Shadow

சினிமா

Moonwalk – எல்லாப் பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே!

Moonwalk – எல்லாப் பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே!

சினிமா, திரைச் செய்தி
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர்.ரஹ்மானும் பிரபுதேவாவும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’ ஆகும். பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனரும் சி.ஈ.ஓ.வுமான திரு. மனோஜ் நிர்மல ஸ்ரீதரன் இப்படத்தினைத் தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, ஒரு படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 'ஏத்து', 'மெகரினா', 'மயிலே', 'டிங்கா', 'ஜிகர்' என இந்தப் படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு, ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும் வகையில் உருவாக்கியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு...
4000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

4000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

சமூகம், சினிமா, திரைத் துளி
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, ஜியோ ஹாட்ஸ்டார் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்தியத் திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். ஜியோ ஹாட்ஸ்டார்-இன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் கூட்டாண்மை தமிழ்நாட்டின...
45 – அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாண்டல்வுட் படம்

45 – அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாண்டல்வுட் படம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பான ‘45: த மூவி’ படத்தில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டி ஆகிய முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குநர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்தப் படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையிடப்படத் தயாராகியுள்ளது. ஏற்கெனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றான “45: த மூவி” படைப்பு, தனது கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் ட்ரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி ட்ரைலர் வெளியாகவுள்ளது. சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ...
மொய் விருந்து – ஓர் ஊரே ஒழுக்கமாக வாழும்

மொய் விருந்து – ஓர் ஊரே ஒழுக்கமாக வாழும்

சினிமா, திரைத் துளி
எஸ்கே ஃப்லிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C.R. மணிகண்டன் இயக்கத்தில், ஓர் அழகான ஃபேமிலி எமோஷ்னல் டிராமாவாக உருவாகியுள்ள 'மொய் விருந்து' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப் படத்தின் மையக்கருவாகும். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C.R. மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.இயக்குநர் C.R. மணிகண்டன், “நான் பேராவூரணி எனும் ஊருக்குஸ் சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதைப் பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பிச் செய்ய வேண்டு...
“தர்மம் வெல்லும்!” – நலன் குமாரசாமி | வா வாத்தியார்

“தர்மம் வெல்லும்!” – நலன் குமாரசாமி | வா வாத்தியார்

சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, “9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன். ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும். இவ்வளவு வருடம் படமெடுக்காமல் படமெடுக்க வருகிறானே என யோசிக்க வேண்டும். சூது கவ்வும் படமெடுத்த போது, எஸ்.ஆர். பிரபு ரொம்ப வருத்தப்பட்டார், சிவக்குமார் ஐயாவும் ரொம்பவும் வருத்தப்பட்டார். இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா எனக் கேட்டார்கள். அது வெறும் கிண்டல் தான் என்றேன், இருந்தாலும் அப்போது ஒரு வாக்குறுதி தந்தேன். தர்மம் வெல்லும் என...
“எம்.ஜி.ஆர் தந்த கர்லாக்கட்டை” – ஆனந்த்ராஜ் | வா வாத்தியார்

“எம்.ஜி.ஆர் தந்த கர்லாக்கட்டை” – ஆனந்த்ராஜ் | வா வாத்தியார்

சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.எம்.சுந்தர், “இந்த மாதிரி மேடை ஏற எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தான் தெரியும். இந்தப்படத்தில் வாத்தியார் இருக்கிறார், அவர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. வாத்தியார் பற்றி சத்யராஜ் சார் பேசிக்கொண்டே இருப்பார். அப்படி ஒரு அற்புதமானவரின் ரோலைக் கார்த்தி சார் செய்துள்ளார். அந்த பாடி லாங்குவேஜ், அந்த பாவனை எல்லாம் அப்படியே கார்த்தி சார் செய்துள்ளார். ஞானவேல் சார் உங்கள் தயாரிப்பில் இரண்டாவது படம் செய்கிறேன். நலன் "காதலும் கடந்து போகும்" படத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் தந்தார். அவருக்க...
படையப்பா – மீண்டும் 4K தரத்தில் பராக் பராக்

