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM)’ எனும் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தெலுங்கிலும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிப் பெரும்புகழை அடைந்த பெண் எழுத்தாளர் J. K. ரெளலிங்கின் கற்பனையில் இருந்து உதித்த மற்றொரு படமிது. அதை விட, திரைக்கதையாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் முதல் படமிது என்பது இப்படத்திற்கான கூடுதல் சிறப்பு. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இனைத்துக் கொண்டுள்ளார். ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம்’ என்பது ஒரு புத்தகத்தின் பெயர். ஹாரி பாட்டர் பாடப் புத்தகமான தன் கையில் வைத்திருக்கும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் நியூட் ஸ்கேமண்டர். அந்தக் கதாப்பாத்திரம் தான் இந்தப் படத்தின் ஹீரோ. நியூட் ஸ்கேமண்டராக நடித்துள்ளார் எடி ரெட்மெய்ன். எந்தக் கதாப்பாத்திரத்தில் நடி...