Shadow

சினிமா

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை. கதாகாலட்சேபம் மாதிரி பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான் அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன. அம்மாதிரியான சூழலில் 1935இல் 'மேனகா' என்றொரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகாலப் படம். சமூகப் படம். டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள். இயக்குநர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த ராஜா சாண்டோ. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இப்படத்தின் மூலமாகத் திரை உலகில் பிரவேசித்தார். இந்தப் படத்தின் கதை வடுவூர் துரைசாமி ஐய...
நடன இயக்குநரின் யாளி

நடன இயக்குநரின் யாளி

திரைத் துளி
ஏ.பி. க்ரியேஷன்ஸ் (A.B Creations) சார்பில் நடிகை அக்ஷயா தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘யாளி’. கதையும் அவருடையதே! அக் ஷயா ஏற்கனவே “கலாபக் காதலன்”, “உளியின் ஓசை” போன்ற படங்களில் நடித்துள்ளார். அக்ஷயாவின் கதைக்கு, ‘காதல் கந்தாஸ்’ திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் காதல், வெயில், அங்காடித் தெரு, எம் மகன், நான் மகான் அல்ல, டார்லிங் போன்ற படங்களுக்கு நடன இயக்குநராக பணி புரிந்தவர். கந்தாஸ் ஏற்கனவே “நீ நாதே நா” என்ற நேரடி கன்னட வெற்றிப் படத்தை இயக்கிவர். யாளி, இவருக்குத் தமிழில் முதல் திரைப்படம். இது காதல், காமெடி கலந்த த்ரில்லர் படமாம். இதில் தமன், அக்ஷயா, அர்ஜுன், மனோபாலா, ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர். முழுத் திரைப்படமும் மலேசியா நாட்டில் பினாங்கு, மலாக்கா, லங்காவி, டாப்பிங், ஜெண்டிங் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் மிகப் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.  இசையமைப்பாளராக திரு. S...
சகுந்தலை (1940)

சகுந்தலை (1940)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்) 1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை. ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள். பவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும். பின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெர...
மாயலோகத்தில்

மாயலோகத்தில்

சினிமா, தொடர்
1931இல் பேச ஆரம்பித்தது தமிழ்த் திரைப்படங்கள். ஆரம்ப கால திரைப்படங்கள் அனைத்தும் புராண இதிகாசக் கதைகளையே உள்ளடக்கியதாக இருந்தன. இந்நிலையில், தமிழ்த்திரையின் முதல் சமூகப் படமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட திரைப்படம் 'மேனகா'. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் டி.கே.எஸ்.சகோதரர்களின் 'ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கம்பெனி'. இது 1934இல் வெளிவந்தது. இக்கதையின் ஆசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். இவர் அக்காலத்தில் வெகுஜன ரசிகர்களால் நன்கு படிக்கப்பட்ட பல துப்பறியும் நாவல்களின் ஆசிரியர். எனவே திரைப்படம் சென்ற முதல் எழுத்தாளர் என்கிற பெருமை இவருக்கே உரியது. இவரைத் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள்; அல்லது அந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் திரையில் பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங...
பழைய பயோஸ்கோப்

பழைய பயோஸ்கோப்

சினிமா, தொடர்
'பயாஸ்கோப்' என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம். பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தொடரில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆரம்பகால திரைப்படங்கள் பற்றிய நமக்குக் கிடைக்கும் செய்திகள் போதுமானதாக இல்லை. திரைப்படம் சார்ந்து எழுதிய சில எழுத்தாளர்களும் ஏராளமான புள்ளி விவரங்களையே தந்து சென்றிருக்கிறார்கள். சிலர் கதையை மட்டும் எழுதியிருக்கிறார்கள். 'ராண்டார்கை', ஹிந்துவில் எழுதி வரும் திரைப்படம் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. அவைகள் மிகச் சுருக்கமாக இருக்கின்றன. நினைவில் வைத்துக் கொள்ள தேவையில்லாத தோல்வியுற்ற படங்களைப் பற்றியும் ஏனோ எழுதி வருகிறார்! பழைய வெற்றி பெற்ற திரைப்படங்கள் பற்றி சற்று விரிவாக (விமர்சனம் அல்ல) எழுதிப் பார்க்கவேண்டுமென்று தோன...
82 வயது அம்மணி

