32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

அயல் சினிமா

438 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 10 / 30
செய்திகள் வரிசை (பக்கம் 10)
Kya Lafda | டபுள் ஐஸ்மார்ட் – பாடல் அயல் சினிமா

Kya Lafda | டபுள் ஐஸ்மார்ட் – பாடல்

உஸ்தாத் ராம் பொத்தினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர் ஆகியோரின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமான்டிக் மெலடி வெளியாகியுள்ளது. க்யா லஃப்டா பாடலைக் கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்படியாகத் துள்ளல் இசையை வழங்கியுள்ளார் மணி ஷர்மா. இந்தப் பாடலில் சரியாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘ஹூக் லைன்’ பாடலின் உற்சாகத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.  தனுஞ்சய் சீபனா, சிந்துஜா சீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர். இவர்களின் குரலுக்கு ஸ்ரீ […]

29/07/2024 Dinesh R
பிரபாஸ் | ஆயிரம் கோடிகளில் வசூலாகும் புகழ்மிகு இந்திய நடிகர் அயல் சினிமா

பிரபாஸ் | ஆயிரம் கோடிகளில் வசூலாகும் புகழ்மிகு இந்திய நடிகர்

கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது, ​​​​ பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும். சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரம்மாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது. மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, […]

27/07/2024 Dinesh R
Deadpool & Wolverine விமர்சனம் அயல் சினிமா

Deadpool & Wolverine விமர்சனம்

வானத்தின் கீழ் இருக்கும் எதுவுமே புனிதமில்லை என சகலத்தையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கும் டெட் பூல், இம்முறை பன்னண்டத்தில் (Multi-verse) இருக்கும் அத்தனையையுமே கேலிக்கும் கேள்விக்கும் கிண்டலுக்கும் உரியவை தான் என டாப் கியரில் கலாய்த்துள்ளார். முத்தாய்ப்பாக டெட்பூல் படத்தின் முன்னாள் உரிமையாளரான ’21st Century Fox’-ஐ சகட்டுமேனிக்குக் கலாய்த்துத் தள்ளுகிறார் டெட்பூல். ஆங்கில வசனங்களின் சாறு குறையாதவண்ணம் தமிழ் டப்பிங்கையும் மிகக் கலகலப்பாக எழுதியுள்ளனர். சூப்பர் ஹீரோ நகைச்சுவைப் படம் என்றாலும் A சான்றிதழ் பெற்ற […]

26/07/2024 Dinesh R
சிவண்ணா 131 – பிறந்தநாள் ஒருங்குகூடல் அயல் சினிமா

சிவண்ணா 131 – பிறந்தநாள் ஒருங்குகூடல்

ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131ஆவது படத்திற்கான படப்பிடிப்பை பிரம்மாண்டமாகத் துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது. சிவன்னாவின் 131ஆவது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது. இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் படத்தொகுப்பாளர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர். […]

24/07/2024 Dinesh R
வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர் Trailer

வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர்

மூன்று பாகங்கள் கொண்ட ‘வெனம்’ படத்தொடரின் கடைசிப் படமான, “வெனம்: தி ளாஸ்ட் டான்ஸ்” அக்டோபர் 25 அன்று வெளியாகிறது. மரணம் வரை பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்துள்ள எடி ப்ரோக்கையும் வெனத்தையும், பூமியைச் சேர்ந்தவர்களும், வேற்றுலக சிம்பயாட்களும் வேட்டையாடுகிறார்கள். இந்தியாவில், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.  ஆங்கில ட்ரெய்லர்: https://youtu.be/MbIoY50ZOxg

12/06/2024 Dinesh R
தேவரா | பயத்தின் கடவுள் | அநிருத் Songs

தேவரா | பயத்தின் கடவுள் | அநிருத்

மாஸ் நாயகன் என்டிஆரின் ‘தேவரா’ திரைப்படத்தில் இருந்து அநிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் ‘ஃபியர் சாங்’ (fear song) தற்போது வெளியாகியுள்ளது. மாஸ் நாயகன் என்டிஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் உலக அளவில் பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு […]

19/05/2024 Dinesh R
The Garfield Movie விமர்சனம் அயல் சினிமா

The Garfield Movie விமர்சனம்

திங்கட்கிழமையை வெறுக்கும், உணவை மிக மிக விரும்பும், எவரையும் மதிக்காத புசுபுசு புஷ்டி பூனையாகிய கார்ஃபீல்ட், 15 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையைக் காண்கிறது. ஜிம் டேவிஸ் என்பவரால் 1976 இல், காமிக் துண்டாக அறிமுகமான ஆரஞ்சு நிற கார்ஃபீல்ட் பூனை, உலகளவில் பல செய்தித்தாள்களில் பரவலாக இடம்பெற்று, கின்னஸ் சாதனை பெற்றுள்ளது. கார்ஃபீல்ட் உமிழும் புத்திசாலித்தனமான பகடிகள் தான் அதன் சிறப்பே! இப்படத்தில் அதை அழகாகக் கொண்டு வந்துள்ளனர். சாலையில் தனித்து விடப்பட்டு பரிதாபமாக இருக்கும் பூனையை […]

