32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 115)
“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி சினிமா

“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தைத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் தமிழில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கிறது. படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி, “எனது அம்மா ஒரு சிறந்த திரைப்பட ரசிகை. அவர் […]

29/12/2019 Dinesh R
“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ் Songs

“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்

அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி”சிங்கிள் பாடலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது, “அனிருத் எங்களது உயிர் நண்பர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது எங்களது […]

27/12/2019 Dinesh R
சில்லுக்கருப்பட்டி விமர்சனம் சினிமா

சில்லுக்கருப்பட்டி விமர்சனம்

இந்த உலகம் அன்பிற்கானது. இந்த மனிதர்கள் அன்பால் ஆனவர்கள் அன்பிற்காக ஏங்குபவர்கள். அன்பை அதிகாமாக வைத்திருப்பவர்களும் கூட என்பதைக் கவித்துவமாகச் சொல்லிச் செல்கிறது சில்லுக்கருப்பட்டி. நான்கு கதைகளுக்குள் நான்கு வாழ்க்கையை வைத்து சில்லுக்கருப்பட்டியைத் திகட்டாமல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். குப்பை மேட்டில் கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் ஒரு சிறுவன் கையில் கிடைக்கும் வைரமோதிரமும், அந்த மோதிரத்தைத் தொலைத்த பணக்கார வீட்டுச் சிறுமியும் எப்படி நட்பாகிறார்கள் என ஒரு கதை. திருமணம் நிச்சயமாகி இருக்கும் […]

27/12/2019 Dinesh R
V1 விமர்சனம் சினிமா

V1 விமர்சனம்

விசாரணையில் துவங்கும் படம், சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விசயத்தை மீள் விசாரணை செய்வதாக முடிகிறது. லிவிங் டுகெதரில் இருக்கும் ஒரு ஜோடியில், பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவளின் காதலன், ‘கொலையை நான் தான் செய்தேன்’ என ஒப்புக் கொள்கிறான். ஆனால் கொலையை அவன் செய்யவில்லை. அந்தக் கொலையை யார் செய்தார் என்ற கேள்வியோடு படம் விரிகிறது. யார் கொலைகாரர் என்ற கேள்வியில் பயணிக்கும் படத்தில் திருப்புமுனைகள் தான் பிரதானம். V1 படத்தில் அது […]

27/12/2019 Dinesh R
ஹீரோ விமர்சனம் சினிமா

ஹீரோ விமர்சனம்

ஜென்டில் மேன் 2 என்றே படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கலாம். அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற நன்நோக்கமுடைய கொள்ளைக்காரன் சத்தியமூர்த்தியாக அர்ஜுன் வருகிறார். படத்தின் நாயகன் அவர் தான். ஸ்கூல் படிக்கும் பொழுது சக்திமான் தொடர் பார்த்து சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென ஆசைப்படுகிறான் சக்தி. வளர்ந்த பின்னும் அந்த ஆசை விடாமல் சக்தியைத் துரத்த, ஜென்டில் மேன் சத்தியமூர்த்தியின் உதவியுடன், ஒரு முகமூடி அணிந்து சூப்பர் ஹீரோவாகி விடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. தொழிலதிபர் மகாதேவாக அபய் தியோல். […]

20/12/2019 Dinesh R
தம்பி விமர்சனம் சினிமா

தம்பி விமர்சனம்

பாபநாசம் படத்தின் மூலம் நம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். பாபநாசத்தைப் போலவே தம்பியும் ஒரு த்ரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கின்றது. கதை சொல்வதில் தனது த்ரில்லர் திறமையைக் கொட்டி இருக்கிறார் ஜீத்து. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே கொட்டியுள்ளார். கதைக்கு ட்விஸ்ட் என்பது சுவாரசியமாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என்று வெறும் ட்விஸ்டாக மட்டுமே கொடுத்துக் கொண்டு இருந்தால் எப்படி? ஜீத்து, மலையாள வாசத்தோடு படத்தை எடுத்துள்ளார். […]

20/12/2019 Dinesh R
டூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம் Trailer

டூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்

விக்டோரியன் காலகட்டத்தில் நடக்கும், டாக்டர் டூலிட்டிலின் பிரபலமான கதை, புதிய கதாபாத்திரங்களுடன் பெரிய திரையில் ஜனவரி 17, 2020 அன்று வெளியாகவுள்ளது. டூலிட்டில் என்னும் புனைவுக் கதைகளின் மிக உறுதியான கதாபாத்திரங்களின் ஒன்றாகவும், மிருகங்களுடன் பேசும் திறன் கொண்ட ஒரு மனிதனின் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர் நடித்துள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் அதே தினத்தில், டூலிட்டில் திரைப்படம் இந்தியாவிலும், ஆங்க்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் ரீமேக் […]

19/12/2019 Dinesh R
புத்தி க்ளினிக் – 10 ஆம் ஆண்டு விழா மருத்துவம்

புத்தி க்ளினிக் – 10 ஆம் ஆண்டு விழா

நவம்பர் 30, புத்தி க்ளினிக்கின் 10 ஆண்டு விழாவைச் சிறப்பிக்க, சிறப்புப் பேச்சாளர்கள் திரு. அனுராக் சர்மா, லோக்சபா M.P. மற்றும் இயக்குநர் – Baidhyanath குழுமம்; ப்ரொஃபசர் பர்மீந்தர் சச்தேவ், நியூரோ சைக்காட்ரி இன்ஸ்டிட்யூட், சிட்னி, ஆஸ்திரேலியா; வேணு ஸ்ரீநிவாசன், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். உலக அரங்கில், இறப்போர் எண்ணிக்கையில் இறப்பிற்கான காரணங்களில், மாரடைப்பிற்கு அடுத்தபடியாக 9 மில்லியனில் அணிவகுத்து நிற்பது நியூரோலாஜிகல் உபாதைகளே! நியூரோலாஜிகல் மற்றும் […]

