32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

துல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன்

Dinesh R சேலம் Published: 06/03/2018 1 நிமிட வாசிப்பு Updated: 08/03/2018 மற்றவை
எழுத்து அளவு:

VJ Rakshan

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடிக்கிறார். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்குச் சென்றிருக்கும் புதுவரவு. இது இவர் நடிக்கும் முதல் படமாகும். இந்தப் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரான்சிஸ் கண்ணூக்கடன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தனக்குக் கிடைத்த முதல் பட வாய்ப்பு பற்றி, ”நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த வேளையில் தான் எனக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச் சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரசியமான கதாபாத்திரமாகும். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிகப் பெரிய நட்சத்திரமாகவும் ஒரு ஸ்டாரின் மகனாகவும் இருந்தாலும், கொஞ்சம் கூட பந்தாவே இல்லாமல் மிக எளிமையாக பழக்கூடியவர் துல்கர் சல்மான். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார் ரக்க்ஷன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.