“வாட் தி ஹெல் இஸ் திஸ்? டோட்டல் ஹம்பக்!! டூ யூ திங்க் வீ ஹேவ் நோ ஜாப்!! ரிடிகுலஸ். நான்சென்ஸ்.
ஐ ரைஸ் எ கொஸ்டின்.. கூ கேவ் யூ பெர்மிஷன் டூ ப்ளே வித் மை ப்ரிசீயஸ் டைம்” என்று ஆங்கிலத்திலே கத்தோ கத்து என்று கத்தினான்.
எல்லாரும் சென்றதும், ‘ச்சே.. அவ்ளோ தானா?’ என்று திரும்பிப் பார்த்தான்.
மீண்டும் அந்த ‘டை ஆசாமி அறைக்கு வந்து அந்த பெரியவரைப் பார்த்து,
ராஜேஷ் மகிழ்ச்சியாக அருணை பார்த்தான். ஆனால் அருண் வேக வேகமாக எழுதிக் கொண்டிருந்தான்.
— ஹி..ஹி.. அதை நான் பொண்ணுங்க காதில் தான் சொல்லுவேன்.
அருண் இன்னும் எழுதிக் கொண்டிருந்தான். அறையில் இருந்தவர்கள் சிலர்யோசித்துக் கொண்டும், சிலர் எழுதிக் கொண்டும் இருந்தனர். பெரியவர்ராஜேஷையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. ராஜேஷ் எழுந்து விடைத்தாளை கொடுத்தான். அவர் வினாத் தாளையும் சேர்த்து வாங்கிக் கொண்டார்.
மேசை அடியில் செல்லிடப்பேசி எடுத்து, நேஹாவின் எண்ணிற்கு தொடர்புக் கொள்ள முயன்றுக் கோன்டிருந்தான் ராஜேஷ்.
மறுபுறம் அருணிடம்,
“சரி இவ்ளோ நேரம் நீ அப்படி என்ன எழுதி கிழிச்ச?” என்றான்.
முதல் கொஸ்டின்க்கு பிங்க். ஏன்னா அது “கேர்ளி (girly) கலர்“. ப்ரீத்தி ஜிந்தா கூட ஒரு விளம்பரத்துல, ‘பிங்க்கி கிட்ட வச்சுக்காத’ன்னு சொல்வாங்களே.
அப்புறம் அடுத்த கொஸ்டின். அமெரிக்கா எப்பவுமே அப்படி தான்.
மூணாவது,விவச்சயத்திற்கு திரும்பி ஒரு பசுமைப் புரட்சி வேண்டும்.
நெக்ஸ்ட், பொண்ணுங்களோட கண்ணு ரொம்ப பிடிக்கும்.
“ம்ம்.. நீ பண்றது மட்டும் நேஹாவுக்கு தெரிஞ்சா?”
“தெரிஞ்சா என்னடா பண்ணிடுவா?”
“அத.. நீயே கேளேன். லைன்ல தான் இருக்கா” என்று ராஜேஷ் தனது செல்போனை அருணிடம் நீட்டினான்.


