உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நடிகர் பசுபதி, ” இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு பல சிறப்புக் காரணங்கள் இருக்கிறது. முதலாவது காரணம் பா. ரஞ்சித். இந்தக் கதைக்களம் புதிது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத களம் இது. புது அணுகுமுறை. ரஞ்சித்தின் படங்களில் ஒரு புதுத் தேடல் இருக்கும். இது என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய தேடல் எங்களுக்கானதாகவும் இருக்கிறது. அதனால் இந்தத் திரைப்படம் எங்கள் அனைவருக்கும் சிறப்பானது.” என்றார்.
நடிகர் டேனியல் கால்டாகிரோன், ” இந்தப் படத்தின் மூலம் ‘நன்றி- வணக்கம் -சென்னை’ ஆகிய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டேன். விக்ரம் எனக்கு சகோதரரைப் போன்றவர். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர். என்னுடைய வாழ்க்கையில் அவரும் ஒரு அங்கம். என்னுடைய சென்னை சகோதரர் விக்ரம். இங்கு வருகை தந்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஓராண்டு பழகி இருக்கிறேன். இந்த அனுபவம் மறக்க முடியாதது. இயக்குநர் பா. ரஞ்சித்தும் என்னைக் கவர்ந்தவர். அவருடைய கற்பனையை நாங்கள் நனவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம். ஆரத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா இந்திய சினிமாவில் சிறந்த நடிகை. அற்புதமாக நடிக்கக் கூடிய திறன் படைத்தவர். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.