32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 99)
மதுரம் விமர்சனம் OTT

மதுரம் விமர்சனம்

மதுரம் எனும் அருந்தமிழ் வார்த்தைக்கு இனிமை (Sweetness) என்று பொருள். தலைப்பிற்குத் தகுந்தாற்போல், அகமது கபீர் இயக்கிய இப்படமும் வெல்லக்கட்டியாய் மனதில் கரைகிறது. கதையின் களம் ஒரு அரசு மருத்துவமனை. அதிலும் குறிப்பாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தங்குவதற்காக உள்ள ஒரு பெரிய அறையில் தான் கதை நிகழ்கிறது. மருத்துவமனை என்றாலே, மனதிற்குள் ஓர் இருண்மை, பதற்றம் தன்னிச்சையாக உருவாகும். ஆனால் படத்தில், ரவி எனும் முதியவர், தாஜுதின் எனும் இளைஞனிடம், […]

08/01/2022 Dinesh R
முதல் நீ முடிவும் நீ – இயக்குநராகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா Movie Posters

முதல் நீ முடிவும் நீ – இயக்குநராகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாகக் கொண்ட மென்மையான டிராமா திரைப்படமான “முதல் நீ முடிவும் நீ”-ஐ, இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கியுள்ளார். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியைப் பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. சென்னையில் 90’களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. அந்த இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு […]

07/01/2022 Dinesh R
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம் சினிமா

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’. தணிக்கை கெடுபிடிகளுக்காக, தலைப்பில், பெண் என்பது ‘பென்’னாக மாறியுள்ளது. ப்ளே பாயாக சுற்றித் திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி பணம் பார்ப்பான். இல்லையெனில், எடுத்தவற்றை விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே […]

07/01/2022 Dinesh R
ஜனவரி 7 முதல் ‘அடங்காமை’ சினிமா

ஜனவரி 7 முதல் ‘அடங்காமை’

“திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும். ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை ஜனவரி 7 முதல் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் […]

06/01/2022 Dinesh R
புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர் சினிமா

புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர்

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தில், கதை நாயகனாக அல்லு அர்ஜூன் தோன்ற, அவரோடு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். ஃபஹத் ஃபாசில், தெலுங்கில் […]

05/01/2022 Dinesh R
Antim: The Final Truth விமர்சனம் சினிமா

Antim: The Final Truth விமர்சனம்

அன்திம் என்றால் இறுதி எனப் பொருள். கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால் மரணம் என்பது ஆதி உண்மை. படத்தின் கதையும் இந்த இறுதி உண்மையை மையப்படுத்தியே! விவசாய நிலத்தை விற்றுவிட்டு, புனே மார்க்கெட்டில் கூலி வேலைக்குச் செல்கின்றனர் ராகுல்யாவும், அவன் தந்தையும். குறைவான கூலி தரப்படுவதைக் கேள்வி கேட்டு, அது தகராறாகி சிறைக்குச் செல்கிறான் ராகுல்யா. அங்கிருந்து வளர்ந்து, 300 ஏக்கர்க்குச் சொந்தக்காரனாகி, புனேவின் ‘டான்’ ஆகிவிடுகிறான். எதனால் பாதிக்கப்பட்டானோ, அதையே மற்றவர்களுக்குச் செய்து தனியனாகிறான் ராகுல்யா. இன்ஸ்பெக்டர் […]

05/01/2022 Dinesh R
மின்னல் முரளி விமர்சனம் OTT

மின்னல் முரளி விமர்சனம்

இந்தியாவிற்கு சூப்பர் ஹீரோ தேவையா? எழுநூறு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிற முக்கோண கிரக அமைப்பில் ஏற்படும் மின்னல் தாக்கி, குறுக்கன்மூலா எனும் கிராமத்தில் இருக்கும் ஜெய்ஸன் வர்கீஸ், ஷிபு ஆகிய இருவருக்கு சில அதிசய சக்திகள் கிடைக்கின்றன. குறுக்கன்மூலா கிராமத்திற்கு அதனால் என்ன பாதிப்புகள் நேருகின்றன என்பதே பட்த்தின் கதை. எதார்த்த படங்களுக்குப் பெயர் போனது மல்லுவுட். அங்கிருந்து ஒரு சூப்பர் ஹீரோ படமென்பதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்களது பாணியில் இருந்து பெரிதும் விளங்காமல் சூப்பர் […]

