Shadow

சினிமா

வா வாத்தியார் | சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய வைரல் வீடியோ

வா வாத்தியார் | சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய வைரல் வீடியோ

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடலான, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலைத் தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடியுள்ளர். இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்...
அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

சினிமா, திரை விமர்சனம்
சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’ ஆகும். விபின் ராதாகிருஷ்ணன் இயக்க, கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் படத்தில் அங்கம்மாள் என்ற மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீதா கைலாசம். கீதா கைலாசத்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணி, இளைய மகன் சரண் ஆவர். அடிப்படையில் ரொம்பவே பிடிவாத குணத்தை உடைய கீதா கைலாசம் அழுத்தமான, தீர்க்கமான பெண்மணி. பரணி, அவரது மனைவி, சரண் என எல்லோருமே கீதா கைலாசத்தை எதிர்த்துப் பேசப் பயப்படுபவர்கள். பெரிதாகப் படிக்காத பரணி விவசாயம் செய்ய, இளைய மகன் சரணை மருத்துவம் படிக்க வைக்கிறார். நகரத்தில் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்க, பெண்ணின் தந்தையும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்கிறார். பெண் வீட்டாரைச் சந்திக்கும்போது தங்களைக் குறைவாக எடை...
Indian Penal Law (IPL) விமர்சனம்

Indian Penal Law (IPL) விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரேசிங் ஸ்டார் TTF வாசனை முதன்மை நாயகனாக முன்னிறுத்தி, உண்மைச் சம்பவங்களின் இன்ஸ்பயராகப்பட்டு உருவாகியுள்ளது IPL திரைப்படம். எளிய குடும்பப் பின்னணி கொண்டவர் கிஷோர். மனைவி அபிராமி, ஒரு தங்கை ஒரு மகள் என வாழ்ந்து வரும் அவர் கால் டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டி வருகிறார். அவரது தங்கை வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் போது, டெலிவரி பையனான TTF வாசன் மீது காதல் கொள்கிறார். TTF வாசனும், "பொண்ணு நல்லாயிருக்காளே!" எனக் காதலிக்கத் தொடங்குகிறார். இச்சூழலில் காவல்துறை ஆய்வாளரான போஸ் வெங்கட் ஒரு இளைஞனைச் சிரையில் அடித்துக் கொன்றுவிடுகிறார். கொன்றதற்கான காரணம் அந்த இளைஞன் ஃபோனிலிருந்த வீடியோ. அந்த வீடியோ என்ன, அந்த வீடியோ சர்ச்சைக்குள் கிஷோர் குடும்பம் எப்படி வந்தது, கிஷோர் குடும்பத்தை TTF எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. கதையின் நாயகனாக இல்லாமல் கதையில் ஒரு நாயகனாக வலம் வருகிறார் T...
தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review

தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
என்றுமே மென் சோக காதல் கதைகள், மனதைப் பாதிக்கும் காதல் கதைகள் தான் காலம் கடந்து நிற்கும். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மூன்று படங்களுமே காதல் கதைகள்தான். முந்தைய இரண்டு காதல் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்திருக்கின்றன. அந்தக் கூட்டணியின் மூன்றாவது படைப்பான “தேரே இஷ்க் மே” படத்தில், க்ரித்தி சனோன் நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதைப்படி, தனுஷ் எப்போதும் கோபத்திலேயே இருக்கும் இளைஞன். வன்முறை அவன் வாழ்வில் ப்ர் அங்கமாகவே மாறிப் போயிருக்கிறது. க்ரித்தி சனோன், தனுஷ் படிக்கும் அதே பல்கலைக்கழகத்தில் சைக்காலஜியில் ஆய்வுக்கட்டுரை எழுதி வருகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாகப் பயணிக்கும் சூழல் வருகிறது. தனுஷ் க்ரித்தி மீது காதல் கொள்கிறார். க்ரித்திக்குக் காதல் இருந்தாலும் அவரின் கோபமும் வன்முறையும் பிடி...
ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

சினிமா, திரை விமர்சனம்
டிராகுலா பாண்டியன் எனும் பெரிய ரெளடி, ரீட்டாவின் வீட்டில் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். டிராகுலா பாண்டியனின் பிணத்தைக் கைப்பற்ற நினைக்கும் மார்டின் குழு, டிராகுலா பாண்டியனின் தலைக்காகக் காத்திருக்கும் ஆந்திர ரெட்டி, தந்தைக்காக எதையும் எந்த எல்லைக்கும் போய்ச் செய்யும் அவரது மகன் டிராகுலா பாபி, ரீட்டாவைப் பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் ஒரு காவலதிகாரி ஆகியோரிடமிருந்து ரீட்டா எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. சீட்டாவாகப் பேசிக் கொண்டே இருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் தொல்லை பொறுக்க முடியாமல், அவரைக் குளியல் அறையில் வைத்துப் பூட்டி விடுகின்றனர். பூட்டப்பட்ட குளியலறையில் இருந்து ரெடின் கிங்ஸ்லி வெளியேறுவது ரசிக்க வைக்கிறது. ப்ரோக்கர் லல்லுவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தியின் மாடுலேஷன் அவரேற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. கொடூரமான சைக்கோ டிராக...
தாஷமக்கான் – ராப் இசைக்கலைஞராக ஹரிஷ் கல்யாண்

