Shadow

அயல் சினிமா

MUDDY திரை விமர்சனம்

MUDDY திரை விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சகதியும் சேறும் நிரம்பிய கரடுமுரடான பாதையில், விறுவிறுப்பான கார் சேஸிங் (chasing) காட்சிகளை ரசிப்பவர்களுக்கான ஆக்ஷன் திரைப்படம். மட்டி ரேஸை (mud race) மையமாகக் கொண்டு, இந்திய சினிமாவில் வந்துள்ள முதல் படமிது. பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ்  பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் மட்டி. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் மலையாளப் படமான இது, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அண்ணன் தம்பி இருவர், ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். தம்பி கல்லூரியில் வில்லனை ஒரு விவகாரத்தில் சீண்ட, அந்த வில்லன், 'உன்னை மட்டி ரேஸில் தோற்கடித்து எப்படி அழிக்கிறேன் பார்!' என சபதம் எடுக்கிறார். இந்த நிலையில் தம்பியைக் காக்க அண்ணன் வருகிறார். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து வில்லனை மட்டி ரேசில் ஜெயித்து எப்...
ஸ்பைடர்-மேன் 2021: பல்லண்டத்தில் இருந்து வரும் சூப்பர் வில்லன்கள்

ஸ்பைடர்-மேன் 2021: பல்லண்டத்தில் இருந்து வரும் சூப்பர் வில்லன்கள்

அயல் சினிமா, திரைத் துளி
உலகமெங்கும் எதிர்பார்ப்பைக் குவித்த ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் (Spider-Man No Way Home) திரைப்படத்தின் டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முண்டியடித்ததால், திரையரங்கு இணையதளங்கள் முடங்கியது. மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (Avengers: Endgame) திரைப்படத்திற்குப் பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களைப் பித்துப்பிடித்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் திரைப்படம். உலகம் முழுதும் 2021 டிசம்பர் 17 அன்று வெளியாகும் இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பால், டிக்கெட் புக் செய்யும் இணையதளங்களே முடங்கும் நிலை உண்டாகியுள்ளது. மார்வல் திரையுலகத்தின் சூப்பர் ஹீரோ ஸ்பைடர்-மேன், மூன்றாம் பாக கதையாக உருவாகியுள்ளது இத்திரைப்படம். இப்படத்தில் டாம் ஹாலண்ட் சூப்பர் ஹிரோ ஸ்பைடர்மேனாகவும், ...
The Great Indian Kitchen விமர்சனம்

The Great Indian Kitchen விமர்சனம்

OTT, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ எனும் மலையாளப் படத்தை ஓடிடி தளங்களான அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் முதலியவை வாங்க மறுத்த நிலையில், நீஸ்ட்ரீம் எனும் தளத்தில், அப்படம் ஜனவரி 21, 2021, அன்று வெளியானது. ஒரு படத்தை வாங்குவதும் வாங்காததும், ஓடிடி தளங்களது தனிப்பட்ட நிர்வாக முடிவே எனினும், அவை வாங்க மறுப்பதற்குச் சுட்டிக் காட்டிய ஒரு காரணமே இப்படத்தின் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வசனம், ‘உச்சநீதி மன்றத்தினுடைய சபரிமலைத் தீர்ப்பு என்பது பெண்களின் கோயில் நுழைவு பற்றியது மட்டுமில்லை, அது பெண்களின் விடுதலையைக் கூறும் பிரகடனம்’ என்றொரு வசனம் வருகிறது. படத்தின் மையக்கருவாகக் கூட இல்லாமல், வலதுசாரி நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் ஒரே ஒரு வசனம் வந்தாலும் கூட, அப்படைப்பு சர்ச்சைக்குள்ளாகும் போக்கு ஆரோக்கியமற்றது. வணிக சமரசமற்ற கலை முயற்சிகளை மேற்கொள்வதில் மலையாளத் திரையுலகம் முன்னோடியாகத் திகழ்கிறது...
லீலா (2016) விமர்சனம்