படையப்பா – மீண்டும் 4K தரத்தில் பராக் பராக்

சினிமா, திரைத் துளி
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி அன்று, 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது.இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இணைந்து நடித்திருந்தார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ் எ...
JioHotstar South Unbound – தென்னிந்தியப் படைப்புத் திறனைக் கொண்டாடும் விழா

JioHotstar South Unbound – தென்னிந்தியப் படைப்புத் திறனைக் கொண்டாடும் விழா

OTT, சினிமா
கிருஷ்ணன் குட்டி (JioStar Head Entertainment Business, South Cluster), பாலச்சந்திரன். R (JioStar Executive Vice President – Tamil), R. மகேந்திரன் (CEO – Turmeric Media) ஆகியோர், நவம்பர் 5 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் 'JioHotstar South Unbound' என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர். இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்தியக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்துக் குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஜியோ ஸ்டாட் வழங்க...
சாவீ விமர்சனம் | Saavee review

சாவீ விமர்சனம் | Saavee review

சினிமா, திரை விமர்சனம்
'சாவு வீடு' என்பதன் சுருக்கமாகச் சாவீ எனத் தலைப்பிட்டுள்ளனர். 'சாவு வீட்டுக்கு டிக்கெட் கொடுங்க', 'சாவு வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்' எனப் பார்வையாளர்களால் கேட்கவோ, சொல்லவோ முடியாதெனச் சில திரையரங்கத்தில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகச் 'சாவீ' எனத் தலைப்பை மாற்றி வெளியிடுகின்றனர். நாயகன் ஜூடின் இளைய தாய்மாமன் ஆரோக்யராஜ் இறந்து விடுகிறார். அவரது பிணம் காணாமல் போகிறது. ஆரோக்யராஜின் உடல் என்னானது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது. ஆய்வாளர் சக்கரவர்த்தியாக ஆதேஷ் பாலா நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரம் என்றாலும், தேவையற்ற இடங்களில் சம்பந்தமே இல்லாமல் திடீர் தீடீரெனக் குரலை உயர்த்துகிறார். நாயகனின் நண்பன் கிரணாக ராட்சசன் யாசர், படத்தின் கலகலப்பிற்கு ஓரளவு உதவியுள்ளார். பானா காத்தாடி, கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த உதய் தீப், முதல் முறையாக நாயகனாக நடித்துள்ளார். இவர், சிறந்த குழந்...
“மெட்ராஸ் என் ஜென்ம பூமி” – நந்தமூரி பாலகிருஷ்ணா | Akhanda 2

“மெட்ராஸ் என் ஜென்ம பூமி” – நந்தமூரி பாலகிருஷ்ணா | Akhanda 2

சினிமா, திரைச் செய்தி
"மெட்ராஸ் என் ஜென்ம பூமி; தெலுங்கானா என் கர்ம பூமி; ஆந்திரா என் ஆத்ம பூமி."- பாலய்யாதமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அகண்டா 2: தாண்டவம் படத்தின் தெலுங்குப் பதிப்போடு இணைந்து தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டை ஒட்டிப் படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். நந்தமூரி பாலகிருஷ்ணா, “அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகத் தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட். அவருடன் கதை கூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப் படம் 130 நாட்களில் முடிந்த விட்டது. இது சீக்குவல் இல...
வா வாத்தியார் | சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய வைரல் வீடியோ

வா வாத்தியார் | சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய வைரல் வீடியோ

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடலான, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலைத் தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடியுள்ளர். இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்...
அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

சினிமா, திரை விமர்சனம்
சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’ ஆகும். விபின் ராதாகிருஷ்ணன் இயக்க, கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் படத்தில் அங்கம்மாள் என்ற மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீதா கைலாசம். கீதா கைலாசத்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணி, இளைய மகன் சரண் ஆவர். அடிப்படையில் ரொம்பவே பிடிவாத குணத்தை உடைய கீதா கைலாசம் அழுத்தமான, தீர்க்கமான பெண்மணி. பரணி, அவரது மனைவி, சரண் என எல்லோருமே கீதா கைலாசத்தை எதிர்த்துப் பேசப் பயப்படுபவர்கள். பெரிதாகப் படிக்காத பரணி விவசாயம் செய்ய, இளைய மகன் சரணை மருத்துவம் படிக்க வைக்கிறார். நகரத்தில் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்க, பெண்ணின் தந்தையும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்கிறார். பெண் வீட்டாரைச் சந்திக்கும்போது தங்களைக் குறைவாக எடை...
Indian Penal Law (IPL) விமர்சனம்

