சினிமா

பாயிண்ட் பிரேக் விமர்சனம்
முடிவெடுத்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் கணத்தையோ, இதற்கு மேல் அடக்கி வைக்க இயலாதென்று குமுறியெழும் அழுகையையோ, இனி பொறுக்க இயலாதென வெடித்தெழும் கோபத்தையோ 'பாயின்ட் ப்ரேக்' என்பார்கள். நாயகனுக்கு அப்படி இரண்டு 'பாயின்ட் ப்ரேக்'கள் படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஏற்படுகிறது. ஒன்று சோகத்திலும்; இன்னொன்று பரவசத்திலும்.
கடலலையில் சறுக்கி விளையாட ஏதுவான சற்றே நீடித்த அலை, கரையிலிருந்து கடலை நோக்கி நீளும் ஒரு நீர் முனையில் வந்து மோதும் இடத்தையும் 'பாயிண்ட் பிரேக்' என்பார்கள்.
எதிர் நாயகனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பவர் தான் நாயகன் எனத் தோன்றுகிறது. படம் முழுவதும் குறியீடுகளும் தத்துவங்களும் விரவிக் கிடக்கின்றன. நாயகன் பெயர் யூட்டா; எதிர்நாயகன் பெயர் போதி. சமஸ்கிருதத்தில், போதி என்றால் அக ஒளி அல்லது விழிப்பு நிலை எனப் பொருள். நவோஜா எனும் செவ்விந்திய இனமொன்றில், யூட்டா என்றால் மலைகளில் இர...

அச்சம் தாண்டி உச்சம் தொடு
ஹாலிவுட்டில் தயாராகும் ஆக்ஷன் படங்களுக்கு, நம் நாட்டில் எப்போதுமே தனியொரு வரவேற்பு உண்டு. இப்படங்கள், மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் போது, வரவேற்பு இரண்டு மடங்காகும்! PVR பிக்சர்ஸ், ‘பாயிண்ட் பிரேக்’ படத்தை தமிழிலும் அதே தலைப்புடனே, 'அச்சம் தாண்டி சிகரம் தொடு' என்கிற பின்குறிப்புடன் வெளியிடுகின்றனர்.
கேத்ரீன் பிக்லோ இயக்கத்தில், கீனு ரீவ்ஸ் நடித்து 1991இல் வெளிவந்த ‘பாயிண்ட் ப்ரேக்’ படத்தில் சில புதிய மாற்றங்கள் செய்து, அப்படத்தின் மறு அவதாரமாக இப்படத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயமெனில், கதாபாத்திரங்களின் பெயர்கள் இந்து மதப் பெயர்கள் உள்ளன. மேலும், ஒரு வைரக் கொள்ளைக் காட்சியொன்றை மும்பையில் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் வீர விளையாட்டுகளில், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்களும் தோன்றி நடித்துள்ளனர்.
ஏகத்துக்கு...

தற்காப்பு விமர்சனம்
வேட்டையாடும் அதிகாரம் பெற்றவர்களே வேட்டையாடப்படுகிறார்கள். யாரால் ஏன் என்பது தான் படத்தின் கதை.
போலிஸ் செய்யும் என்கவுன்ட்டர்களை அதீத ஹீரோயிஸமாகச் சித்தரிக்கும் படங்களுக்கு இடையில், அதற்கெதிரான வலுவான குரலைப் பதிந்துள்ளது படம். படத்தின் தலைப்பும் காரணப் பெயர்தான்.
மனித உரிமை ஆணையத்தின் உயரதிகாரியாக வரும் சமுத்திரக்கனியின் வரவுக்குப் பின் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. முதல் பாதி படத்தின் நான்-லீனியர் படத்தொகுப்பு, நாயகன் சக்தியின் குணவார்ப்பைப் பற்றிய குழப்பத்தையும், படத்தின் போக்கு பற்றிய கேள்வியையும் அளிக்கிறது. இரண்டாம் பாதியில் எல்லாம் தெளிகிறது என்றாலும், அதற்கு முதற்பாதி பில்டப்ஸ் அவ்வளவாக உதவவில்லை.
படத்தில் இரண்டு காதல் கதைகள் வருகிறது. ட்ரெயின் பயணத்தில் ஒன்று; நாயகனின் தற்கொலை முயற்சியில் இன்னொன்று. உப்புக் கருவாடு படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த சதிஷ் கிருஷ்ணனு...

