பிக் பாஸ் 3: நாள் 80 | ‘எண்ட அப்பாவைப் பாருப்பா!’ – கவினிடம் லாஸ்
எந்த இடத்தில் கவின் லாஸ் பக்கம் போனார் என யோசித்தால், கவின் போலீஸாக இருந்த டாஸ்க் தான் ஞாபகம் வருகிறது. அந்த டாஸ்கில் தான் லாஸை விசாரணைக்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்த செட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவார். கூட மீராவும் இருப்பார். அந்த அத்தியாயத்தில் லாஸ் கண்கள் மின்ன வெட்கப் புன்னகையோட கவினிடம் பேசினது இன்னும் ஞாபகம் இருக்கு. அப்ப மீரா கூட, "என்னய்யா நடக்குது இங்க” எனச் சொல்லிவிட்டுப் போனார். அந்த மொமன்ட்டில் தான் கவின் விழுந்திருக்க வேண்டும் (அங்கே லான்ல காதலி ஆவியாக இருக்க, இங்க அடுத்த ட்ராக் ஓபன் ஆகிவிட்டது). அப்பவே சாக்ஷி - கவின் இடையில் ட்ராக் ஓடிக் கொண்டிருந்தது. சாக்ஷியிடம் இல்லாத, லாஸிடம் இருந்த ஒரு விஷயம், மேலே நான் சொன்ன கண்கள் மின்ன வரும் வெட்கப் புன்னகை. கவின் - லாஸ் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது, சாக்ஷி இதை ஒரு காரணமாகக் (She is blushing) கூடச் சொன்னார். சாக்...