32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

பாளையத்தான்

6 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல் அயல் சினிமா முக்கியச் செய்தி
01/05/2026 Dinesh R 4 நிமிட வாசிப்பு

The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்

யாரோ ஒருவர் யாருக்கோ அழைத்த சில நொடி தொலைபேசி உரையாடல், உங்கள் மனதைக் கனக்கச் செய்துவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஜெர்மனியில் இருந்து வரும் அப்படிப்பட்ட ஓர் அழைப்பு, எமர்ஜென்சி ரெட் கிரெஸென்ட் கால் சென்ட்டரில் பணி புரியும் ஓமரைப் பாதிப்பது போலவே படம் பார்ப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. பின், மறுபடியும் ஒரு தொலைபேசி அழைப்பு. துப்பாக்கிச் சூடு ஒலிகளுக்கு நடுவில், ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி இறைஞ்சுகிறது. தன்னுடன் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
கூழாங்கல் விமர்சனம் OTT

கூழாங்கல் விமர்சனம்

வறண்ட நிலப்பகுதியில் பயணிப்பவர்கள், தண்ணீர் தாகத்தைத் தணிக்க கூழாங்கல்லை வாயில் வைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு நிலப்பகுதியை வேலுவும், அவனது தந்தை கணபதியும் நடந்தே கடக்கின்றனர். பிறந்த வீட்டுக்குப் போன மனைவியை அழைத்து வர, கடன் வாங்கிப் பேருந்தில் செல்லுகிறான் குடிகாரனான கணபதி. மீண்டும் திரும்புகையில், நல்ல உக்கிரமான வெயிலில் தந்தையை நடக்க வைக்கிறான் வேலு. நடப்பது வேலுவிற்கும், கடன் வாங்கிப் பேருந்தில் வரக் குறைவான வாய்ப்பைப் பெற்ற அவனது தாயிற்கும் வழக்கமானது ஒன்றாகும். ஆனால் மாப்பிள்ளை முறுக்குடன் […]

05/11/2023 Dinesh R
மாடர்ன் லவ் சென்னை விமர்சனம் OTT

மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

என்றென்றும் புதுமை மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ‘காதல்’ தான். அதாவது, காதல் என்றுமே நவீனமும் ஆகாது, பழைமையானதாகவும் மாறாது. ‘மாடர்ன் லவ்’ என்பதை, மாறி வரும் நவீன யுகத்தில், காதல் என்பது என்னவாக உள்ளது, எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககாலம் முதலே, காதலெனும் சொல்லை அகவயமான உணர்வாகவே பார்த்துப் போற்றியுள்ளனர் தமிழர்கள். போன நூற்றாண்டின் மத்தியில், அது ‘லவ்’வாக மாறியதில் இருந்து, அவ்வுணர்வு அகத்திலிருந்து புறத்திற்கு மெல்ல கசியத் தொடங்கி, […]

21/05/2023 Dinesh R
அசுரவதம் விமர்சனம் சினிமா

அசுரவதம் விமர்சனம்

தலைப்பிலேயே கதை சொல்லிவிட்டார் இயக்குநர். நாயகன் அசுரனை வதம் செய்கிறார். அசுரனுக்கு ஓர் அழைப்பு வருகிறது. அதில் பேசும் குரல், ‘இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு சாவு’ என்கிறது. அடுத்து நடக்கும் சில நிகழ்வுகளில் அசுரன் அரண்டு போயிருக்கும் நிலையில் நாயகன் அறிமுகமாகிறார். அதன் பின் நடக்கும் ஆடு புலியாட்டமே படம். முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் வந்து, அபத்தமான நகைச்சுவை, பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள் போன்றவை எதுவுமின்றி, திசை மாறாமல் ஒரே நேர்க்கோட்டில் படத்தை நகர்த்தியமைக்கு இயக்குநருக்குப் […]

08/07/2018 Dinesh R
இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம் சினிமா

இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

ஒரு கொலை, நான்கு பேர் மீது சந்தேகம் என்ற அகதா கிறிஸ்டி பாணி மர்டர் மிஸ்ட்டரி படத்தை நான் லீனியர் திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மாறன். நாயகனை அதிமனிதனாகக் காட்டுவது தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு வரும் பாரம்பரியப் பண்பாடுகளில் ஒன்று. ஆனால் அதற்கான நியாயத்தை 99% படங்கள் தந்ததேயில்லை. இதிலும் பரத்தாக வரும் அருள்நிதி சர்வ சாதாரணமாக அனைவருடனும் சண்டையிடுகிறார். போலீஸை அடித்துத் தப்பிக்கின்றார், கொலையாளியைப் பிடிக்கத் திட்டமிடுகின்றார், வியூகங்கள் […]

14/05/2018 Dinesh R
நீட் எனும் அவலட்சணம் சமூகம்

நீட் எனும் அவலட்சணம்

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இப்போது அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவச் செல்வத்திடம் நீட் கோச்சிங் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பிள்ளை படித்தது தமிழகத்தின் டாப் 10 பள்ளிகளில் (யார் சொன்னா – அவங்களே சொல்லிப்பாங்க) ஒன்றில். பதிலைக் கேட்டு நொந்தது தான் மிச்சம். 40 நாட்கள். வேதியியல், உயிரியலில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் திரும்பத் திரும்பத் படிக்கச் சொல்லிக் கொடுத்தார்களாம். இயற்பியலைப் படிக்கவே தேவையில்லையாம் (நெகடிவ் மார்க்கைத் தவிர்க்க அந்த […]

14/09/2017 Dinesh R