பூலோகம் விமர்சனம்
பூலோகம் என்ற குத்துச் சண்டை வீரனுக்கும், ஒரு தொலைக்காட்சி நிறுவன முதலாளிக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை.
தொடக்கம் முதல் இறுதி வரை படம் பார்வையாளர்களைக் கட்டிப் போடுகிறது. சொல்லப் போனால், உலோகம் போன்ற இறுகிய உடம்புடனும், கனல் தெறிக்கும் பார்வையுடனும் பூலோகமாகக் கட்டிப் போடுகிறார் ஜெயம் ரவி. தனி ஒருவன் வெற்றியில் இருந்தே மீளாத ஜெயம் ரவிக்கு, 2015-ஐ மறக்கமாலிருக்க மற்றொரு வலுவான காரணமாக இப்படமும் சேர்ந்து கொள்ளும்.
"நான் ஒரு எச்சக்கல பொறுக்கி" என தன் ஊழியர்கள் முன்பே சொல்லிக் கொள்ளும் 'மிகக் கெட்ட முதலாளி'யாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். வடச்சென்னையின் மனிதர்களை இயல்பாகச் சித்தரித்திருக்கும் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன், வில்லன்களைக் கோமாளிகளாகச் சித்தரித்துள்ளார். தன் பெரிய கனவுகளையும் லட்சியங்களையும் குயுக்தியையும் பார்வையாளர்களுக்குப் பேசியே கடத்துகிறார்; அதே போல், ஸ்கர்ட் அணிந்த...

பசங்க – 2 விமர்சனம்
தன்னைத் தானே அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற குழந்தைகளையும் மன அழுத்தத்திற்குத் தள்ளும் பெற்றோர்களுக்கான படமிது. தங்கள் உலகத்திற்குள் சிறுவர்களை இழுக்க நினைக்கும் பெற்றோர்களிடம், குழந்தைகள் உலகத்தை அறிமுகம் செய்கிறது பசங்க-2.
நற்சாந்துபட்டியில், ஒரு விளையாட்டு மைதானத்தில் படம் தொடங்குகிறது. அங்கேயே படம் முடிந்தும் விடுகிறது. அக்காட்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மூலம் பேசத் தொடங்கும் பாண்டிராஜ், படம் முழுவதும் பெற்றோர்களிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கிறார்.
சிறுவன் நிஷேஷும், சிறுமி வைஷ்ணவியும் அதகளப்படுத்தியுள்ளனர். கத்தி மேல் நடந்திருக்கும் பாண்டிராஜைப் பத்திரமாக கரை சேர்த்துள்ளனர். இச்சிறுவர்கள் மட்டுமல்ல, மருத்துவர் தமிழ் நாடனாக வரும் சூர்யா, ஆசிரியை வெண்பாவாக வரும் அழகான அமலா பால், கவினின் பெற்றோர்களாக வரும் ராம்தாஸும் வித்யாவும், நயனாவின் பெ...

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் விமர்சனம்
தனது தந்தையின் மருத்துவச் செலவுக்கு கந்து வட்டியில் பணம் வாங்குகிறான் கார்த்திக். பணத்தை கெடுவுக்குள் கட்டாததால் கந்துவட்டிக்காரனால் மிரட்டப்படும் கார்த்திக், பணத்துக்காக என்ன செய்கிறான் என்றும், அதன் சங்கிலித் தொடர் விளைவுகளாக என்ன நேர்கிறது என்பதும்தான் படத்தின் கதை.
படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை. எப்படியாவது ரசிகர்களை ஈர்த்து விட வேண்டுமென வைத்த தலைப்பு போலும்! மூன்று மாதத்தில் பணத்தைத் திருப்பித் தருகிறேன் என்று சொன்ன கார்த்திக்கிடம், “வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என நினைச்சேன். ஏமாத்திட்டியே!” என்கிறான் கந்துவட்டிக்காரன் படம் தொடக்கத்திலேயே. இந்த வசனம் தான் படத்துக்கும் தலைப்புக்குமான ஒரே தொடர்பு. ஆனால் நாயகன் அவ்ளோ வெள்ளையும் கூடக் கிடையாது.
படத்தில் இரண்டு கதைகள் ஒரு புள்ளிகள் ஒன்று சேர்கின்றன. ஒன்று, தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசம்; மற்றொன்று,...

கவியோகி சுத்தானந்த பாரதியார்
மாயலோகத்தில்..1958இல் நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. எழுத்தாளர்கள் பதாகையெல்லாம் பிடித்துக் கொண்டு, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் மத்தியில் காவி உடையணிந்து, தலையில் காவித்துணி முண்டாசுடன் கூடிய, நரைத்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் ஒருவரும் நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும் இவருக்கு இங்கு என்ன வேலை என்று தான் தோன்றிற்று. அவர் யார் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
நல்ல வேளையாக எனதருகிலேயே ஒரு தமிழ் எழுத்தாளர் வசித்து வந்தார். அவரிடம் இவரைப் பற்றிக் கேட்டுவிட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன். எழுத்தாளரை உடனடியாகச் சந்திக்க இயலவில்லை. மறுநாள் காலையில் தான் பார்க்க முடிந்தது.
எனது சந்தேகத்தைக் கேட்டேன். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்று மட்டுமே முதலில் கூறினார். பெயரைக் கூடத் தெரிவிக்கவில்லை. என்னிடம் விளையாட வேண்டும் என்று நினைத்துவிட்...