82 வயது அம்மணி

சினிமா, திரைத் துளி
இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படமான அம்மணியை, ‘டேக் எண்டர்டெயின்மென்ட் (Tag Entertainment)’ நிறுவனர் திரு. வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நிறைவுற்று வருகிறது. படத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர், “நிஜ வாழ்க்கை கதாப்பாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிததத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின்பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்ல கதையை எனக்கு கொடுத்த எனது இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.  ‘விண்ணைதாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பகல் இரவென பாராமல் பரபரவென ஷூட்டிங்கில் உற்சாகத்துடன் இருப்பார். பாட்டி என்றழைத்தால் பிடிக்காத 82 வயதான இந்நடிகை அவரை ‘‘அக்கா’ன்னு கூப்பிடுங்க’ என்பார். அவரது உற்சாக...
காக்கா முட்டை விமர்சனம்

காக்கா முட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாசாங்கற்ற ஜாலியானதொரு படம். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய பிரக்ஞையையும், சம கால அபத்தங்களையும் மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது ‘காக்கா முட்டை’. இப்படம், சிறந்த குழந்தைகள் படமாக தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல் மேலும் பல படங்களைத் தயாரிக்க நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துகள். சாக்கடையாகிவிட்ட கூவம் நதிக்கரையில் வாழும் குப்பத்துச் சிறுவர்களான சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் சகோதரர்கள். நடிகர் சிம்பு திறந்து வைக்கும் ‘பீட்சா ஹட்’டில் பீட்சா சாப்பிட வேண்டுமென அவர்களுக்கு ஆசை எழுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சின்ன காக்கா முட்டையாக ரமேஷும், பெரிய காக்கா முட்டையாக விக்னேஷும் அச்சு அசலாக வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சிறுவன் ரமேஷின் புன்னகையையும், முக பாவனைகளையும் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்வீர்...
சான் ஆன்ட்ரியாஸ் விமர்சனம்

சான் ஆன்ட்ரியாஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
San Andreas சான் ஆன்ட்ரியாஸ் படம் நில நடுக்கத்தை மையமாகக் கொண்ட படம். இப்படம் மே 29ஆம் தேதி வெளியானது. படத்தின் பிரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்கில் தீவிரமாக படக்குழுவினர் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஏப்ரல் 15 அன்று நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. படத்தின் பிரமோஷன்களை அப்படியே நிறுத்தி, என்னச் செய்யலாமென யோசிக்கத் தொடங்கினர். படத்தைத் தயாரித்த “வார்னர் பிரதர்ஸ்”, ஒரு பெரிய தொகையை நிவாரண நிதியாக அளித்தாலும், ‘வேறென்னச் செய்ய முடியும்?’ என யோசித்து, நில நடுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக படத்தை முன்னெடுத்துச் சென்றனர். படத்தைப் பற்றி நாயகனான வ்ரெஸ்லிங் புகழ் ‘ராக்’ கூறும்பொழுது, “சோதனையான காலக்கட்டத்தில் ஒன்றினையும் குடும்பத்தின் பிணைப்புத்தான் உண்மையான பலமென்பதை படத்தில் சொல்லியுள்ளோம். அதுதான் படத்தோடு என்னை ஒன்றிணைத்த விஷயம்” எனக் கூறியிருந்தார். ஆனால் படத்தின் கதையெனப் ப...
மாசு என்கிற மாசிலாமணி விமர்சனம்

மாசு என்கிற மாசிலாமணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவை பேய் பிடித்திருக்கும் காலமிது. அதுவும் எந்த அளவெனில், பேய்கள் ஜாக்கிரதை என தலைப்பின் மூலமே எச்சரிக்கும் அளவு முத்தியுள்ளது. ஒரு விபத்தில், மாஸ் எனும் திருடனுக்கு, ஆவிகளைப் பார்க்கும் அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது. பேய்களை வைத்து சம்பாதிக்கத் தொடங்கும் மாஸ்-க்கு, சுலபமாக கோடீஸ்வரனாகலாம் என ஆசை காட்டுகிறது சக்தி எனும் ஆவி. 'இந்த டீல் நல்லாயிருக்கே.!' என பணத்தாசையில் இருக்கும் மாஸைக் கொண்டு சாதுரியமாக ஒருவனைக் கொன்று விடுகிறது சக்தி. யாரை ஏன் சக்தி கொல்கிறது என்பதுதான் படத்தின் கதை. மாஸ் என்கிற மாசிலாமணியாகவும், சக்தி எனும் ஆவியாகவும் இரு வேடத்தில் கலக்கியுள்ளார் சூர்யா. மாஸான படத்தில் நாயகி இருந்தே ஆக வேண்டுமென்ற எழுதப்படாத விதியின் பொருட்டு நாயகியாக நயன்தாரா தலை காட்டியுள்ளார். நயனுடன் ஒப்பிடுகையில் ப்ரணிதாவுக்கு வலுவான கதாப்பாத்திரத்தைக் கொடுத்து அழகு பார்த்துள்ளார் இயக்குநர்...
சோன்பப்டி விமர்சனம்

