32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

அயல் சினிமா

438 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 13 / 30
செய்திகள் வரிசை (பக்கம் 13)
ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும் அயல் சினிமா

ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும்

வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில், ஆஸ்கர் விருதினைப் பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண் – உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்தக் காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை இந்த வேனிட்டி ஃபேர் எனும் யூட்யூப் சேனலில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொளி என்ற சாதனையும் படைத்திருக்கிறது. உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருப்பதால் உலக நட்சத்திரமாக ஜொலிக்கும் ராம்சரண் மற்றும் அவரது அன்பும் அழகும் […]

21/04/2023 Dinesh R
நியூயார்க் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ அயல் சினிமா

நியூயார்க் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேசத் திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படம் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. இதன் மூலம் ‘ஆதி புருஷ்’ தனது உலகளாவிய அரங்கேற்றத்தைத் தொடங்குகிறது. இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், நட்சத்திர நடிகர் பிரபாஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’, டிரிபெகா சர்வதேசத் திரைப்பட விழாவில் பிரத்தியேகமாகத் திரையிடப்படுவதன் மூலம் இந்திய சினிமா, உலக அரங்கில் தன்னுடைய அடுத்த கட்ட முன்னகர்வை […]

19/04/2023 Dinesh R
தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் படப்பிடிப்பு முடிந்தது அயல் சினிமா

தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் படப்பிடிப்பு முடிந்தது

பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஹனுமான்’ படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்புத் தளத்தின் காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காகவும், படத்தின் தரத்திற்காகவும் […]

19/04/2023 Dinesh R
பெல்ஃபாஸ்ட் டூ ஐஸ்லாந்து – இயற்கையின் பேரழகு அயல் சினிமா

பெல்ஃபாஸ்ட் டூ ஐஸ்லாந்து – இயற்கையின் பேரழகு

ஒரு வசீகரமான திருடன் எட்கினும், அவனது சகாக்களும், தொலைந்து போன நினைவுச்சின்னத்தை மீட்டெடுக்க ஒரு திருட்டை மேற்கொள்கின்றனர். நண்பரகளாக இருந்தவரின் துரோகத்தால், அந்தத் திருட்டின் பொழுது சிக்கிக் கொள்கின்றனர் எட்கினும், அவனது பலசாலியான தோழியான கோல்காவும். மேசையில் விளையாடப்படும் ‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் உள்ளரங்க விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது படத்தின் திரைக்கதை. பகடை உருட்டி விளையாடப்படும் விளையாட்டுகளின் அப்பாடக்கர் என ‘டன்ஜன்ஸ் & ட்ராகன்ஸ்’ விளையாட்டைச் சொல்லலாம். இந்த விளையாட்டைத் திரைக்குக் கொண்டு வருவது […]

07/04/2023 Dinesh R
இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன் Trailer

இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர், 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம், 10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் வரிசை படங்கள், […]

05/04/2023 Dinesh R
Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம் அயல் சினிமா

Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் டேபிள் டாப் விளையாட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட படமிது. டன்ஜியன் என்றால் பாதாளச் சிறை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்த இந்த ஆங்கிலச் சொல், ஃப்ரெஞ்சு சொல்லின் மூலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘அரண்மனையின் கோபுரம்’ என்ற பொருளிலேயே உபயோகப்படுத்தியுள்ளனர். காலப்போக்கில், பாதாளச் சிறையைக் குறிக்கும் சொல்லாக டன்ஜியன் மாறியுள்ளது. டிராகன் என்பது ஐரோப்பியத் தொன்மவியலில் வரும் நெருப்பைக் கக்கும் அமானுஷ்ய விலங்காகும். இறந்துவிடும் தன் மனைவியின் உயிரை […]

31/03/2023 Dinesh R
ஜான் விக் 4 விமர்சனம் அயல் சினிமா

ஜான் விக் 4 விமர்சனம்

ரஷ்யத் தொன்மவியலின்படி, பாபா யாகா என்பவர் யாராலும் கொல்லப்பட முடியாத மிகவும் ஆபத்தான மனிதர். அவரது பூர்வீகமும் எவருக்கும் தெரியாது, அவரைப் புதைத்தாலும் அவர் மீண்டும் வருவார் என்பது தொன்மவியலின் நம்பிக்கை. அத்தகைய புதிரான குணாதிசயங்களை ஜான் விக்கும் பெற்றிருப்பதால், பாபா யாகா என குற்றவியல் உலகால் அச்சத்துடன் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட அதி பயங்கரமான ஜான் விக்கின் தலைக்கு, 20 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 40 மில்லியன் டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல் […]

