32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

அயல் சினிமா

438 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 8 / 30
செய்திகள் வரிசை (பக்கம் 8)
“பெண்குயின் டூ ஜீப்ரா” – இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் அயல் சினிமா

“பெண்குயின் டூ ஜீப்ரா” – இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராகக் கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது ஜீப்ரா திரைப்படம். சென்னையில், பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர் படக்குழுவினர். தயாரிப்பாளர் தினேஷ், “பத்திரிகை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக் கதை […]

27/11/2024 Dinesh R
கிளாடியேட்டர் II விமர்சனம் அயல் சினிமா

கிளாடியேட்டர் II விமர்சனம்

கிபி 200. கிளாடியேட்டர் படத்தின் நாயகனான மேக்ஸிமஸ் டெசிமஸ் மெரிடியஸ் இறந்து 16 வருடங்களுக்குப் பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது. அகேஷியஸின் தலைமையிலான ரோமப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாகும், நுமிடியாவின் கடைசி நகரத்தை, அதன் தலைவனான ஜுகர்தாவுடன் இணைந்து பாதுக்காகப் ஹேனோவும், அவரது மனைவி அரிஷத்தும் போரிடுகின்றனர். போரில் அரிஷத் கொல்லப்பட, ஜுகர்தாவும் ஹேனோவும் அடிமைகளாக ஆஸ்டியாக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அகேஷியஸைக் கொல்லத் துடிக்கும் ஹேனோவின் ஆத்திரத்தைக் கண்டுகொள்ளும் மேக்ரினஸ், ஹேனோவை கிளாடியேட்டராகக் களத்தில் இறக்குகிறார். மேக்ஸிமஸ் உதிர்க்கும் […]

16/11/2024 Dinesh R
நிரபராதியென அறிவிக்கப்பட்ட நிவின் பாலி அயல் சினிமா

நிரபராதியென அறிவிக்கப்பட்ட நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும், அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். […]

06/11/2024 Dinesh R
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ அயல் சினிமா

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’

ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு ‘லவ் அண்ட் வார்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

15/09/2024 Dinesh R
ஹிட் 3 – புதிய லுக்கில் நானி அயல் சினிமா

ஹிட் 3 – புதிய லுக்கில் நானி

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் ‘ஹிட் : மூன்றாவது வழக்கு’ ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தனது 32 ஆவது படமாக ‘ஹிட்: மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case)’ எனும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா […]

15/09/2024 Dinesh R
ARM விமர்சனம் அயல் சினிமா

ARM விமர்சனம்

ARM: Ajayante Randam Moshanam – அஜயனின் இரண்டாம் திருட்டு நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மூவரின் கதை. களரி வீரனான கேலு, வீரனின் மகனான திருடன் மணியன், திருடனின் பேரனான அஜயன் என படத்தில் மூன்று நாயகன்கள், மூன்று குணாதிசயங்கள், மூன்று காதல்கள், மூன்று கதைகள் உள்ளன. காலத்தை வாகனமாகக் கொண்ட ஓர் அருவ பிரபஞ்ச பயணியின் குரலில் படம் தொடங்குகிறது. விண்கல்லால் செய்யப்பட்ட விளக்கைத் தனது வீரத்தின் பரிசாகக் கொண்டு வருகிறார் கேலு. காதலுக்காகவும், துரோகத்திற்குப் […]

13/09/2024 Dinesh R
சாய் துர்கா தேஜ் | அம்மா அநாதை இல்லமும் – ஆந்திர வெள்ளப் பெருக்கும் அயல் சினிமா

சாய் துர்கா தேஜ் | அம்மா அநாதை இல்லமும் – ஆந்திர வெள்ளப் பெருக்கும்

சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், அவரது மாமா ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போலவே சமூக அக்கறை மிக்க உதவிகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இரு தெலுங்கு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் சாய் துர்கா தேஜ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை அவர் வழங்கியுள்ளார். கூடுதலாக, அவர் மேலும் […]

12/09/2024 Dinesh R
ஷிவ ராஜ்குமார் வெளியிட்ட ‘சுப்ரமணியா’ போஸ்டர் அயல் சினிமா

ஷிவ ராஜ்குமார் வெளியிட்ட ‘சுப்ரமணியா’ போஸ்டர்

பிரபல வில்லன் நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். விநாயக […]

09/09/2024 Dinesh R
Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார் அயல் சினிமா

Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார்

கன்னடத் திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ ரமேஷ் அரவிந்த் மற்றும் ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும் தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி […]

09/09/2024 Dinesh R
அறிமுகமாகிறார் ஜூனியர் பாலய்யா | நந்தமூரி மோக்ஷக்ஞ்யா அயல் சினிமா

அறிமுகமாகிறார் ஜூனியர் பாலய்யா | நந்தமூரி மோக்ஷக்ஞ்யா

நந்தமூரி குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நந்தமூரி தாரக ராமராவின் பேரனும், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமூரி மோக்ஷக்ஞ்யா, பரபரப்பான பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மாவின், ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து, தனது SLV சினிமாஸின் சார்பில் சுதாகர் செருக்குரி மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறார். எம் தேஜஸ்வினி நந்தமூரி இப்படத்தை வழங்குகிறார். நமது புராணங்களில் உள்ள ஒரு […]

09/09/2024 Dinesh R
நிவின் பாலி | ஜோடிக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக வழக்கு அயல் சினிமா

நிவின் பாலி | ஜோடிக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக வழக்கு

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன், அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த ‘பார்மா’ எனும் இணைய […]

09/09/2024 Dinesh R
நானி | Hunter’s Command | HIT: The 3rd Case Teaser

நானி | Hunter’s Command | HIT: The 3rd Case

நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யா’ஸ் சாட்டர்டே திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களைத் தந்திருக்கும் நானி, அடுத்ததாக அவரது 32 ஆவது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்குத் தயாராகிறார். நானியின் பாத்திரத்தைப் பற்றிய ஸ்னீக் பீக் மூலம், அவரது அடுத்த படமான ஹிட் கேஸ் 3 பட அறிவிப்பு, செப்டம்பர் 5 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. […]

09/09/2024 Dinesh R
ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல் Songs

ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

மார்டின் படத்தின் முதல் சிங்கிளான “ஜீவன் நீயே” பாடல் வெளியாகியுள்ளது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர், பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப் பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான […]

04/09/2024 Dinesh R
அத்வே – VFX பிரம்மாண்டத்தில் சுப்ரமண்யா அயல் சினிமா

அத்வே – VFX பிரம்மாண்டத்தில் சுப்ரமண்யா

பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாகக் களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி, அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் “சுப்ரமண்யா” படத்தின் […]

04/09/2024 Dinesh R
BRB | எதிர்காலத்தில் நடக்கும் பில்லா ரங்கா பாட்ஷா அயல் சினிமா

BRB | எதிர்காலத்தில் நடக்கும் பில்லா ரங்கா பாட்ஷா

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப் பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற விக்ராந்த் ரோணா படத்திற்குப் பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை பிளாக்பஸ்டர் ஹனுமான் படத் தயாரிப்பாளர்களான கே. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு […]

02/09/2024 Dinesh R