சோன்பப்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திடீரென, ஷிவாவின் கார் பின் சீட்டில் ஒரு சிறுவன் இருக்கிறான். "யார்ப்பா நீ? உன் பேரென்ன?" அந்த சிறுவன் காருக்கு வெளியே பார்க்கிறான். தள்ளுவண்டியில் சோன்பப்டி விற்கப்படுகிறது. உடனே தன் பெயரை 'சோன்பப்டி' என்கிறான். யாரிந்த சோன்பப்டி சிறுவன்? அவன் ஏன், எப்படி ஷிவாவின் காருக்குள் வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. நாயகனாக ஆட்டுக்குட்டி ஸ்ரீ நடித்துள்ளார். இம்முறை டூயட் பாடுமளவுக்கு முன்னேறியுள்ளார். கதைக்கு உதவும் ஒன்றிரண்டு காட்சிகள் தவிர்த்து, முதல் பாதியை பெருமளவு ஆக்கிரமிப்பது ஸ்ரீயும், இவருக்கு ஜோடியாக வரும் நிரஞ்சனாவுமே! வாய்ஸ்-ஓவரில் நண்பர்கள் அறிமுகம், பெண் பார்க்கும் படலம், த்ரிஷா - ஆர்யா மீது ரசிக வெறியிலுள்ள கணவன் - மனைவி காட்சிகள், பீட்சா ஆர்டர் செய்து சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் குதிப்பது என முதல் பாதியை ஏதோ ஏதோ காட்சிகளின் மூலம் படாதபாடுபட்டு கடக்கின்றனர். அதற்காக மனோபாலா,...
தமிழ் சினிமாவை விடாத பேய்கள்.!

தமிழ் சினிமாவை விடாத பேய்கள்.!

சினிமா, திரைத் துளி
பேய்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் ஒரு படம் வரப் போகின்றது. அதில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடனெனக் கூறும் ஒரு கதாப்பாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது. இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது? சம்பவத்திற்கு பின் அவர்கள் படும் குழப்பங்களை நகைச்சுவைப் பிண்ணனியுடன் கலந்து கூறியிருக்கும் படமே “பேய்கள் ஜாக்கிரதை” இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனராகவும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதன்முறையாக இப்படத்தின் மூலம் தமிழ்த் திர...
கமரகட்டு விமர்சனம்

கமரகட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தான் கற்ற மொத்த வித்தையும் இறக்குவது என்றால் என்ன? அதைத் தெரிந்து கொள்ள அவசியம் நீங்க கமரகட்டு பார்க்கவேண்டும். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, இயக்கம் என அனைத்துக்கும் சொந்தக்காரர் ராம்கி ராமகிருஷ்ணன் ஆவார். திருவண்ணாமலையில் பன்னிரெண்டாவது படிக்கும் இரண்டு மாணவர்கள் உடன் படிக்கும் இரண்டு மாணவிகளைக் காதலிக்கிறார்கள். கல்லூரி போன முதல் நாளே காசு, பணம், துட்டு, நகை, சொத்து என வேறிருவரை அம்மாணவிகள் காதலிக்கத் தொடங்குகின்றனர். வெகுண்டெழும் 12வது தேறாத அம்மாணவர்கள், காதலியின் (மாணவிகள் இருவரும் சகோதரிகள்) தாயிடம் நியாயம் கேட்கின்றனர். அந்தம்மாவும், ‘எவ்ளோ நல்ல பசங்களா இருக்கீங்க?’ என அடுத்த நாளே ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு செய்து கல்யாணம் செய்ய வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்குகிறார். பசங்க செம ஹேப்பியாகி, தனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்டான கமரகட்டை காதலியின் அம்மாவுக்குத் தர...