25/03/2023 Dinesh R
Shazam! Fury of the Gods விமர்சனம் அயல் சினிமா

Shazam! Fury of the Gods விமர்சனம்

டிசி காமிக்ஸின் ஷசாம் எனும் படம், 2019 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பில்லி பேட்ஸன் எனும் பதின்ம வயது சிறுவனுக்கு எதிர்பாராதவிதமாக, சூப்பர் ஹீரோவாகும் மந்திர சக்தி கிடைக்கிறது. பதின்ம வயது மனத்துடன் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தைக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மையக்கரு. முதற்பாகத்தில், தத்தெடுக்கப்படும் புதிய குடும்பத்தில் தன்னை ஓர் அங்கமகாக இணைத்துக் கொள்ளாமல், தன் பெற்றோரைத் தேடியவண்ணமே இருப்பான் பில்லி. இப்படத்தில், ‘குடும்பம்தான் எல்லாம்’ என […]

18/03/2023 Dinesh R
65 விமர்சனம் அயல் சினிமா

65 விமர்சனம்

ஆறரை கோடி வருடங்களுக்கு முன், சோமாரிஸ் எனும் கிரகத்தில் இருந்து, ஒரு விண்கப்பல் கிளம்புகிறது. பயணத்தின் போது சிறுகோளின் (Asteroid) துகள் மோதி, மனித இனம் தோன்றியிராத பூமியில் வந்து விழுகிறது அக்கப்பல். கப்பலைச் செலுத்தி வந்த மில்ஸும், கடுங்குளிரியல் உறக்கத்தில் (Cryogenics sleep) இருக்கும் கோவா எனும் சிறுமி மட்டும் உயிர் பிழைக்கின்றனர். கடுங்குளிரியல் உறக்கத்தில் இருக்கும் மற்ற பயணிகள் அனைவரும் இறந்து விடுகின்றனர். மில்ஸும் கோவாவும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் இருவரும் அந்தக் […]

11/03/2023 Dinesh R
இன் கார் விமர்சனம் அயல் சினிமா

இன் கார் விமர்சனம்

ஒரு நாளைக்கு இந்தியாவில் சுமார் 100 பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்ற புள்ளி விவரத்தினைச் சொல்கிறார் இயக்குநர் ஹர்ஷ் வர்தன். அதில் பல கடத்தல்கள் வெளியில் வருவதே இல்லை. அரை அடி தூரத்தில், பெண் போலீஸ் அமர்ந்திருக்கும்போது, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் சாக்ஷி குலாட்டி எனும் இளம்பெண்ணைக் கடத்தி விடுகின்றனர். பகலில் நடக்கும் ஒரு கடத்தலையே கூட, அது கடத்தல்தான் என மூளை உள்வாங்கிச் செயற்படும் முன் கார் சிட்டாய்ப் பறந்து விடுகிறது. […]

03/03/2023 Dinesh R
சாத்விக் வர்மாவின் ‘சிக்லெட்ஸ்’ அயல் சினிமா

சாத்விக் வர்மாவின் ‘சிக்லெட்ஸ்’

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா. அவர் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ‘திறந்திடு சிசேம்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. எஸ். எஸ். பி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா […]

24/02/2023 Dinesh R
இன் கார் – காருக்குள் நிகழும் பெண்ணின் மனவேதனை அயல் சினிமா

இன் கார் – காருக்குள் நிகழும் பெண்ணின் மனவேதனை

இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்தக் கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் […]

02/02/2023 Dinesh R
இரட்டா – இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ் Trailer

இரட்டா – இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள “இரட்டா” படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பல சஸ்பென்ஸ்களைக் கொண்டுள்ளது இந்த த்ரில்லர் படம். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஜோஜு, இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தமிழ் – மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜோஜு ஜார்ஜுக்குச் சொந்தமான ‘அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ்’, மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் […]

21/01/2023 Dinesh R
அவதார் 2 விமர்சனம் அயல் சினிமா

அவதார் 2 விமர்சனம்

பலவருட கனவும், பதிமூன்று வருட உழைப்பும், அவதார் 2 ஆகத் திரை கண்டுள்ளது. ஒரு முழுமையான படமாகப் பார்த்தால் எந்தவிதத்திலும் குறைவில்லாத திரைப்படம் அவதார். எந்த ஒரு தருணத்திலும் நம் கண்களைத் திரையை விட்டு அகலச் செய்யாத காட்சிகள். உணர்வுபூர்வமான பல தருணங்கள் என்று சிற்சில மாயாஜாலங்கள் நிகழாமல் இல்லை. ஆனாலும், அவதார் ஒன்றுடன் சடுதியில் நிகழ்ந்துவிட்ட இணைப்பு அவதார் இரண்டில் நடக்கவில்லை என்பது மட்டுமே உள்ளுக்குள் இருக்கும் ஒரே உறுத்தல். மூன்றே கால் மணி நேரப்படத்தில், […]

18/12/2022 Dinesh R
மாளவிகா மோகனனின் ‘கிறிஸ்டி’ Movie Posters

மாளவிகா மோகனனின் ‘கிறிஸ்டி’

‘பேட்ட’, ‘மாஸ்டர்’ படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் மேத்யூ தாமஸும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிறிஸ்டி’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, நடிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். […]

15/12/2022 Dinesh R