Shadow

அயல் சினிமா

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

Songs, அயல் சினிமா, இது புதிது, காணொளிகள், சினிமா
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே.எஸ்.ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ வெகுஜன மக்களுக்கான திரைப்படம் என்பதால் இயக்குநர் பாபி கொல்லி, கூடுதல் கவனத்துடன் படைப்பை உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் திரையில் கண்டிராத வகையில் தனது தேவதையைக...
ஹனுமான் – பனி லிங்கத்திற்குள் தவம்

ஹனுமான் – பனி லிங்கத்திற்குள் தவம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மான்' படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'ஜோம்பி ரெட்டி' எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் 'ஹனு-மான்' எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட 'ஹனுமான்' படத்தின் காட்சித் துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தைப் பிரத்தியேக பார்வை மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசர், பார்வையாளர்கள் தங்களின் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத வகையில் அமைந்திருக்கிறது. நீர்வீழ்ச்சியின் மாறுபட்ட கோணத்தில் தொடங்கும் டீசரின் பின்னணியில், ஹனுமான் என்ற புராண கதாபாத்திரத்...
விஜயானந்த் – சாதனையாளரின் சரித்திரம்

விஜயானந்த் – சாதனையாளரின் சரித்திரம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
வெற்றி பெற சூட்சமங்கள் பல உள்ளன. ஆனால், வெற்றிபெற்றவனின் கதை அதிலிருந்து மாறுபட்டு வேறு மாதிரி இருக்கும். கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்துக் கொண்டு பிசினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்குச் சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி முதலிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்பட...
யசோதா விமர்சனம்

யசோதா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தங்கையின் மருத்துவச் சிகைச்சைக்காக, வாடகைத்தாயாகச் செல்கிறாள் யசோதா. உடனிருக்கும் வாடகைத்தாய்கள் திடீர் திடீரெனக் காணாமல் போக, அனுமதி மறுக்கப்பட்ட ஜோன் 2-க்குள் சென்று பல அதிர்ச்சிகரமான ரகசியங்களைப் பார்த்துவிடுகிறார். அது என்ன ரகசியம் என்பதும், அது அவருக்கு எத்தகைய ஆபத்தினைக் கொண்டு வருகிறது என்பதுதான் படத்தின் கதை. மருத்துவர் கெளதமாக உன்னி முகுந்தனும், மருத்துவர் மதுபாலாவாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். யூகிக்க முடிந்த திருப்பங்களுக்கே இவ்விரண்டு கதாபாத்திரங்களும் உதவியுள்ளனர். அவர்களது ஃப்ளாஷ்-பேக் கிளைக்கதை நன்றாக இருந்தாலும், சமந்தாவைக் கட்டிப் போட்டுவிட்டு பள்ளிக் குழந்தைகள் போல் ஒப்பிப்பது எல்லாம் திரைக்கதைக்கு இழுக்கு. தனிக்கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். நாயகிக்கான ஆக்ஷனைக் கதை தான் என்றாலும், யசோதா முழுத் திருப்தியை அளிக்கவில்லை. ஒரு ஹாலிவுட் நடிகையின் மரணம், இந்தியாவ...
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
முப்பது வயதிற்குள் தொழிலில் வெற்றியாளாரக மிளிர வேண்டுமென மிகவும் ஆர்க்னைஸ்டாக வாழ்கிறார் வக்கீல் முகுந்தன் உன்னி. வயது 36 ஆகிவிடுகிறது. தனக்கான வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்த வேலையும் போய் விட, மருத்துவமனையில் சுலபமாகப் பெரும்பணம் சம்பாதிக்கும் வக்கீல் ஒருவரைச் சந்திக்க நேரிடுகிறது. அது தான் நம்ம வழியும் என முகுந்தன் உன்னி எடுக்கும் விஸ்வரூபம்தான் படத்தின் கதை. அறமாவாது, கர்மாவாவது, தொழிலில் கொழிக்க எந்த எல்லைக்கும் செல்லும் மனிதனைப் பற்றிய கதை. Wow, he is brutally cold and bloody calculative with no empathy. இப்படி, எல்லாச் சூழலிலும் முகுந்தனின் மைண்ட்-வாய்ஸ் எதையாவது, யாரையாவது எடை போட்டுக் கொண்டே உள்ளது. அப்படியான அவரது மைண்ட்-வாய்ஸ், படத்தின் முழு நீள டார்க் காமெடிக்கு உத்திரவாதம் அளிக்கிறது. தமிழகத்தில் 40 திரையரங்குகளில் வெளியிட விருப்பப்பட்டும் 14 திரையரங்குகள் தான் கிடைத்...
‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

Songs, அயல் சினிமா, காணொளிகள், சினிமா
கர்நாடகத்தைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் தயாராகியிருக்கும் படம் 'விஜயானந்த்' ஆகும். 'ட்ரங்க்' எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்குக் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். 'ஸ்கெட்ச்' படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். சுயசரிதை படைப்பாகத் த...
தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம்

தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
சரித்திர புகழ் மிக்க சாகச போர் காவியங்களைத் திரையில் வடிப்பதென்பது ஒரு சாமான்ய செயற்பாடன்று. இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில், ஆஃப்ரிக்க தேசமான தகோமாவில் (Dahomey) 1800 களில், அந்தத் தேசத்தைக் காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி (Agojie) என பேர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை ஒரு காவியமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர். உயரிய உடை அலங்காரங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் காட்சிகள் என அதிக பொருட்செலவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘தி வுமன் கிங்’ படத்தைப் பரபரப்பாக உருவாகியுள்ளனர். ஆராய்ச்சியின் அடிப்படையில், இவ்வாண்டில் A+ Cinema Score கௌரவத்தைப் பெற்ற இரு படங்களில் இதுவும் ஒன்று. இயக்கம் முதல் இதர தொழில்நுட்பக் கலைகள் வரை அதிகபட்சமாகப் பெண்களே பங்குபெறும் ஓர் உன்னதமான தற்காப்பு போர்க் காவியமிது. Vio...
அம்மு – உணர்ச்சிகரமான த்ரில்லர் படம்

அம்மு – உணர்ச்சிகரமான த்ரில்லர் படம்

OTT, அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ப்ரைம் வீடியோ, தனது முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்முவின் உலகளாவிய பிரீமியர் அக்டோபர் 19 அன்று வெளியிடப்படும் என அறிவித்தது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக, கல்யாண் சுப்ரமணியன் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸின் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளனர், சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இப்படம், துன்பங்களை எதிர்கொண்டு பீனிக்ஸ் பறவை போல எழும் பெண்ணின் கதையான ஒரு டிராமா த்ரில்லர் படமாகும். குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்ணாக இருந்து, அவளது தன் மன மோதல்களைக் கடந்து, அவளது உள வலிமையைக் கண்டறிந்து, அவளது துஷ்பிரயோகம் செய்யும் கணவனுக்குத் திருப்பிக் கொடுப்பதற்கு, அம்மு சிலிர்ப்பான மாற்றத்தைக் காண்கிறாள். இப்படத்தில் நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி டைட்டில் ரோலில் நடிக்கிறார். இந்தியா மற்றும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற...
லைகர் விமர்சனம்

லைகர் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கலப்பு தற்காப்பு கலைகளில் (MMA) சாம்பியன்ஷிப் பெறவேண்டுமென நினைக்கிறான் ராயபுரத்தைச் சேர்ந்த லைகர். நேஷ்னல் சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்ட ஆண் சிங்கமான பலராமிற்கும், அவரது மனைவி பெண் புலியான பாலாமணிக்கும் பிறந்தவன் என்பதால் லைகர் என காரணப் பெயரைச் சூட்டுகின்றனர். மும்பையிலுள்ள JKD எனும் பயிற்சி மையத்திற்குச் சென்று பயிற்சியைத் தொடங்குகிறான். முதலில் அங்கு வேலை செய்பவனாகச் சேர்க்கப்பட்டு, பின் பயிற்சி அளிக்கிறார் அவனது பயிற்சியாளர். இடையில், லைகருக்குத் தானியாவுடன் காதல் வருகிறது. காதலி ஏமாற்ற, அதிலிருந்து மீண்டு தேசிய சாம்பியன்ஷிப்பை வென்று, சர்வதேச போட்டிக்காக அமெரிக்கா செல்கிறான். சர்வதேச சாம்பியன்ஷிப்பை அவனால் பெற முடிந்ததா என்பதே படத்தின் கதை. ‘ஆக்ஷன் ஸ்போர்ட்’ என படத்தினை வகைப்படுத்தியுள்ளனர். முதல் அரை மணி நேரம் மட்டும் அப்படி தீயாக ஆரம்பிக்கும் படம், அதே வேகத்தில் காதல் எனும் குறுக்கு...
மஹாவீர்யர் விமர்சனம்

