Shadow

சினிமா

எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

சினிமா, திரைத் துளி
இயக்குநர் விஜயபாஸ்கர் சொன்ன கதை தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்குப் பிடித்து விடுகிறது. இரண்டு வருடங்களாக படமெதுவும் ஒத்துக் கொள்ளாத சுந்தர் சி. பாபுவிடம் கேட்காமலேயே, படத்தின் இசையமைப்பாளர் அவர் தானென இயக்குநர் பெயர் போட்டுக் கொள்கிறார். மருத்துவமனையிலிருந்த தன் அம்மாவிடம், “நீங்க வீட்டுக்கு வந்ததும் நான் மீண்டும் இசையமைக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார் சுந்தர் சி.பாபு. ஆனால் அவரின் அம்மா தவறியதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். அச்சமயத்தில் தான், ‘அட்டி’ படத்துக்கு இசையமைக்குமாறு அணுகியுள்ளனர். தனது அம்மா தனக்கு மகளாகப் பிறந்துள்ளாரென சுந்தர் சி.பாபு மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரமது. தயாரிப்பாளர் பெயரோ கார்த்திகேயன். ஆக, இது முருகனின் விருப்பமென படத்தை இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளார் சுந்தர் சி.பாபு. அதற்கும் மேல், ‘அட்டி’ படத்தை அவரே வாங்கி தனத...
அட்டி – பசங்க கூடுற இடம்

அட்டி – பசங்க கூடுற இடம்

சினிமா, திரைத் துளி
மா.கா.பா. நாயகனாக ரவுசு விடும் படம்தான் அட்டி. இதில் மா.கா.பா. ஆனந்த் கானா பாடகராகவும், அஜித் ரசிகராகவும் நடித்துள்ளார்.  அட்டி என்றால் என்ன? பசங்க உட்கார்ந்து அரட்டை அடிப்பதற்கென அனைத்து ஏரியாவிலும் ஓரிடம் இருக்கும். அந்த இடத்திற்குப் பெயர் தான் அட்டி. இது ஒரு பக்கா கமர்ஷியல் படமென்கிறார் அறிமுக இயக்குநர் விஜயபாஸ்கர். இவர் இயக்குநர் சுராஜ் அவர்களிடம் மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ராம்கி நாயகனாக நடித்த சமயங்களில் கூட, உருவத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே நடிப்பார். அடுத்த படத்திற்கான கன்ட்டினியூட்டி (Continuity) தவறி விடுமென்பதால், காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொழுது கூட தலை முடியைக் கூட வெட்டிக் கொள்ளமாட்டாராம். ஆனால் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மீசையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ச...
மூன்றாம் உலகப் போர் விமர்சனம்

மூன்றாம் உலகப் போர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2022 இல் நடக்கும் போரில், இந்தியாவிடம் சீனா தோற்கின்றது. அதற்குப் பழிவாங்கும் விதமாக, 2025 இல் சீனா எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பதுதான் படத்தின் கதை. மிகக் குறைவான கதாபாத்திரங்களுடன் மிகக் குறைவான லோக்கேஷன்களில் எடுக்கப்பட்டுள்ள இயக்குநர் சுகன் கார்த்தியின் கன்னி முயற்சியே இப்படம். ஆனால், பிரம்மாண்டமான கதை. சி.ஜி. (கணினி வரையியல்) தொழில்நுட்பத்தின் மூலம் இயக்குநர் முடிந்தளவு கதையின் பிரம்மாண்டத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முனைகிறார். படத்தின் மொத்த சுமையும் மேஜர் சரவணன் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாலை படத்து நாயகன் சுனில் குமார் மேஜர் சரவணனாக நடித்துள்ளார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், காதல் மனைவியை இடையிடையே ஏக்கத்துடன் நினைவுகூர வேண்டும், சீன இராணுவத்தின் சித்திரவதைகளைத் தாக்குபிடிக்க வேண்டும், இறுதியில் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். எல்லாம் செய்கிறார். சீனரிடம் வீர...
அட்டி – படக்குழுவினர்