தாஷமக்கான் – ராப் இசைக்கலைஞராக ஹரிஷ் கல்யாண்

சினிமா, திரைச் செய்தி
இடா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் தின்க் ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வடச் சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்” ஆகும். மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டது. இந்நிகழ்வினில் பேசிய ஹரிஷ் கல்யாண், “தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழ்நாட்டிற்...
ரிவால்வர் ரீட்டா – ஒரு டார்க் காமெடி படம்

ரிவால்வர் ரீட்டா – ஒரு டார்க் காமெடி படம்

சினிமா, திரைச் செய்தி
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், தி ரூட் நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK. சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகரும், ரேடியோ ஜாக்கியுமான பிளேடு சங்கர், “இது என் நண்பன் படம். கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட், மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன ச...
ஆக்காட்டி திரைப்படம் – Best Film Recognition Award | IFFI 2025

ஆக்காட்டி திரைப்படம் – Best Film Recognition Award | IFFI 2025

சினிமா, திரைத் துளி
WAVES Film Bazaar பிரிவின் கீழ், 56 ஆவது சர்வதேச கோவா திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான அங்கீகார விருதை ‘ஆக்காட்டி’ திரைப்படம் பெற்றுள்ளது. படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணை தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெற்றனர். தென் தமிழகக் கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமுதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குநர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்படத் திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்...
A Beautiful Breakup – ஓர் அமானுஷ்யமான காதல் கதை

A Beautiful Breakup – ஓர் அமானுஷ்யமான காதல் கதை

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து, அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்யக் காதல் கதையான 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா. தக்ஷ் மற்றும் மாடில்டா பாஜர் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுப் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று, இது வரை 1.7 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா, 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' படத்திற்குத் தனது காலத்தால் அழியாத திறமையின் மூலம் சிம்பொனி இசையை வழங்கியுள்ளார். மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்ட இந்த இசை, படத்திற்கு ஆழத்தையும் வலுவையும் சேர்த்து...
ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapaadanum review

ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapaadanum review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திருமலை புரொடக்ஷன் தயாரிப்பில், சுகவனம் எழுதி இயக்கியிருக்கும் படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' ஆகும். கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் ஓர் உலக சினிமாவாக உருவாகியுள்ளது இந்தப் படம். சிறுவயதில் கிணற்றில் விழுந்த தன் மகன் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை ஒண்டிமுனிக்கு நேர்ந்து விடுகிறார் நல்லபாடன். ஆனால் இரு பண்ணாடிகளின் அதிகார மோதலால் பல வருடங்களாக அந்த ஒண்டிமுனி கோவில் திருவிழா நடக்காமலே இருக்கிறது. காலம் உருண்டோட அந்த மகன் இளைஞனாகிப் படித்து முடித்து வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்த நேர்ந்து விட்ட ஆட்டை ஒண்டிமுனிக்குப் படைப்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் அந்த ஆட்டை ஒண்டிமுனிக்கு படைத்தாரா, அந்தப் பண்ணாடிகள் மோதல் ஊரை எப்படி பாதிக்கிறது, திருவிழா நடந்ததா என்பதே மீதிக்கதை. பல படங...
நிர்வாகம் பொறுப்பல்ல – மோசடி பேர்வழிகளிடம் உஷார்

நிர்வாகம் பொறுப்பல்ல – மோசடி பேர்வழிகளிடம் உஷார்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும் நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இவ்விழாவில் பேசிய நடிகர் பிளாக் பாண்டி, ''நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்குக் கட்டணம் செ...
மாஸ்க் விமர்சனம் | Mask review

