Shadow

Zee 5 இல் FIFA 2026 உலகக் கோப்பை காற்பந்து | Bhaichung Bhutia

ஜீ5 தனது தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பைக் கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்தத் தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்தியேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலகக்கோப்பை காற்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க வழிவகுக்கிறது.

பார்வை அனுபவத்திற்கு மேலும் உற்சாகம் சேர்க்கும் வகையில், இந்தியக் கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியா, FIFA உலகக் கோப்பை 2006-க்கான ஜீ5-இன் நிபுணர் குழுவில் இணைகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராகப் பரவலாக மதிக்கப்படும் பூட்டியா, தனது சிறப்பான விளையாட்டு வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் இந்தியக் காற்பந்திற்கான பங்களிப்புகள் மூலம் நாட்டில் இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். விளையாட்டைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், மிகுந்த அனுபவமும், தொடரைப் பற்றி ஆழமான பார்வைகளைப் பெற விரும்பும் ரசிகர்களுக்கு அவரை மதிப்புமிக்கக் குரலாக மாற்றுகின்றன.

நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக இணைவது குறித்து பாய்சுங் பூட்டியா, “இந்தியாவில் பல தலைமுறை காற்பந்து ரசிகர்களுக்கு FIFA உலகக் கோப்பை என்பது உத்வேகம், உயர்வான கனவுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளின் ஆதாரமாக இருந்து வருகிறது. இது விளையாட்டைத் தாண்டி மக்களை ஒரே ஆர்வத்தின் மூலம் ஒன்றிணைக்கும் ஒரு தொடர். நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக ZEE5 மற்றும் Unite8 Sports உடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகக் கோப்பையை மிகவும் சிறப்பாக்கும் கதைகள், போட்டி உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத தருணங்களுடன் ரசிகர்களை மேலும் நெருக்கமாக இணைக்கப் பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியா முழுவதும் கால்பந்து ரசிகர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நேரத்தில், விளையாட்டிற்கும் அதன் ரசிகர்களுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்” என்றார்.

FIFA உலகக் கோப்பை 2026 போட்டிகளை ஜூன் 11 முதல் ஜீ5-இல் நேரலையாகக் காணலாம்.