Indian Penal Law (IPL) விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரேசிங் ஸ்டார் TTF வாசனை முதன்மை நாயகனாக முன்னிறுத்தி, உண்மைச் சம்பவங்களின் இன்ஸ்பயராகப்பட்டு உருவாகியுள்ளது IPL திரைப்படம். எளிய குடும்பப் பின்னணி கொண்டவர் கிஷோர். மனைவி அபிராமி, ஒரு தங்கை ஒரு மகள் என வாழ்ந்து வரும் அவர் கால் டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டி வருகிறார். அவரது தங்கை வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் போது, டெலிவரி பையனான TTF வாசன் மீது காதல் கொள்கிறார். TTF வாசனும், "பொண்ணு நல்லாயிருக்காளே!" எனக் காதலிக்கத் தொடங்குகிறார். இச்சூழலில் காவல்துறை ஆய்வாளரான போஸ் வெங்கட் ஒரு இளைஞனைச் சிரையில் அடித்துக் கொன்றுவிடுகிறார். கொன்றதற்கான காரணம் அந்த இளைஞன் ஃபோனிலிருந்த வீடியோ. அந்த வீடியோ என்ன, அந்த வீடியோ சர்ச்சைக்குள் கிஷோர் குடும்பம் எப்படி வந்தது, கிஷோர் குடும்பத்தை TTF எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. கதையின் நாயகனாக இல்லாமல் கதையில் ஒரு நாயகனாக வலம் வருகிறார் T...
தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review

தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
என்றுமே மென் சோக காதல் கதைகள், மனதைப் பாதிக்கும் காதல் கதைகள் தான் காலம் கடந்து நிற்கும். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மூன்று படங்களுமே காதல் கதைகள்தான். முந்தைய இரண்டு காதல் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்திருக்கின்றன. அந்தக் கூட்டணியின் மூன்றாவது படைப்பான “தேரே இஷ்க் மே” படத்தில், க்ரித்தி சனோன் நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதைப்படி, தனுஷ் எப்போதும் கோபத்திலேயே இருக்கும் இளைஞன். வன்முறை அவன் வாழ்வில் ப்ர் அங்கமாகவே மாறிப் போயிருக்கிறது. க்ரித்தி சனோன், தனுஷ் படிக்கும் அதே பல்கலைக்கழகத்தில் சைக்காலஜியில் ஆய்வுக்கட்டுரை எழுதி வருகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாகப் பயணிக்கும் சூழல் வருகிறது. தனுஷ் க்ரித்தி மீது காதல் கொள்கிறார். க்ரித்திக்குக் காதல் இருந்தாலும் அவரின் கோபமும் வன்முறையும் பிடி...
ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

சினிமா, திரை விமர்சனம்
டிராகுலா பாண்டியன் எனும் பெரிய ரெளடி, ரீட்டாவின் வீட்டில் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். டிராகுலா பாண்டியனின் பிணத்தைக் கைப்பற்ற நினைக்கும் மார்டின் குழு, டிராகுலா பாண்டியனின் தலைக்காகக் காத்திருக்கும் ஆந்திர ரெட்டி, தந்தைக்காக எதையும் எந்த எல்லைக்கும் போய்ச் செய்யும் அவரது மகன் டிராகுலா பாபி, ரீட்டாவைப் பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் ஒரு காவலதிகாரி ஆகியோரிடமிருந்து ரீட்டா எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. சீட்டாவாகப் பேசிக் கொண்டே இருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் தொல்லை பொறுக்க முடியாமல், அவரைக் குளியல் அறையில் வைத்துப் பூட்டி விடுகின்றனர். பூட்டப்பட்ட குளியலறையில் இருந்து ரெடின் கிங்ஸ்லி வெளியேறுவது ரசிக்க வைக்கிறது. ப்ரோக்கர் லல்லுவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தியின் மாடுலேஷன் அவரேற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. கொடூரமான சைக்கோ டிராக...