அட்டி – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> மா.கா.பா. ஆனந்த >> அஷ்மிதா >> 'நான் கடவுள்' ராஜேந்திரன் >> அருள்தாஸ் >> அழகு >> ராம்ஸ் >> மகாநதி சங்கர் >> யோகிபாபு >> கலை >> மிப்பு >> தங்கதுரைதொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு - E5 எண்டர்டெயின்மென்ட், இமேஜ்னரி மிஷன்ஸ், பரிநிதா புரொடக்ஷன்ஸ் >> இயக்கம் - விஜய பாஸ்கர் >> ஒளிப்பதிவு - விஜயபாஸ்கர் >> இசை - சுந்தர் C.பாபு >> படத்தொகுப்பு - M.V.ராஜேஷ் குமார் >> கலை - ஏழுமலை ஐயப்பன் >> சண்டை - பவர் பாண்டியன் >> பாடல் - சினேகன், கானா வினோத், கவிவர்மன், விஜயசாகர் >> நடனம் - சுரேஷ்...
சர்வர் சுந்தரமாகும் சந்தானம்

சர்வர் சுந்தரமாகும் சந்தானம்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
(முழு போஸ்டரைக் காண படத்தைச் சொடுக்கவும்) தொழில்நுட்பக் கலைஞர்கள்:>> இயக்கம் - ஆனந்த் பால்கி >> இசை - சந்தோஷ் நாராயணன் >> ஒளிப்பதிவு - ப்ரமோத் K.வர்மா >> படத்தொகுப்பு - தினேஷ் >> கலை - உமேஷ் J.குமார் >> உடை - ஜாய் க்றிஸில்டா >> டிசைன்ஸ் - கபிலன் >> சண்டை - திலிப் சுப்புராயன் >> மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா...
சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)

சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. அறிஞர் அண்ணாவைப் பற்றி சுருக்கமாக எழுதுவது மிகவும் சிரமமான காரியம். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம் தான் போட வேண்டும். மேலும், அவரைப் பற்றி தமிழ்கூறும் நல்லுலகில் அறியாதவர் யார்? எனவே மிகச் சுருக்கமாகச் சில. காஞ்சிபுரம் என்றால் பட்டு மாத்திரமல்ல; அண்ணாவும் உடனேயே நினைவுக்கு வந்து விடுகிறார். 1909 செப்டம்பர் மாதம் பிறந்தார். நூறாண்டு கடந்து விட்டது. அண்ணா, ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு சுயமரியாதைக்காரராகவே வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். எனவே அவர் நீதிக்கட்சிக் காரராக இருந்தது ஆச்சரியமில்லை. 1934இல் அவருக்கும் பெரியாரின் அறிமுகம் கிடைத்தது. பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சரளமாகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மேடையில் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். நீதிக்கட்சியில் அதன் கடைசிக் காலங்களில் சில நிர்வாகப் பொறுப்புக்களிலும் இருந்திருக்...
ரஜினிமுருகன் விமர்சனம்

ரஜினிமுருகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் களமிறங்கியுள்ளது அக்குழு. வேலையும் கவலையும் இல்லாத ரஜினிமுருகன் எப்படி தன் தாத்தா சொத்தை விற்கின்றான் என்பதுதான் படத்தின் கதை. தோத்ரியும் ரஜினிமுருகனும் செய்யும் அலப்பறைகள் தான் படம். போதாக்குறைக்கு, இவர்களுடன் ஏழரை மூக்கனும் சேர்ந்து கொள்கிறார். தனி ஆவர்த்தனமாக ரஜினி வெறியராக வரும் வக்கீல் நீலகண்டனும் அசத்துகிறார். எனினும் படத்தின் நீளம் 159 நிமிடங்கள் என்பது இப்படத்திற்குச் சற்றே அதிகம். கதைக்குள் வில்லன் வலுவாக வந்த பின்னும், ‘வெயிட்’ எனச் சொல்லிவிட்டு காதலிக்கவும், பாட்டு பாடவும் போய் விடுகிறார் ரஜினிமுருகன். இந்தப் பொறுப்பற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் சிவகார்த்திகேயன். நாயகனால் காதலிக்கப்பட கீர்த்தி சுரேஷ். தோத்ரியாக வரும் சூரி படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார். வேதாளம் படத்திலேற்ற பாத்திரத்தினைப்...
கதகளி விமர்சனம்

கதகளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடலூர் மீனவர்களின் தலைவன் தம்பாவைக் கொன்ற பழி, அமுதவேல் மீது வந்து சேருகிறது. அந்தப் பழியால் அமுதவேலின் குடும்பத்திற்கு என்ன நேர்கிறதென்றும், அதிலிருந்து மீள அமுதவேல் எப்படி கதகளி ஆடுகிறான் என்பதும் தான் படத்தின் கதை. 'கதகளி ஆடுதல்' - சக்தியையோ வலிமையையோ நிரூபித்தல் என்று தலைப்பினை பொருள் கொள்ளலாம். வழக்கமான நாயகன், நாயகி, வில்லன் தான் எனினும் பாண்டிராஜின் திரைக்கதையில் படம் சுவாரசியம் பெறுகிறது. குறிப்பாக, இன்ஸ்பெக்டர் சரவண வடிவேலாக நடித்திருக்கும் ஸ்ரீஜித் ரவியின் ஆர்ப்பாட்டமற்ற குயக்தி அதிரச் செய்கிறது. அதிகாரம் தவறான நபரின் கையில் கிடைத்தால் என்னாகுமென அழுத்தமாகப் பதிந்துள்ளார் பாண்டிராஜ். பசங்க – 2 ஏற்படுத்திய தாக்கம் மறையும் முன், முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையில் கையெடுத்து அற்புதமான த்ரில்லரைக் கொடுத்துள்ளார். ஹிப்-ஹாப் தமிழாவின் பின்னணி இசை அதற்கு உதவுகிறது. அமுதவேலாக விஷால். சண்...
தி டேனிஷ் கேர்ள் விமர்சனம்

தி டேனிஷ் கேர்ள் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
The Danish girl (A) உருவப்பட ஓவியரான கெர்டா, தன் கணவரான எய்னரிடம் பெண்களின் உடை அணிந்து மாடலாக நிற்கச் சொல்கிறார். தன் மனைவிக்கு உதவ பெண்களின் உடையை அணியும் எய்னர், தன்னைப் பெண்ணாக உணரத் தொடங்குகிறார். பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. 2000 ஆவது ஆண்டு, எய்னரின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு டேவிட் எபர்ஷோஃப் எழுதிய ‘தி டேனிஷ் கேர்ள்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்ட படமிது. புனைவு கலக்கப்பட்ட அவரது நாவல் அழகானதொரு காதலை முன்னிறுத்துகிறது. அக்காதலை, படம் நெடுகே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது லுசிண்டாவின் திரைக்கதை. காதலித்து மணந்து கொண்ட கணவன், ஆறு வருடங்களாக அன்பும் நேசமும் இயைந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, ‘நானொரு பெண்ணாக என்னை உணர்கிறேன்’ என்று சொன்னால் அந்த மனைவியின் மனநிலை எப்படி இருக்கும்? கெர்டாவாக அலிசியா விகேண்டர் அசத்தியுள்ளார். தன் கணவனுக...
கெத்து விமர்சனம்

கெத்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட துளசி ராமனை அவரது மகன் சேது எப்படி மீட்கிறான் என்பது தான் படத்தின் கதை. சேதுவாக உதயநிதி ஸ்டாலின். நகைச்சுவைப் படத்திலிருந்து அடுத்த கட்ட சோதனையை அழகாகச் செய்து பார்த்துள்ளார். சந்தானம் இன்றி வரும் உதயநிதியின் முதல் படம் என்ற விசேஷப் பெருமை இப்படத்திற்கு உண்டு. கதையின் நாயகனாக இருப்பதால், உதயநிதியின் முந்தைய கதாபாத்திரங்களை விட நூலகத்தில் பணி புரியும் சேது கொஞ்சமாக ஈர்க்கவே செய்கிறார். புத்தகத் திருடியாக வருகிறார் எமி ஜாக்சன். அதிலும் அவர் திருடும் புத்தகங்கள் எல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணமுள்ளன. உதாரணத்திற்கு, ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவலைத் திருடி ஆச்சரியம் ஏற்படுத்துகிறார். இப்படியொரு நாயகியை தமிழ்த் திரையில் உலவ விட்ட இயக்குநர் திருக்குமரனை எண்ணி வியக்காமல் இருக்கவே முடியவில்லை. 'சாவி.. சாவி..' என சின்னச் சின்ன வசனங்களிலும் தன் முத்திரையைப் பதி...