மஹாவீர்யர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஃபேண்டசி கோர்ட் ரூம் டிராமாவைத் தயாரித்துள்ளார் நிவின் பாலி. எம். முகுந்தனின் கதையைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அப்ரீட் ஷைன். அனுமார் சிலையைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட அபூர்ணாநந்தா எனும் சாமியார் தனக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இது படத்தின் முதற்பாதி. விக்கல் நிற்காத ஸ்ரீ ருத்ர மகாவீர அக்ரசேனா மஹாராஜா, அவரது தளபதி வீரபத்திரன், தளபதியால் கடத்தப்பட்ட தேவயானி ஆகியோரது வழக்கு தற்கால நீதிமன்றத்தில் நடக்கிறது. இது படத்தின் இரண்டாம் பாதி. வழக்கம் போல், மலையாள சினிமாவில் இருந்து மற்றுமோர் அற்புதமான பரீட்சார்த்த முயற்சி. பப்ளிக் ப்ராக்சிக்யூட்டராக லாலு அலெக்ஸும், நீதிபதி விரேந்திர குமாராக சித்திக்கும் நடித்துள்ளனர். கோர்ட் ரூம் டிராமா என்பதால்,படம் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கின்றனர் கதாபாத்திரங்கள். அதை அவர்களது அனுபவம் மிகுந்த நடிப்பாலும், முக பாவனைகளாலும் சுவாரசியப்படுத்து...
தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடவுள்களைக் கொல்லும் கோர், நிழல் உருவங்களை ஏவி புது ஆஸ்கார்டின் குழந்தைகளைக் கடத்தி விடுகிறான். நிழல் உலகில் சிறைப்பட்டிருக்கும் குழந்தைகளை தோர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்க்குப் பிறகு, மார்வெலின் படங்களில் அவர்களது மேஜிக் மிஸ்ஸாகிறது. மாயாஜாலங்களை மட்டுமே நம்பிக் களங்கமிறங்குவதை மார்வெல் என்டர்டெயின்மென்ட் தவிர்க்கவேண்டும். டிசி என்டர்டெயின்மென்டில் இருந்து கிறிஸ்டியன் பேலை மார்வெல் என்டர்டெயின்மென்டின் வில்லனாக வருகிறார். தானோஸ் போலொரு வில்லனுக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் புது வில்லன்கள் யாரும் அச்சுறுத்தவோ, ஈர்க்கவோ இல்லை. கிறிஸ்டியன் பேல் போலொரு நடிகரை வில்லனாக ரசிக்கத்தக்கும் வகையில் பயன்படுத்தாதது படத்தின் குறை. ‘தோர்: ரக்னோரக்’ படத்தை இயக்கிய டைக்கா வாட்டிட்டி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முயற்சி செய்திருந...
Calcutta, I’m sorry விமர்சனம்

Calcutta, I’m sorry விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சீராகச் செல்லும் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் உலுக்கும் சம்பவம் ஏற்படும் வரை, நாம் வாழும் வாழ்வின் பொருளென்ன என்ற தத்துவார்த்த கேள்விக்குள் மனிதன் செல்லுவதில்லை. வாழப் போகும் நாட்கள் குறைவென்று நிச்சயமான பின், இருக்கும் நாட்களுக்குள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டித் துடிக்கிறான். அச்சமயத்தில், சரி, தவறு என மனம் போட்டு வைத்துள்ள எல்லாக் கணக்குகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட மனம் இளகுகிறது. கடைசி நொடி வரையும் இளகாமல் வாழ்ந்து மடிவோர் உண்டு என்ற போதிலும், மனம் இளகுவோரின் அகப்பயணம் எவ்வாறாக இருக்கும் என்பதே இந்த ஆங்கிலப் படத்தின் மையக்கரு.  குன்னூரில் இசை ஆசிரியராகப் பணி புரிபவர் அமாண்டா ரைட். கணவரையும் மகளையும் பிரிந்து இசையே வாழ்க்கையென வாழும் ஆங்கிலோ இந்தியரான அமாண்டாவிற்கு தண்டுவட மரப்பு நோய் (Multiple Sclerosis) கண்டறியப்படுகிறது. வாழ்வின் நிலையாமையையும், விர...
Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம்

Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மார்வெல் படங்கள் வெளியாகும் நாட்கள் உலகெங்கும் திருவிழா கோலம் பூண ஆரம்பித்துவிட்டது. ஒரே படத்திலேயே, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மக்கள் மனதைக் கவர்ந்துவிட்டார். பெனிடிக்ட் கம்பர்பேட்சின் நடிப்பும் அதற்கொரு பிரதானமான காரணம். பல்லண்டத்திற்கிடையே பயணிக்கும் திறனுள்ள அமெரிக்கா சாவேஸ் எனும் இளம்பெண்ணை, ஒரு ஆக்டோபஸ் மிருகம் துரத்தி வருகிறது. வேற பிரபஞ்சத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்துவிடுகிறார். அமெரிக்கா எனும் அந்தப் பெண், நாம் வாழும் பிரபஞ்சத்திற்கான (Earth 616) பாதையைத் திறந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அம்மிருகத்தைக் கொன்று அமெரிக்கா சாவேஸைக் காப்பாற்றுகிறார். மந்திரங்களில் பரீச்சயமான வாண்டா மேக்ஸிமாஃப் –இடம் உதவி கோருகிறார் டாக்டர். ஆனால், ஆக்டோபஸ் மிருகத்தை அனுப்பியதே ஸ்கார்லட் விட்ச் ஆக மாறிவிடும் வாண்...