லீலா (2016) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக எடுப்பது சாதாரண விஷயமன்று. பெரும்பாலும் இலக்கியம், படைப்பாளியின் கட்டுக்கடங்காச் சுதந்திரத்தையும், எல்லையற்ற கற்பனையையும் சார்ந்து இருக்கக்கூடியது. மேலும் அங்கு ஆல்-இன்-ஆல் படைப்பாளி மட்டுமே க்ரியேட்டராக இருக்கிறார். ஆனால் திரைப்படம் சமூகம், சென்சார், காட்சிப்படுத்தும் வலி, பட்ஜெட் என பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நூற்றுக்கணக்கான மனிதர்களின் கூட்டுச் செயற்பாட்டுடன் இயங்கும் பெருஞ்செயல். இதனாலேயே இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்குவது பெரும்பாலும் தோல்வியில் முடிந்திருக்கிறது. கேரள எழுத்தாளர் உண்ணி. ஆர் அவர்கள் எழுதிய சிறுகதை தான் லீலா. ஒருவகையில் இந்தக் கதையை மனித மனதின் அறம், சமூக ஒழுக்கம் குறித்த சர்ரியலிச விமர்சனம் என்றும் கொள்ளலாம். காட்சிப்படுத்துவதற்கு மிகவும் சிக்கலான கதையைத் திரைப்படமாக எடுக்கத் துணிந்ததற்கே கேரளத் திரைத்துறையின் முக்கிய இயக்குனர...
Portrait of a Lady on Fire விமர்சனம்

Portrait of a Lady on Fire விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மனிதனுக்கு சுதந்திரமும், கலையும் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் படம் ஒரு கவிதையாக உணர்த்துகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் (2019) பெற்றது உட்பட, பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது இந்த ஃப்ரெஞ்ச் மொழிப்படம். ஒரு பெண் இயக்குநரின் படம், கான்ஸ்-இன் Queer Palm விருதினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். கோமாட்டி ஹெலூயிஸை ஓவியமாக வரைய, பிரட்டானி தீவுக்கூட்டங்களில் உள்ள ஒரு தீவு ஒன்றுக்கு வரவழைக்கப்படுகிறாள் ஓவியை மரியேன். அந்த ஓவியத்தை மிலனிலுள்ள கோமான் ஒருவனுக்கு அனுப்பித் திருமணத்திற்குச் சம்மதம் பெறுவதே ஹெலூயிஸினுடைய அம்மாவின் திட்டம். திருமணத்தில் விருப்பமில்லாத ஹெலோயிஸ் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறாள். ஆக, அவளுக்குத் தெரியாமலேயே, ஹெலூயிஸை ஓவியமாக வரைவதுதான் மரியேனுக்கு முன்னுள்ள சவால். அப்பொழுது அவர்கள் இருவருக்கிடையே ஏற்படும் காதல்தான் படத்தின் கதை. புன்னகையை இழந்துவிட்ட ...
சூஃபியும் சுஜாதயும் விமர்சனம்

சூஃபியும் சுஜாதயும் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு சூஃபிக்கும், சுஜாதா எனும் வாய் பேசா முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. “சூஃபிகள், ஆடவும் பாடவும் தெரிந்த துறவிகள்” என்பார் சுஜாதாவின் பாட்டி. சூஃபியை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராகப் பார்ப்பார் சுஜாதாவின் அப்பா. உண்மையில், சூஃபிகள் மதங்களைக் கடந்தவர்கள். சூஃபிகளை, இறைச் சிந்தனையில் வாழும் ஞானிகள் என்று சொல்லலாம். பொதுவாகத் துறவு மனநிலை கொண்டவர்களாக இருப்பார்களே அன்றி, கட்டாயமாகத் துறவியாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. மதத்தை மீறிக் கலைகளின் வாயிலாக இறைவனின் ஏகத்துவத்தை விசாலப்படுத்துவதே சூஃபிகளின் தன்மை. கலையின் வழியே எதிலும் கடவுளைக் காணும் எவருமே சூஃபிகள்தான். படம் மிகச் சிறந்த பேரானுபவத்தை அளிக்கிறது. வீல் சேரில் அமர்ந்திருக்கும் அபூப் இசைக்க, சுஜாதா நடனமாடும் காட்சி மிக அற்புதமாக உள்ளது. அக்காட்சியைப் பின்னுக்குத் தள்ளும் வகையில், சூஃபியின் கட்டை விரல் நடனம் அசத்துகிறது. இசை...
தப்பட் விமர்சனம்