15/12/2019 Dinesh R
ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம் அயல் சினிமா

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர். எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் […]

15/12/2019 Dinesh R
மெரினா புரட்சி விமர்சனம் சினிமா

மெரினா புரட்சி விமர்சனம்

1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு 2016-ஆம் ஆண்டில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மெரினா புரட்சி தான் பெரிய போராட்டம். அப்போராட்டத்திற்கான முதல் புள்ளியை வைத்தவர்கள் யார்? அப்போரட்டத்தின் போது நடைபெற்ற அரசியல் சூதாட்டங்கள் என்ன? அப்போராட்டத்திற்கு எதிராக நின்ற இரண்டு தமிழர்கள் பற்றிய தகவல்கள் என படம் பல ஆச்சர்யம் & அதிர்ச்சியூட்டும் விஷயங்களை ஆவணப்படுத்தி இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் படமாகப் பதிவு செய்வதில் தான் இயக்குநர் எம்.எஸ் […]

15/12/2019 Dinesh R
காளிதாஸ் விமர்சனம் சினிமா

காளிதாஸ் விமர்சனம்

  காளிதாஸ் நல்ல சைக்காலஜிகல் த்ரில்லர் படம். பரத்துக்கு இந்த படம் நல்லதொரு கம்பேக்காக அமையும். அடிக்கடி மர்மமான முறையில் பெண்கள் இறந்து போகிறார்கள். அவை தற்கொலைகள் என்றும், அதற்குக் காரணம் ப்ளூவேல் கேம்தான் என பரத் நினைக்கிறார். பரத்தால் இந்த வழக்கை முடிக்க முடியாததால் சுரேஷ் மேனன் அவ்வழக்கைத் துப்பு துலக்க வருகிறார். இருவரும் சேர்ந்து அது கொலையா தற்கொலையா எனக் கண்டுபிடிப்பதுதான் கதை. இது போக, பரத் வீட்டுக்கே வராமல் போலீஸ் வேலையிலையே பிசியாக […]

15/12/2019 Dinesh R
மலையாள இயக்குநரின் “அல்லி” சினிமா

மலையாள இயக்குநரின் “அல்லி”

‘செக்ஸி துர்கா’ எனும் படத்தை இயக்கிய சனல் குமார் சசிதரனின் ‘சோலா’ எனும் மலையாளப் படத்தை, “அல்லி” என்ற பெயரில் தனது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். நகர வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியும், அவரது காதலனும் யாருக்கும் தெரியாமல், ஒரு நாள் நகரத்திற்குச் சென்று வர விரும்புகிறார்கள். அவர்களின் பயணத்தில், மூன்றாவதாய் ஒரு நபர் இணைந்து கொள்கிறார். இந்தப் பயணத்தால், பள்ளி மாணவியின் வாழ்க்கை […]

14/12/2019 Dinesh R
ஜடா விமர்சனம் சினிமா

ஜடா விமர்சனம்

    வடச்சென்னையில் செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளைப் பின்பற்றாத கால் பந்தாட்டத்தில் கலந்து கொள்ள கதிர் ஆசைப்படுகிறார். அந்த ஆட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும், அதனால் நிகழ்ந்த சில பயங்கரங்களையும் கோச் எடுத்துரைக்கிறார். அதை மறுத்துரைத்து, ‘செவன்ஸ் ஆடுவேன்’ என்பதில் உறுதியாக நிற்கிறார். அதற்கான காரணமும், முடிவில் செவன்ஸில் கதிர் அணி எப்படி வெற்றி கொண்டது என்பது தான் ஜடா. ஒரு படத்திற்குச் சிறந்த துவக்கம் மிக முக்கியம். அதை ஜடா இயக்குநர் குமரன் மிகச் சிறந்த முறையில் கையாண்டுள்ளார். நடிகர்களை […]

09/12/2019 Dinesh R
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம் சினிமா

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

இது ஒரு கற்பனைக் கதை. ஆனால், இந்தக் கதையில் காட்டப்படும் டாக்குமென்ட்ரியில் நிகழ்வது போல் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள மெத்தனமான நாடு இந்தியா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடல்நீரில் கலந்த எண்ணெயை வாளியில் அள்ளும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த அரசாங்கம், கரை ஒதுங்கும் ஆபத்தை விளைவிக்கும் குண்டை, வெடிக்கும் குண்டு என ஒத்துக் கொள்வதற்கே அதன் வெட்டி கெளரவம் இடம் கொடுக்காது. ஏன் உலகிற்கு இத்தனை குண்டுகள், இத்தனை உயிரிழுப்புகள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக […]

06/12/2019 Dinesh R
அடுத்த சாட்டை விமர்சனம் சினிமா

அடுத்த சாட்டை விமர்சனம்

தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன். அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது. சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே […]

29/11/2019 Dinesh R