
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இப்போது அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவச் செல்வத்திடம் நீட் கோச்சிங் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பிள்ளை படித்தது தமிழகத்தின் டாப் 10 பள்ளிகளில் (யார் சொன்னா – அவங்களே சொல்லிப்பாங்க) ஒன்றில்.
பதிலைக் கேட்டு நொந்தது தான் மிச்சம்.
40 நாட்கள். வேதியியல், உயிரியலில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் திரும்பத் திரும்பத் படிக்கச் சொல்லிக் கொடுத்தார்களாம்.
இயற்பியலைப் படிக்கவே தேவையில்லையாம் (நெகடிவ் மார்க்கைத் தவிர்க்க அந்த வினாக்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள்) ஆக மூன்று பாடங்களில் ஒன்றைப் படிக்கவே தேவையில்லை. மற்ற இரண்டையும் முழுவதுமாகப் படிக்கத் தேவையில்லை. ஆனாலும் மருத்துவராகி விடலாம்.
மாநிலப் பாடத்திட்டத்தின் படி மருத்துவம் சேர்வதற்கு மூன்று பாடங்களிலும் குறைந்த பட்சம் 90-95% கண்டிப்பாகத் தேவை.
ஆனாலும் நீட் மாதிரி ஒரு மானங்கெட்ட தேர்வுதான் வேண்டும் என நீட்டி முழங்கும் பிரகஸ்பதிகளை என்னன்னு சொல்லலாம்?
– பாளையத்தான்
முக்கியமான பி.கு.: அம்மாணவருக்கு மருத்துவ இடம் கிடைத்தது இட ஒதுக்கீட்டில் அல்ல. ஓப்பன் கோட்டாவில். இயற்பியல் கேள்விகளையே தவிர்த்தாலும் ஓ. கோ. வில் கிடைக்குமளவிற்கு மதிப்பெண்களை வாரி வழங்கும் (அவ)லட்சணத் தரம்தான் தான் நீட்டின் தரம்.