தப்பட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. 'தப்பட்' என்றால் "அறை (slap)" என்று பொருள். 'ஆர்டிகிள் 15' எனும் அதி அற்புதமான படத்தை இயக்கிய அனுபவ் சின்ஹாவின் படம். அதுவும் குடும்ப வன்முறையைப் (Domestic violence) பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. மாமியார் கொடுமை, வரதட்சணைக்காகத் துன்புறுத்தப்படுவது, வசை மாரி பொழிதல், கையை நீட்டி அடித்தல் என்ற பிசிக்கல் & வெர்பல் அப்யூஸ்கள் மட்டும் டொமஸ்டிக் வயலன்ஸில் வராது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குடும்ப நலனெனக் காரணம் காட்டி ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது போன்றவையும் டொமஸ்டிக் வயலன்ஸ்தான். "நான் கார் ஓட்டக் கத்துக்கவா?" - டாப்சி. "முதலில் ஒழுங்கா பராத்தா போடக் கத்துக்க?" - டாப்சியின் கணவன். இந்த உதாசீனத்த...
Extraction விமர்சனம்

Extraction விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்திய போதைக் கடத்தல் மன்னன் சிறையில் அடைபட்டிருக்க, அவனது மகன் ஓவி மஹாஜனைக் கடத்தி விடுகிறான் பங்களாதேஷ் கடத்தல் மன்னன் அமிர். ஓவியைப் பணயத் தொகை தராமல் விடுவிக்க, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கூலிப்படை பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவில் இறங்குகிறது. அடைபட்ட பையனை, ஆஸ்திரேலியக் கூலிப்படையைச் சேர்ந்த நாயகன் டைலர் வெளியில் கொண்டு வந்த பிறகு, ஆஸ்திரேலியக் குழு யாரோ ஒருவனால் தாக்கப்படுகிறது. மறுபுறம், ஓவியை மீட்டுக் கொல்ல, அமிரின் ஆட்களும், பங்களாதேஷ் இராணுவமும் டாக்காவை முழுவதும் மூடித் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர். இந்தக் குழப்பங்களை எல்லாம் மீறி, ஓவியைப் பத்திரமாக இந்தியா கொண்டு வந்து டைலர் சேர்க்கிறானா என்பதுதான் படத்தின் கதை. மார்வல் படங்களுக்கு ஸ்டன்ட் டைரக்டராகப் பணியாற்றிய சாம் ஹார்க்ரேவ் இயக்கியுள்ள முதல் படம். தோர் ஆக நடித்த க்றிஸ் ஹெம்ஸ்வொர்த், டைலர் ரேக்-காக நடித்துள்ளா...
The Insult (2017) விமர்சனம்

The Insult (2017) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
“மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்பது எழுத்தாளர் ஜி.நாகராஜனுடைய புகழ்பெற்ற வாசகம். யாராவது சாலையில் விழுந்து கடுமையான காயம்பட்டால், “நல்ல அடி" என்போம் இல்லையா? அது போல 'மகத்தான சல்லிப்பயல்' என்கிறார். நம் எல்லோருடைய மனதிலும் ஈகோ எனும் பெட்ரோலில் தோய்ந்த பஞ்சுப்பொதி ஈரத்துடனே இருக்கிறது. அந்த பெட்ரோல் பஞ்சுப்பொதி பற்றிக்கொண்டு எரிய அவமானம் அல்லது புறக்கணிப்பு எனும் சிறு-தீப்பொறி கூடத் தேவையில்லை, அந்த தீப்பொறியின் வெம்மையே கூடப் போதுமானதாக இருக்கிறது. அப்படிப் பற்றும் தீ, தன்னையும் எரித்து, சுற்றியிருப்பவரையும் கருகச் செய்கிறது. அப்படிப்பட்ட ஈகோவால் தானும் கஷ்டப்பட்டு, சுற்றி இருப்பவர்களையும் சங்கடமாக்கும் இரண்டு நபர்களைப் பற்றிய லெபானியப் படமே The Insult (2017). இந்தப் படத்தைப் பார்க்கும் போது, சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட அய்யப்பனும் கோஷியும் ஞாபகம் வருவதைத் தவிர்க்...
Birbal Trilogy: Case 1 Finding Vajramuni விமர்சனம்

