ராஜேஷ் ஈ மெயில் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்தில் வேளை பளு அதிகம் இருந்தது அவனுக்கு.
“ரொம்ப சிம்பிள். பார்த்த உடனே ‘ஷீ இஸ் லுக்கிங் ப்யூட்டிஃபுல்‘ அப்படின்னு சொல்ல தோனனும், ‘ஷீ இஸ் சோ ஹாட்‘ ன்னு சொல்ற மாதிரி இருக்க கூடாது” என்றான் ராஜேஷ்.
“அப்போ என் ஆளு நேஹா பார்க்க எப்படி இருக்கா?” என்று அருண் கேட்க, “வேணாம் டா சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கும்” என்று சொல்லி வீட்டுக்கு செல்ல தொடங்கினான் ராஜேஷ்.
அன்று வெள்ளிக்கிழமை, அடுத்த நாள் அலுவலகம் விடுமுறை என்பதால் நிம்மதியாக உறங்கினான்.
சிறிது நேரத்தில் நண்பரை காண சென்றிருந்த பத்மநாபன் வீடு திரும்பினார்.அவனது அம்மா நடந்ததை அவரிடம் கூற நேராக அவனை நோக்கி நடந்தார்.
அவனது கையில் இருந்த புத்தகத்தை பார்த்தார்.
அந்த புத்தகத்தின் அட்டையில் ஏதோ “ஆர்.எஸ்.அகர்வால்” என்று ஆசிரியரின் பெயர் பதிந்திருந்தது.
“நாளைக்கு ரிட்டன் டெஸ்ட்க்கு நான் வேற என்ன தான் படிக்க?” என்றான் அவரிடம்.
“டேய் அருண் நாயே, நீ இங்க என்னடா பண்ற?” என்றான் ராஜேஷ்.
“நீயா?? ம்ம்.. நீ எதுக்கு வந்தியோ அதுக்கு தான்” என்று கண் சிமிட்டினான் அருண்.
“டேய் உனக்கு தான் உன் ஆளு நேஹா இருக்காளே? பின்ன ஏன்டா வந்த.. இங்க!!”என்று ராஜேஷ் கேட்க, “அதெல்லாம் நீ கேட்க கூடாது” என்றான் அருண்.
“என்னமோ பண்ணு. எப்படியும் உனக்கு ஊத்திக்க தான் போவுது.”
இவர்கள் பேசிக்கொண்டே இருக்க, ஒரு குரல் அனைவரையும் அறைக்குள்ளே வருமாறு அழைத்தது.
பெரியவர் ஒருவர் அறையிலிருந்த மேடையில் நின்றுக் கொண்டு, ஏதோ ஆங்கிலத்தில்ரொம்ப நேரம் ஆற்றிக் கொண்டிருந்தார்.பாவம் யாருமே கவனித்தது போல்தெரியவில்லை.
தேர்வுக்குரிய வினாத் தாளும், விடையளிக்க இரண்டு வெள்ளை தாள்களும் கொடுக்கப்பட்டன.
தொடரும்…
