32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா

Dinesh R சேலம் Published: 23/09/2017 2 நிமிட வாசிப்பு Updated: 28/09/2017 சினிமா
எழுத்து அளவு:

Music director Sathya

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா, இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த மெனக்கெடலின் பொருட்டே, அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், படத்துல கமிட் ஆவதை விட, சரியான நேரத்தில் பாடல்களும், பின்னணி இசையும் தர இயலுமா என்ற யோசனையால் பல படங்களைத் தவிர்த்து விடுகிறார் சத்யா. ஆனால் இனி பெரிய ஹிரோக்களின் படங்களுக்குச் சரியான நேரத்தில் அவுட்புட் தர முடியும் என்று தனது புதிய வேகத்தின் மீது நம்பிக்கையோடு கூறுகிறார் சத்யா.

தற்போது விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடித்துக் கொண்டிருக்கும் ”பக்கா”படத்தின் இசையமைப்பில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான பகுதி திருவிழா செட்டப் இருப்பது போலவே இருக்கும். “இதுவரைக்கும் பல கரகாட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீங்க. ஆனால் பக்கா படத்தில் ஒரு கரகாட்ட பாடல் இருக்கு. அது முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தைத் தரும்” என்று சத்யா மகிழ்ச்சியுடன்.

இத்துடன் சத்யாவின் இசையில், அசுரகுலம், பயமா இருக்கு ஆகிய படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியான பயமா இருக்கு படத்தில் வரும் ‘மயிலு’ பாடல்  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி முதல் முறையாக அந்தோனிதாஸ் காதல் பாடலைப்  பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.