மாஸ்க் விமர்சனம் | Mask review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பிளடி பெக்கர், கிஸ் தோல்விக்குப் பிறகு கவின் நடிப்பில் வெளியாகியுள்ள படம். ஆண்ட்ரியா ஜெரெமையா, ருஹானி ஷர்மா நடிக்க, அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஆண்ட்ரியாவும் தயாரித்திருக்கிறார். நாயகன் கவின் ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ். வேவு பார்ப்பது, தகவல்களைத் திரட்டி தருவது உட்பட எல்லா வேலைகளையும் ஒரு சின்ன குழுவை வைத்துப் பார்த்து வருகிறார். செய்கிற வேலையில் காசு தான் முக்கியம் எனக் கறாராக இருக்கும் கவின், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். அதே சமயம் மகளிருக்குக் கஷ்டம் என்றால் கொஞ்சம் மனம் இர(ற)ங்கிப் போகிறவரும் கூட. இன்னொரு புறம் குழந்தைகள் நல காப்பகம் நடத்துபவராக வெளியுலகுக்குக் காட்டிக் கொள்ளும் ஆண்ட்ரியா, அரசியல்வாதி, கோடீஸ்வரர்களுக்கு இளம்பெண்களை அனுப்பும் வேலையையும் செய்கிறார். அரசியல்வாதி பவன் தேர்தலுக்காகக் கொடுக்கும் 440 கோடி பணத்தைப்...
SISU: Road to Revenge விமர்சனம்

SISU: Road to Revenge விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபின்னிஷ் மொழியில், சிசு (SISU) என்றால், தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் முயன்று கொண்டிருப்பது என்பது போல் பொருள்படும். மன உறுதி, நெஞ்சுரம், முடிக்கவே முடியாத அசாத்தியமான செயல்களை முடிக்கக் கூடிய விடாமுயற்சி என்பனவும் சிசு எனும் சொல்லுக்கான அர்த்தங்களாகக் கொள்ளலாம். ஆட்டாமி கோர்பி, அத்தகைய ‘சிசு’வைத் தனக்குள்ளே கொண்டவர். அவர் போரால், குடும்பம் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகத் தனித்து விடப்பட்டவர். சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கரேலியாவில் தன் குடும்பம் வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார். அம்மர வீட்டைப் பலகை பலகையாகப் பிரித்தெடுத்து, ஃபின்லாந்தில் அமைதியானதொரு சூழலில் மீண்டும் அவர்கள் ஞாபகமாக வீட்டை அமைக்க விரும்புகிறார் ஆட்டாமி கோர்பி. ஆனால், அவரைக் கொல்ல நினைக்கின்றது சோவியத்தின் உளவு அமைப்பான KGB. அதற்காக சைபீரியன் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் போர் குற்றவாளியாகக் ...
தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga review

தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சென்னைக் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருவர் கொல்லப்படுகிறார். அவ்வழக்கை விசாரிக்கும் மகுடபதி, கிடைக்கும் துப்புகளைக் கொண்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் செல்கிறார். அங்கே நடந்த ஒரு சிறுமியின் மரணத்திற்கும், கொலை வழக்கிற்கும், அக்குடியிருப்பைக் கட்டிய கோடீஸ்வரரான வரதராஜனுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகிக்கிறார் மகுடபதி. ஆனால் வரதராஜனும் கொல்லப்பட, நடக்கும் யாவற்றிற்கும் யார் காரணமென விரிகிறது படம். ஆட்டிசச் சிறுமியாக நடித்துள்ள பேபி அனிகா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கனத்தைக் கூட்ட உதவியுள்ளார். ஆசிரியை மீராவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மீராவின் தற்காப்புக் கலை மாஸ்டராக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தீயவரை அப்படியே விட்டு வைக்கக் கூடாதெனப் பழிவாங்கத் துணியும் நாயகியாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஐஸ்வர்யா ராஜேஷின் பாத்திரம். அவரது காதலர் ஆதியாக பிரவீன் ராஜா நடித்துள்ள...
யெல்லோ விமர்சனம் | Yellow review

யெல்லோ விமர்சனம் | Yellow review

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் வன்முறை படங்களே மேலோங்கி இருக்கும் சூழலில் அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே வெளியாகும் மென்மையான ஃபீல் குட் படங்கள் ரசிகர்கள் மனதை வருடிச் செல்வதோடு மிகப்பெரிய வெற்றியையும் பெறுகின்றன. மிகச் சமீபத்திய உதாரணங்களாக லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களைச் சொல்லலாம். அந்த வகையில் ஒரு பெண்ணின் உணர்வுகளை மையப்படுத்தி இந்தியில் வெளியான குயின் படத்தை போல தமிழில் வெளியாகியிருக்கும் படம் தான் “யெல்லோ”வாகும். பிக் பாஸ் பிரபலம் “அராத்தி” பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த்துள்ளார். ரோடு ட்ராமா வகைமையைச் சேர்ந்த இந்தப் படத்தில் காதல் தோல்வி, சொந்த வாழ்க்கையில் அப்பாவின் திடீர் உடல்நலக் குறைவு, தன் கேரியர், வாழ்க்கைக் கனவு சிதைந்து அல்லாடுகிறார் பூர்ணிமா ரவி. பிடிக்காத ஒரு வங்கி வேலையில் மெஷின் போல வேலை செய்து வரும் நாயகி, ஒரு கட்டத்தில் சில நாட்கள் கிடைத்த வி...