
வணக்கம்,

முருங்கை கீரையில் இல்லாத சத்துக்களே இல்லீங்க..சிக்கன் குனியா, டெங்கு வந்தவங்களுக்கு இருக்கும் உடம்பு, மூட்டு வலி,,, அனுபவச்சவங்களுக்குதாங்க தெரியும். அந்த வலி போக, ஒரு அருமையான, ருசியான ஒரு (மருந்து) கீரைதான் இந்த முருங்கை கீரை, வெந்து கெட்டது முருங்கை, வேகாம கெட்டது அகத்தின்னு ஒரு பழமொழி உண்டு… முருங்கை கீரையை அதிக நேரம் வேகவைக்க கூடாதுங்க..
தேவையான பொருட்கள்:
முருங்கை இலை- 1 கட்டு
பெரிய வெங்காயம் -1
மிளகாய் – 2
கறிவேப்பிலை – கைப்பிடி
தேங்காய் – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
Step 1:

முருங்கை இலையை, கோல் நீக்கி, நல்ல இலையாக எடுத்து தண்ணீரில அலசி வைக்கவும்.
Step 2:

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு வதக்கவும்.
Step 3:

முருங்கை இலை போட்டு வதக்கி விட்டு, பிறகு உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும். சிறதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும்.
Step 4:

தேங்காய் துருவல் போட்டு, ஒரு பிரட்டு பிரட்டி, எடுத்து பரிமாறவும்.

சுவையான, சத்தான முருங்கை பொரியல் தயார்.

