Shadow

பிக் பாஸ்: 3 நாள் 67 – அதே! அதே! எல்லாம் அதே! அதே!

bigg-boss-3-day-67

காலையில பாட்டு, டான்ஸ் முடிந்தவுடனே கவின்-லாஸ் பஞ்சாயத்து தான் முதலில். அதாவது தொடக்கமே அவர்களிடமிருந்துதான். அதுவும் எந்த இடத்தில் தெரியுமா? ஆம், அதே தான், கக்கூஸே தான்.

அதே கவின், அதே லாஸ், அதே நீட்டி முழக்கல், அதே வெட்கச் சிரிப்பு, அதே நீங்க, அதே நான், அதே ரிவியூ. முடியலைங்கய்யா! நேற்று வரைக்கும் எதுவா இருந்தாலும் வெளியே போய் பேசிக் கொள்ளலாம் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர், இன்றோ, ‘நான் முடிவு பண்ணிட்டேன்/ வெளிய போய் பேசறதுக்கு ஒன்னும் இல்லை’ எனச் சொல்லத் தொடங்கிட்டார். இப்பொழுது லாஸ் அந்த வாக்கியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நாட்டுப்புறக் கலைகள் வாரத்தில், இன்னிக்கு வில்லுப்பாட்டு. பயிற்சி கொடுத்து, அதை சரியாகச் செய்யறாங்களா எனப் பார்த்து, அதற்கப்புறம் இரண்டு அணியும் கான்செப்ட் பிடித்து, வில்லுப்பாட்டு நடத்திக் காட்டி, அதில் பெஸ்ட் யார் எனத் தேர்ந்தெடுத்து, உஸ்ஸ்ஸ்…. யப்பா…. தினமும் இதே தான் நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி உலகம் முழுக்க வியூவர்ஷிப் இருக்கின்ற நிகழ்ச்சியில், நாட்டுப்புறக் கலைகளை, அந்தக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை பெர்ஃபாமன்ஸ் செய்ய வைத்தது எல்லாம் பாராட்டுக்குரிய விஷயம் தான். ஆனால் அந்தக் கலைகளைக் கற்றுக் கொண்டு ஹவுஸ்மேட்ஸ் பெர்ஃபாமன்ஸ் பண்ணச் சொன்னது தான் இரிடேட்டிங் பார்ட். இன்னும் சொல்லப் போனால் இந்தக் கலைக்காகத் தங்களோட பல வருட வாழ்க்கையைத் தியாகம் செய்து, பயிற்சி எடுத்து நடத்துகின்றவர்கள் முன்னாடி, அரை மணி நேரம் கற்றுக் கொண்டு, உடனே அதைச் செய்து காட்டுவதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். இன்னும் கொஞ்சம் பெட்டராக யோசித்திருக்கலாம்.

அழிந்து வரும் கலைகள் என கமல் வந்து ஒரு விளக்கம் கொடுப்பாரென நினைக்கும் போதும், அதுக்கு ஹவுஸ்மேட்ஸ் பதில் சொல்லி, தங்களது அனுபவங்களைச் சொல்லுவாங்க என நினைக்கும் போதும் தான் துக்கம் தொண்டையை அடைக்கிறது.

நல்ல வேளையாக இன்றோடு முடிந்து. பெஸ்ட் பெர்ஃபாமர் செலக்‌ஷனுக்கு, முகின் பேரைச் சொன்னார்கள். வாரம் முழுவதற்குமான பெஸ்ட்க்கு சேரன் தேர்வானார். அதிசயம் ஆனால் உண்மை.

வொர்ஸ்ட் பெர்ஃபாமருக்கு சாண்டி தன் பேரைச் சொல்லும் போது, சேரன் அதை மறுத்துப் பேசினார். தர்ஷன், ஷெரின், கவின், லாஸ், சாண்டி இப்படி எல்லாரும் தன் பேரைச் சொல்லுங்க எனப் பேச, ஒருத்தர் மட்டும், ‘ஆக்சுவலி என்னாச்சுன்னா’ என விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். வேற யார்? வனிதாவே தான்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த வில்லுப்பாட்டு ஆரம்பித்து அங்கே நடந்து கொண்டிருந்த போது, தாமதமாக வந்தது வனிதா தான். அதைச் சொல்றதுக்கு ஒருத்தருக்கும் தைரியம் இல்லை. சோறு முக்கியம் என முடிவெடுத்து விட்டார்கள் போல.

ஆக, அவ்வளவு தான். இன்றாவது கன்டென்ட் கிடைக்கும் என நம்புவோம்.

மகாதேவன் CM