தங்கமகன் விமர்சனம்
தன் தந்தை மீது விழும் பழியை எப்படி தங்கமகனான தமிழ் கலைகிறான் என்பதே படத்தின் கதை.
ஹேமா டிசோசாவாக எமி ஜாக்சன். முடியைத் தூக்கிச் சீவிய முன் நெற்றியோடு, சுடிதார் அணிந்து வரும் அவர் மிக அந்நியமாகத் தெரிகிறார். 'ஹீரோ ஃப்ரெண்ட்' ஆக வரும் சதீஷ் முதற்பாதி கலகலப்புக்கு உதவுகிறார். தனுஷ் மீசையை மழித்தால் கல்லூரி மாணவர்; மீசை வைத்தால் பொறுப்பான மகனும் மனிதனும் ஆகி விடுகிறார். ஆனால் சதீஷின் உடல் வாகிற்கு, அத்தகைய மாற்றம் பொருந்தவில்லை.
மறதியில் தவிப்பவராகவும், பாசமானதொரு தந்தையாகவும் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். எனினும் வழக்கமான அவரது கலகலப்பு மிஸ்ஸிங். வி.ஐ.பி.யில் அம்மா சென்ட்டிமென்ட் என்றால் இப்படத்தில் அப்பா சென்ட்டிமென்ட்டைத் தொட்டுள்ளார் இயக்குநர் வேல்ராஜ். தனுஷின் அம்மாவாக ராதிகா சரத்குமாரும், அத்தையாக சீதாவும் நடித்துள்ளனர். சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், ஜெயப்ரகாஷ் அழுத்தமான கதாபா...

ஈட்டி விமர்சனம்
தனது பலவீனத்தை, முறையான பயிற்சியின் மூலமாக எதிர்கொண்டு விருப்பப்பட்ட துறையில் புகழ் சாதிக்கிறானா இல்லையா என்பது தான் கதை.
புகழாக அதர்வா. குறி தப்பாது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் ஈட்டி போல் அவரது உடம்பு கச்சிதமாக உள்ளது. நாயகன் என்பதால் வென்று விடுவான் என்ற சினிமாத்தனத்தை மீறி, இந்த முயற்சிக்கு வெல்லாமல் எப்படி என்ற உணர்வைத் தருவது தான் அதர்வாவின் வெற்றி. வசன உச்சரிப்பின் போது, கடைசி வார்த்தையைக் கத்தரித்தது போல் பேசுவார். இப்படத்தில், அதர்வாவின் அக்குறையும் கலையப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாயகனாய் அனைவரையும் கவர்கிறார்.
சிறந்த துணை நடிகராய்த் தன்னை நிரூபித்து வரும் ஆடுகளம் முருகதாஸை அசட்டுத்தனமான நகைச்சுவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் ரவி அரசு. காட்சிகளின் நீளத்தை அதிகரிக்கவே அவர் பயன்பட்டுள்ளார். கதையோடு பொருந்தாமல், துருத்திக் கொண்டிருக்கும் சில காட்சிகளைக் ...

இஞ்சி இடுப்பழகி விமர்சனம்
குண்டாய் இருக்கிறார் ஸ்வீட்டி. அதனால் அவரது திருமணம் தள்ளிப் போகிறது. எப்படியாவது தன் மகளின் எடையை, மிகக் குறைந்த நாட்களிலேயே குறைத்து விடவேண்டுமென ‘ஜீரோ சைஸ்’-இல் சேர்க்கிறார் ராஜேஸ்வரி. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, இது நிறைய தெலுங்குப் படம் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்தான் தமிழ்ப்படம் என்ற புரிதல் ஏற்பட்டு விடுகிறது. அதாவது க்ளோஸ்-அப் ஷாட்களில் ஒட்டும் கதாபாத்திரங்களின் உதடு, வைட் ஷாட்களில் ஒட்டாமல் போகிறது. ‘இது தமிழ்ப்படமும் தான்’ என்ற லேசான நம்பிக்கையையும், ‘சைஸ் ஜீரோ’ பாடலில் தன் நடனத்தால் சுக்குநாறாக நொறுக்கி விடுகிறார் அநி.
ஸ்வீட்டியான அனுஷ்காவை மட்டுமே மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளனர். அனுஷ்காவும், ஸ்வீட்டி எனும் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். அதை நமக்கும் கடத்தி விடுகிறார். ஆர்யா முதல் இஞ்சி இடுப்பழகியான சோனல் செளஹன் வரை ...

உப்பு கருவாடு விமர்சனம்
சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே! சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று.
மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்து...