Birbal Trilogy: Case 1 Finding Vajramuni விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சமீபமாகக் கன்னடத்தில் வெளிவந்த சிறந்த இன்வஸ்டிகேடிவ் த்ரில்லர் என தைரியமாக இப்படத்தினைச் சொல்லலாம். கடைசி வரைக்கும் யார் உண்மையான கொலையாளி எனத் தீர்மானிக்க முடியாமல் யோசிக்க வைப்பதிலேயே இயக்குநர் வெற்றி பெற்றுவிடுகிறார். ஒரு கொலை நடக்கிறது, அதனைப் பற்றிச் சொன்னவன் தான் குற்றவாளி என காவல்துறையினர் கைது செய்கின்றனர். நீதிமன்றத்தில் தீர்ப்பாகி எட்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளி வருகிறான். இதனிடையில் ஒரு சட்ட நிறுவனம் சமுதாயத்தில் நற்பெயர் எடுக்க வேண்டி, ஏழை மக்களது வழக்குகளை இலவசமாக நடத்த முடிவெடுக்கிறது. அப்பொழுது அங்கு வேலைக்குச் சேரும் மகேஷ் தாஸ் என்பவன் இந்த வழக்கை எடுக்கிறான். எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த குற்றம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமான சாட்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில் மகேஷ் தாஸ் பூஜ்ஜியத்தில் இருந்து வழக்கைத் தொடங்குகிறான். படம் பார்...
Babel (2006) விமர்சனம்

Babel (2006) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
புகழ் பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர்,அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு (Alejandro Iñárritu) தயாரித்து, இயக்கிய திரைப்படம். இதே இயக்குநர், “மரணம்” என்ற தீமை மையமாக கொண்டு இயக்கிய 'அமரோஸ் ஃபெரோஸ்', '21 கிராம்ஸ்' ஆகிய படங்களின் தொடர்ச்சி ட்ரையாலஜியாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. பேபல் படம் ஹைப்பர்-லிங்க் திரைக்கதையைக் கொண்டது. அதாவது, சம்மந்தமே இல்லாத நாலைந்து கிளைக் கதைகளை க்ளைமாக்ஸில் ஏதோ ஒரு வகையில் லிங்க் செய்து ஒற்றைக்கதையாக மாற்றும் திரைக்கதை வடிவத்தை ஹைப்பர்-லிங்க் என்பார்கள். போன வருடம் தமிழில் வந்த சூப்பர் டீலக்ஸ் போல! திரைப்படம், பைபிளில் கூறப்படும் ஒரு நாட்டார் கதையுடன் துவங்குகிறது. முன்பெல்லாம் மனிதர்கள் உலகம் முழுக்க ஒரே மொழியைப் பேசிக் கொண்டிருந்தனர். நோவாவின் வழித் தோன்றலான பாபிலோன் என்பவர் கடவுள் வாழும் சொர்க்கத்துக்கு மனிதர்கள் எல்லாரும் போவதற்காகப் பூமியிலிருந்து வானத்...
Untraceable (2008) விமர்சனம்

Untraceable (2008) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடந்த ஒரு வாரம் பத்து நாட்களாக, ஃபேஸ்புக்கில் பெரியாரியம், பெண்ணியம், பாலியல் சுதந்திரம் குறித்து இரண்டு முற்போக்கு குழுக்கள் விவாதம் செய்து வருகின்றன. பரஸ்பரம் குற்றம் சாட்டியும் வருகின்றன. சில அந்தரங்கப் பேச்சுகள், வீடியோக்கள் என விவாதம் தனிப்பட்ட தாக்குதலைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த இரண்டு குழு பற்றியும் எனக்குப் பெரிய அக்கறை இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் தந்தை பெரியாரைத் தனது துணைக்குக் கூப்பிட்டுக் கொள்கிறார்கள். அது தான் வருத்தம். பாவம் பெரியார். இந்த இரண்டு குழுவைச் சார்ந்தவர்கள் இதற்கு முன்பும் பெண்ணியம், சுதந்திரம், பகுத்தறிவு என பல தலைப்புகளில் மிகச் சிறப்பான பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் கவனிக்கப்படாத அந்தப் பதிவுகளை விட, பெண்ணுடல், ஆபாசப் பேச்சு என பதிவுகள் வந்ததும் அங்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும் பின்னூட்டங்களும் குவிந்து வருகிறது. அங்கு லைக், ...
The tale of the Princess Kaguya (2013) விமர்சனம்

