ஞாயிறு தொடர்ந்தது. ஷெரின் பாத்திரம் தேய்க்க, சாண்டியும் கவினும் லந்து பண்ணிக் கொண்டிருந்தனர். லானில் படுத்துக் கொண்டு, ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்’ எனப் பாடிக் கொண்டிருந்த லாஸிடம், “சாப்பிடலியா?” எனக் கேட்டு, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார் சேரன். ‘பசியில்லை’ எனச் சொன்ன லாஸ், ‘இங்க வாங்க உங்க கூட கதைக்கணும்’ எனச் சொல்ல சேரனும் வருகிறார். ஒரே வீட்டுல இருந்து கொண்டு வாரம் ஒரு தடவை தான் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு முன்னாடி கவினுக்கும் லாஸ்க்கும் அட்வைஸ் கொடுக்கும் போது பேசினார். அதற்கு முன்னாடி கமல் எபிசோட் முடிந்து இரண்டு பேரும் அழுதனர்.
‘ஒரு அரை மணி நேரம் எங்கூட பேச உனக்குத் தோனலியா? நான் பேசறது, பழகறது பொய்ன்னு உனக்குத் தோனிச்சுன்னா, எங்கிட்ட வந்து கேட்ருக்கலாமே? நீ பேச வேண்டாம்ன்னோ, பழக வேண்டாம்ன்னோ நான் சொல்லவே இல்லையே! உனக்கான சுதந்திரம் உங்கிட்ட தான் இருக்கு. நீ என்ன செய்யணும்னு நீ தான் முடிவு செய்யணும். நான் அப்பா மாதிரி தான். உங்க அப்பா இங்க இருந்தா நீ இப்படிப் பேச முடியுமா? எனக்கு உன்னைக் கேள்வி கேட்க எந்த ரைட்ஸும் இல்ல. நீ எடுக்கிற முடிவுகள், நீ நடந்துக்கற விதம் இதெல்லாம் பார்க்கும் போது, உன் எதிர்காலத்தைப் பத்தி ஒரு பயம் வருது. அவ்வளவு தான்’ என சேரன் சொல்லி முடிக்க, அப்போதைக்கு கொஞ்சம் தெளிவான மாதிரி தெரிந்தாலும், கடவுளுக்கே வெளிச்சம்.
அப்ப அடுத்த சீன் என்னவாக இருக்கும்? அதே தான். லாஸும் கவினும் பேசிக் கொள்கிறார்கள். மூகத்தைத் தூக்கி வைத்திருக்கிறார். இத்தோட முடிச்சுக்கலாம் எனச் சொல்றார் கவின்.
லாஸ் சேரனிடம் பேசுவதே கவினுக்குப் பிடிக்கவில்லை. இதை எத்தனையோ தடவை எழுதிட்டேன். இன்று லாஸ் வாயால அந்த உண்மை வந்துவிட்டது. வெளியே சாண்டியிடம் பேசும் போது இதைக் குறிப்பிட்டு சொல்றார் லாஸ்.
கவினுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்து, அவரோட ரிலேஷன்ஷிப்பை இழக்க லாஸ் தயாராக இல்லை. அந்த ஒரு காரணத்துக்காக தான் சேரன் கூட பேசுவதே இல்லை. போன வாரமும் இதே மாதிரி தான் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். நேற்று சேரன் வருத்தப்பட்டதைப் பார்த்தவுடனே, கண்டிப்பாக லாஸ் போய்ப் பேசுவாரெனத் தெரிந்து கொண்டு, நேற்றிலிருந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். கவின் டென்ஷன் ஆகின்ற மாதிரி நேற்று எதுவுமே நடக்கவில்லை. ஆனாலும் அப்படி ஒரு சீன்.
கவின் – லாஸ் ரிலேஷன்ஷிப்புக்கு சேரன் எதிரி இல்லை என கவினுக்கு யாராவது புரிய வைக்கவேண்டும். இல்ல சேரன் லாஸ் கூடப் பேசுவதே கவினுக்குப் பிடிக்கவில்லை, அதனால் பேசாதீங்க என சேரனுக்கு யாராவது எடுத்துச் சொல்லவேண்டும், அதுவரைக்கும் இது நடந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. தானாக ஒரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டு, சுற்றி இருக்கற எல்லோரையும் டார்ச்சர் பண்ணிக் கொண்டிருக்கிறார் கவின். எழுதி எழுதிச் சலிப்பாகிறது.
சேரன் நடந்து கொள்வதும், லாஸ் நடந்து கொள்வதும், ட்ராமா போல் தெரிந்தாலும், கவின் செய்வது ட்ராமா போல் தெரிவதில்லை. இப்ப நடக்கற, இதற்கு முன்னாடி நடந்த சில பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணம் கவின் மட்டும் தான். சாக்ஷி கூடப் பழகிவிட்டு, ‘அவ என்னை யூஸ் பண்றா’ என அவராக முடிவு பண்ணிக் கொண்டு, சாக்ஷியிடம் இருந்து விலக ஆரம்பித்தவுடன் தான் முதல் பிரச்சினை வந்தது. சாக்ஷியை விட்டு விலகினதுக்கு இப்ப வரைக்கும், ஒரு வலுவான காரணம் சொல்லவே இல்லை. ‘தன்னை, தன் ஃப்ரெண்ட்ஷிப்பை யூஸ் பண்றா’ எனச் சொன்னது முழுக்க முழுக்க கவினோட கற்பனை மட்டுமே. இப்பவும் தன் காதலுக்கு சேரன் குறுக்க வருகிறார் என உருண்டு புரண்டு பெர்ஃபாமன்ஸ் செய்வதும் அவரோட கற்பனை தான். அப்படி எதுவும் நடக்கவில்லை.