19/05/2024 Dinesh R
மே 4 – இயக்குநர்கள் தினம் கொண்டாட்டம் அயல் சினிமா

மே 4 – இயக்குநர்கள் தினம் கொண்டாட்டம்

உலகிலேயே அதிக திரைப்படங்களை இயக்கி உலக சாதனை படைத்த பெருமைமிகு தெலுங்கு இயக்குநர் தாசரி நாராயண ராவ் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், மே 4 ஆம் தேதியை “இயக்குநர்கள் தின”மாக அறிவித்து, தெலுங்கு இயக்குநர்கள் கடந்த ஐந்து வருடமாகக் கொண்டாடிவருகின்றனர். தெலுங்கு இயக்குநர்கள் சங்கத்திற்கு நலநிதி வழங்குவதே முக்கிய நோக்கம் என்றும், இந்த ஆண்டு “இயக்குநர்கள் தின” விழாவை வரலாறு காணாத வகையில் நடத்தவுள்ளதாகவும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பா. வீர சங்கர் […]

23/04/2024 Dinesh R
சாண்டல்வுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் அயல் சினிமா

சாண்டல்வுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக ‘துர்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் […]

23/04/2024 Inbaaraja
மைதான் விமர்சனம் அயல் சினிமா

மைதான் விமர்சனம்

தலைப்பையொட்டிப் படத்தின் 90 சதவிகிதத்திற்கு மேலான காட்சிகள் கால்பந்து மைதானத்திலேயே நடக்கின்றன. ஃபின்லாந்தில் நடக்கும் 1952 ஹெல்ஸின்கி ஒலிம்பிக்ஸில் தொடங்கும் படம், 1962 இல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசியப் போட்டிகளில் படம் முடிகிறது. இந்தப் பத்து ஆண்டுகளில், கால்பந்து பயிற்றுநர் (Football Coach) சையத் அப்துல் ரஹீமின் தலைமையில் இந்தியக் கால்பந்து அணி மேற்கொண்ட பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா. யுகோஸ்லோவியாவுடனான படுதோல்விக்குப் பின், இந்தியக் கால்பந்து அணியின் […]

11/04/2024 Dinesh R
Godzilla X King: The New Empire விமர்சனம் அயல் சினிமா

Godzilla X King: The New Empire விமர்சனம்

பூமியின் மேற்பரப்புக்குக் கீழுள்ள பூமியின் அடியாழத்திலிருந்து (Hollow Earth) புது அச்சுறுத்தல் முளைத்திட, கிங் காங்கும், காட்ஸில்லாவும் இணைந்து தடுக்கின்றனர். பூமிக்கு மேற்பரப்பில் இருக்கும் காட்ஸில்லா, டைட்டன்கள் எனும் இராட்சச ஐந்துகளிடம் இருந்து உலகைக் காப்பாற்றிக் கொண்டு ரோம் நகரத்து கொலசியத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளது. கிங் காங்கோ, பூமியின் அடியாழத்தில் வேட்டையாடிக் கொண்டு தன் காட்டு வாழ்க்கையில் மகிழ்வாக இருக்கிறது. இந்நிலையில், பூமியின் அடியாழத்தில் இருந்து வினோதமான சமிக்ஞைகள் வருகின்றன. அதே சமயம், வாய் பேசமுடியாத […]

29/03/2024 Dinesh R
Ram Charan | Mythri Movie Makers | Director Sukumar அயல் சினிமா

Ram Charan | Mythri Movie Makers | Director Sukumar

In a ground-breaking collaboration, renowned director Sukumar and global sensation Ram Charan are set to team up for an epic cinematic venture. Following the monumental success of SS Rajamouli’s film ‘RRR’, Ram Charan’s alliance with Sukumar marks another milestone in the actor’s illustrious career. While Ram Charan became a global icon after the blockbuster success of […]

27/03/2024 Dinesh R
‘மதுரமு கதா’ பாடல் | ஃபேமிலி ஸ்டார் Songs

‘மதுரமு கதா’ பாடல் | ஃபேமிலி ஸ்டார்

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் “தி ஃபேமிலி ஸ்டார்” திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘மதுரமு கதா’ பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள ‘மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்யூனிட்டி’யில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, ‘மை ஹோம் ஜூவல்’ குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோலி […]

26/03/2024 Dinesh R
ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் #RC16 அயல் சினிமா

ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் #RC16

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் த்ரில்லர் திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ராம்சரண் – இப்படத்தைத் தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் ‘RC16’ எனும் திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. […]

20/03/2024 Dinesh R
Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம் அயல் சினிமா

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் […]

18/03/2024 Dinesh R