The tale of the Princess Kaguya (2013) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜப்பான் நாட்டுப்புறக் கதை ஒன்றை அழகான அனிமே (Anime – Japanese animation) படமாக உருவாக்கியுள்ளார் இசாவோ டகஹாட்டா (Isao Takahata). இது அவர் இயக்கிய கடைசிப்படமும் ஆகும். சிறிய வயதில் அவர் படித்த, ‘ஒரு முங்கீல் வெட்டியின் கதை’ என்ற நாட்டுப்புறக் கதைக்கு அனிமேஷன் உருவம் கொடுக்க வேண்டுமென்பது அவரது ஆசை. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அனிமேஷன் துறையில், கதாசிரியராகத் தயாரிப்பாளராக இயக்குநராகப் பணியாற்றிய டகஹாட்டா, தனது இளம் வயது கனவிற்கு அவரது 78 வது வயதில் உயிர் கொடுத்தார். வழக்கம் போல், மலையில் மூங்கிலை வெட்டிக் கொண்டு திரும்பும் பொழுது, ஓர் அதிசயமான வெளிச்சம் மூங்கிலின் அடித்தண்டில் இருந்து வருவதைக் காணுகிறார் ஒரு மூங்கில் வெட்டி. அருகில் சென்று பார்க்கும் பொழுது, ஒரு மூங்கில் குருத்து பிரகாசமாய் வளர்ந்து மலருகிறது. அந்த மலர்ந்த மூங்கில் குருத்தில் இருந்து, உள்ளங்கைக்குள் அடங்கி விடுமளவு ...
தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'திருட்டுப்பொருளும் சாட்சியும்' என்பதே தலைப்பின் பொருள். ஆங்கிலத்தில், Angle in Details என்று சொல்லுவார்கள். மிக எளிமையான விஷயத்தைக் காட்சிப்படுத்துவது, அதனைப் புரிந்துகொள்வதில் விரிவாக ஆழம் செல்லச் செல்ல தெய்வீகம் வெளிப்படுகிறது. எளிமையே பிரம்மாண்டம். அதனைக் காணவும் மற்றவருக்கு அதே அனுபவத்தைக் கடத்தவும் சற்றே பெரிய கண்கள் தேவைப்படுகிறது. அது தனிக் கலை. இந்தக் கலை பெரும்பாலான கேரள திரைப்படக் கலைஞர்களுக்குப் பிறப்பிலேயே வாய்த்திருக்கிறது எனலாம். மிக மிக எளிமையான கதையை கூட மனதில் நீங்காமல் இருப்பது போல காட்சிப்படுத்துவதில் கில்லாடிகள். ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் திலீஷ் போத்தன் எடுத்த, 'மகேஷின்டே பிரதிகாரம்' என்ற படம் மிக நன்றாக ஓடியது (தமிழில் கூட அப்படம், உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் நிமிர் ஆக மறு உருவாக்கம் செய்யப்பட்டது). அதே இயக்குநர் ஃபஹத்துடன் இணைந்து, 'தொண்டிமுதலும் த்ரிக்சா...
தி ஆஃப்ரிக்கன் டாக்டர் விமர்சனம்

தி ஆஃப்ரிக்கன் டாக்டர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆதரிக்க யாருமில்லாத அநாதையான காங்கோ நாட்டைச் சேர்ந்த கருப்பரான சியோலோ ஜன்டோகோ, தனது கடினமான உழைப்பால், ஃபிரான்ஸில் மருத்துவப் படிப்பை முடிக்கிறார். காங்கோவின் சர்வாதிகாரியான மொபட்டூவிற்கு பெர்ஸ்னல் மருத்துவராகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கிறது. ஊழலில் திளைக்கும் ரத்த வரலாறு கொண்ட ஜனாதிபதியிடம் பணி புரிய விரும்பாமல், ஃபிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெறுவதற்காக, மார்லி-கோமான்ட் எனும் கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரியச் சம்மதம் தெரிவிக்கிறார். ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குடியேறப் போகிறோம் எனத் தவறுதலாக நினைத்துவிடும் சியோலோவின் குடும்பத்திற்கு, சதா குளிர்ந்து கொண்டே இருக்கும் புதிய சூழல் பிடிக்காமல் போகிறது. கருப்பர்களையே கண்டிராத அந்தக் கிராமத்து மக்கள், சியோலோவை மருத்துவராக ஏற்றுக் கொள்ளாமல், அவரை மந்திரவாதியாகப் பாவித்து ஒதுக்குகின்றனர். உடல்நலம் சுகமில்லை என ஒரு பண்ணையிலிருந்து ஃபோன் வர, ...