05/01/2022 Dinesh R
கலாட்டா கல்யாணம் விமர்சனம் அயல் சினிமா

கலாட்டா கல்யாணம் விமர்சனம்

ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தனுஷ் நடித்த ஹிந்தி டப்பிங் படம். பீஹார் செல்லும் மருத்துவர் விஸ்வநாத் ஐயருக்கு, ரின்கு எனும் பெண்ணுடன் கலாட்டா ஏதுமின்றிக் கட்டாய கல்யாணம் செய்து வைத்து விடுகின்றனர் ரின்குவின் உறவினர்கள். அதன் பின் ரின்கு செய்யும் கலாட்டாவால், விஸ்வநாதினுடைய கல்யாணம் நிற்கிறது. விஸ்வநாதிற்கு ரின்கு மீது காதல் ஏற்பட, ரின்குவோ சஜ்ஜத் அலி கான் என்பவரைக் காதலிக்கிறாள். தன் மனைவி மீதான விஸ்வநாதின் காதல் வென்றதா, சஜ்ஜத் அலி கானுடனான ரின்குவின் கலாட்டா காதல் […]

04/01/2022 Dinesh R
த ஸ்டீலர் – ரோஷோமோன் பாணி திரைப்படம் சினிமா

த ஸ்டீலர் – ரோஷோமோன் பாணி திரைப்படம்

த ஸ்டீலர் எனும் படத்தை இயக்கியுள்ள ஜெகதீஸ் கண்ணா, ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். ஜகதீஸ் மேடை நாடக நடிகராகவும், “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” மற்றும் “திரைகடல்” படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நாடகக்கலை மூலம் வானியல் & விமான அறிவியலைக் கற்பிக்கும் நிறுவனமான “வாயு-சாஸ்திரா”வின் இயக்குநர் ஆவார். 2017 முதல் ஜகதீஸ் நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கதை கூறி முயற்சி செய்தவாறு இருக்க, நடிகர்கள் தேதிகள் இருந்தும் திரைக்கதவுகள் […]

04/01/2022 Dinesh R
#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே சினிமா

#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது, “என் கணவர் நடித்ததால் என்று மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் தான். படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் […]

04/01/2022 Dinesh R
“செல்ஃபோனால் கலாச்சார சீர்கேடுகள்” – இயக்குநர் பேரரசு குற்றச்சாட்டு சினிமா

“செல்ஃபோனால் கலாச்சார சீர்கேடுகள்” – இயக்குநர் பேரரசு குற்றச்சாட்டு

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு, “’பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது என்று சொன்னார்கள். சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது […]

04/01/2022 Dinesh R
‘துரத்தும் பட்டாசு பாலு’ – பசுபதி | இயக்குநர் பேரரசு சினிமா

‘துரத்தும் பட்டாசு பாலு’ – பசுபதி | இயக்குநர் பேரரசு

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, “சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும், விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று […]

04/01/2022 Dinesh R
புத்தம் புது காலை விடியாதா @ அமேசான் ப்ரைம் – ஜனவரி 14 முதல் சினிமா

புத்தம் புது காலை விடியாதா @ அமேசான் ப்ரைம் – ஜனவரி 14 முதல்

அமேசான் ப்ரைம் வீடியோவில், விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான ‘புத்தம் புது காலை விடியாதா’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இப்படத்திலுள்ள ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, இருப்பினும் அவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் நம்பிக்கையைக் கண்டறிதல் மற்றும் மனித இணைப்பின் மூலம் புதிய தொடக்கங்களைப் பெறுவதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் பற்றி இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனைச் சுற்றி அமைக்கப்பட்ட கதைகள். ஐந்து அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு, பொங்கல் பண்டிகைக் […]

04/01/2022 Dinesh R
நடப்பு அரசியலைத் தோலுரிக்கும் படத்தில் நாயகன் ப்ரஜின் சினிமா

நடப்பு அரசியலைத் தோலுரிக்கும் படத்தில் நாயகன் ப்ரஜின்

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா, ஜனவரி 4 ஆம் தேதி அன்று வளசரவாக்கத்தில் நடந்தது. இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். இந்த புதிய படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா , சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். […]

04/01/2022 Dinesh R