அடுத்து நாமினேஷன் நடந்தது. லாஸ் பேரை கூப்பிட்ட உடனே கன்ஃபெஷன் அறைக்குப் போக எழுந்தவரை, ப்ளாஸ்மா டிவி முன்னாடி நின்று நாமினேட் செய்ங்க எனச் சொன்னவுடனே எல்லோருக்கும் அதிர்ச்சி.
ஒரு வகையில் இது எல்லோருக்கும் நல்லது தான். அறைக்குள் நாமினேட் செய்துவிட்டு, உள்ளுக்குள், ‘யார் நம்ம பேரை சொல்லிருப்பாங்க’ என உள்ளுக்குள் குமைந்து கொண்டு எல்லோரையும் சந்தேகப்படறதுக்குப் பதிலாக, நேருக்கு நேர் நின்று ஒரு பெயரைச் சொல்றது, அட்லீஸ்ட் அவர்களைக் குற்றவுணர்ச்சியில் தள்ளாமல் காப்பாற்றும்.
கவின், லாஸ் தான் முதல் டார்கெட். கூடவே சேரன். நடுவில் ஷெரினும், முகினும் பன்ச்சிங் பேக்ஸ்.
இதில் சாண்டி, தர்சன் ரெண்டு பேரும், கவின் + லாஸ் பெயரைச் சொல்லும் போது அழுதுவிட்டனர். சாண்டி, கவின் இரண்டு பேரும் அழுததைப் பார்த்து வனிதா காண்டானது தேவையில்லாதது.
இந்த மாதிரி ஒரு கேம் ஷோவுக்குள் ஏற்படுகின்ற உறவுகள் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் எனச் சொல்ல முடியாது. சாக்ஷியும் ஷெரினும் நெருங்கிய தோழிகள் தான். உள்ளே இருக்கிறதால் இன்னும் சாக்ஷியைப் பற்றி நினைத்துக் கொண்டுள்ளார் ஷெரின். அதுவே வெளியே வந்ததுக்கு அப்புறம் என்னாகுமென தெரியவில்லை. ஒரு க்ரூப் ஃபார்ம் ஆகி, நாமினேட் செய்யறதுக்கு ஆள் இருக்கற வரைக்கும் அடித்து ஆடிக் கொண்டிருந்த பாய்ஸ் டீம், இப்ப தங்களுக்குள்ளேயே நாமினேட் செய்யும் சூழ்நிலை இருக்கு. இது நடக்குமெனக் கண்டிப்பாக அவர்களுக்கும் தெரியும். ரொம்ப நெருக்கமாகப் பழகினதே இப்ப ஒரு பெரிய பிரச்சினையாக வந்து நிற்கின்றது.
சாண்டி அழுததை ட்ராமா எனச் சொல்ல முடியாது. எமோஷனல் என்று ஒரு விஷயமே தனக்குக் கிடையாதென்று பேசின வனிதா, தன்னை மாதிரியே மற்றவங்களையும் நினைத்துக் கொண்டுள்ளார். நேற்று வனிதா பேசின அனைத்துமே தேவையில்லாத ஆணி.
ஒரு கருத்துச் சொன்னால், அதை மற்றவர்கள் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும், அந்த விவாதத்தில் வென்றே ஆகவேண்டும், தான் மட்டும் தான் பேசவேண்டும் என வனிதா நினைக்கின்றார். எதிர்ல இருக்கிறவர்களைப் பேசவே விடாமல், பேசினாலும் அதிலிருந்தே எதிர்கேள்வி கேட்டு, விவாதத்தை வளர்த்துக் கொண்டே போய், கடைசியில் எதைப் பற்றிப் பேசிட்டு இருக்கோம் என மறந்து போகும் அளவுக்கு பேசுகின்றார். உச்சகட்ட எரிச்சல்.
போன வாரம் நாமினேஷனில் இருந்ததால், கொஞ்சம் அடக்கி வாசித்து விட்டு, மொத்த ஹவுஸ்மேட்ஸையும் வனிதாவிடம் நிறைய மாற்றங்கள் இருக்கு எனச் சொல்லும் அளவுக்கு பெர்ஃபாமன்ஸ் பண்ணிவிட்டு, இப்ப கேப்டனான உடனே, இன்னும் இரண்டு வாரத்துக்கு நமக்குப் பிரச்சினையில்லை எனத் தெரிந்த உடனே, தன் முகமூடியெல்லாம் கழட்டி எறிந்துவிட்டு, தன் உண்மையான சுயருபத்தைக் காட்டி, ‘எனக்கு எண்டே கிடையாதுடா’ எனக் காட்டியிருக்கிறார் வனிதா. இதுவல்லவோ ட்ராமா!! இதை தர்ஷன் சுட்டிக் காட்டி கேட்கவேண்டும்.
அத்தனையும் நடந்து முடிந்ததுக்குப் பின், காத்திருந்து நாமினேஷன் ஆனவர்கள் லிஸ்ட் சொன்னார் பிக்பாஸ். ‘அவங்க நல்லா பண்றாங்களோ இல்லயோ, நீங்க நல்லா பண்றீங்க பிக் பாஸ்.’
– மகாதேவன் CM