Shadow

தொரட்டி – இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் கதை

Thoratti-Ramanathapuram-movie

1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின்  அடிப்படையில் தொரட்டி தமிழ்த் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்தக் கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். 

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்காக அந்தப் பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து, அப்பகுதி மக்களுடன் இரண்டரக் கலந்து படத்தில் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.

அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வுகளை , கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைவரும் எழந்து நின்று கைதட்டிப் பாராட்டிச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைத் தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஶ்ரீதருக்கு அளித்தனர்.

செக்கோஸ்லோவேகியாவில் நடந்த மதிப்புமிக்க PRAGUE சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது தொரட்டி படத்தின் கதையின் நாயகனான ஷமன் மித்ரூவுக்கு வழங்கபட்டது.

கலந்து கொண்ட அனைத்துத் திரைப்பட விழாக்களிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று, வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள உள்ள இப்படத்தினைத் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கி வெளியிடுகிறது.