32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கூர்கா – லிப்ராவின் பிரம்மாண்ட வெளியீடு

Dinesh R சேலம் Published: 12/07/2019 1 நிமிட வாசிப்பு Updated: 13/07/2019 சினிமா
எழுத்து அளவு:

Gurkha-big-release

‘டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தைத் தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. முன்னணி நாயகர்கள் படங்களுக்கு நிகராக வெளியாகியிருப்பது ஒட்டு மொத்த கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இன்று காலை சிறப்பு காட்சியியே ஹவுஸ் ஃபுல் காட்சிகளோடு சிறப்பான ஓப்பனிங்கை கூர்கா படம் கொண்டிருந்தது. தனக்கான கதையை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தால் யோகி பாபுவின் கிராஃப் எகிறும் என்பது சினிமா வட்டாரத்தின் கணிப்பாக உள்ளது.

படத்தின் ட்ரைலர், டீசர் போன்றவை ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் செய்த விளம்பரமும் மக்களிடம் எளிதில் சென்றடையச் செய்துள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூர்கா’ தற்போது வசூலிலும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.