சினிமா

எனக்குள் ஒருவன் விமர்சனம்
லூசியா எனும் கன்னடப் படத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிரசாத் ராமர். லூசியா, தென்னிந்தியத் திரைப்பட ரசிகர்கள் பெருமையாக காலரை உயர்த்திக் கொள்ள உதவிய படம். முறைப்படியாக உரிமை வாங்கி தமிழில் எடுத்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து திரைத்துறையில் நுழைந்த பவன் குமாரின் பெயரே திரைக்கதையில் வருகிறது.
ஒருவன்தான் வாழ நினைக்கும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதுதான் எனக்குள் ஒருவன் படத்தின் கதை.
சித்தார்த்தின் கேரியரில் கண்டிப்பாக இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழும், வாழ நினைக்கும் என இரண்டு வாழ்க்கையையும் நடிப்பில் வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார். ஜிகர்தண்டா, காவியத் தலைவன் எனும் படங்களுக்குப் பிறகு, படத்தின் தனியொரு பிரதான பாத்திரமாக அவர் நடிப்பில் வந்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர் ஓனராகவும், நடிகரின் மேனேஜராகவும் வழக்கம் போல் நரேன் அசத்தியுள்ளார்....

தொப்பி விமர்சனம்
குற்றப் பரம்பரையைச் சேர்ந்த பட்டியல் இனத்தவனான சித்தன், தனது லட்சியமான காவல் துறையில் சேருகிறானா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் கதை.
படத்தின் தலைப்பு போடும்பொழுதே, பொம்மலாட்ட பாணியில் குற்றப்பரம்பரை எப்படி உருவாகின என்ற செய்தியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் யுரேகா. படத்தின் பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகப் பயணிக்கிறது. மலைவாசிகளின் தலைவராக வரும் G.M.குமார் அதகளம் செய்துள்ளார். திருடச் செல்பவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புதல், ஏ.டி.எம். மெஷினைப் பெயர்த்தெடுப்பது, பேயோட்டுவது, பேயைக் கொண்டு போலிஸை ஓட்டுவது என G.M.குமார் படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் அருள்தாஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பில்லி சூனியத்திற்குப் பயப்படுவது, சித்தனின் வளர்ச்சியைக் கண்டு பொறுமுவது, உறவாடிக் கெடுக்கும் நைச்சியத்துடன் நடந்து கொள்வ...

பாண்டி.. மில்க் பாண்டி
கோஸ்ட் கோபல்வர்மாவாக நடித்த ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் அடுத்த அவதாரத்தை, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தினைக் காணலாம். இரண்டு மணி நேர முழு நீள நகைச்சுவைப் படம். குமரவேல், செண்ட்ராயன், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, “கானா” பாலா என நகைச்சுவைக்கு தீனி போட படத்தில் பலருள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. A7 Band என்ற பெயரில் மூன்று இளைஞர்கள் இணைந்து இசையமைத்து உள்ளனர்.
“எல்லோரும் சொன்னாங்க.. குமரவேல் சார் ராதாமோகன் சார் படத்துலயும், பிரகாஷ்ராஜ் சார் படத்துலயும்தான் நடிப்பார்னு! நானும் அவர்ட்ட கேட்டேன். ‘யோவ்.. யாருய்யா சொன்னது?’ எனக் கேட்டார் அவர்” எனச் சிரித்தார் தீபக்.
“என்னிடம் வசனகர்த்தா கார்த்திக் வந்து கதை சொன்னாப்ல. பாதி கதை கேட்டதும் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். மீதி கதையைக் கேட்டதும், நல்ல முடிவுதான் எடுத்திருக்கேன் எனத் தோணுச்சு” என்றார் குமரவேல்...

ஒரு புது கதவு திறக்குது
"இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்தப் பாட்டிற்கு அந்தத் துள்ளலைத் தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ், கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். ஜி.வி.எம். (கெளதம் வாசுதேவ் மேனன்) பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார். கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஒரு வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைக்கும் ஒருவனின் கொண்டாட்டமாய் வரும் 'புது ஒரு கதவு திறக்குது' என்ற பாடலை அதே துள்ளலுடனும், கொண்டாட்டத்துடனும் பாடிக் கொடுத்தார் கௌதம். இப்பாடல் கடற்கரைக் காற்று போ...

எலி – படக்குழுவினர்
நடிகர்கள்:>> வடிவேலு
>> சதா
>> பிரதிப் ராவத்
>> பெசன்ட் ரவி
>> மகாநதி சங்கர்
>> சந்தானபாரதி
>> பாவா லட்சுமணன்
>> போஸ் வெங்கட்
>> பூச்சி முருகன்
>> ராஜ்கபூர்
>> வெங்கல் ராவ்
>> கிருஷ்ணமூர்த்திபணிக்குழு:>> தயாரிப்பு – G சதிஷ் குமார், S அமர்நாத்
>> தயாரிப்பு நிர்வாகம் – சிவராஜ், வெங்கடேஷ்
>> தயாரிப்பு மேற்பார்வை – பன்னீர் செல்வம்
>> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – யுவராஜ் தயாளன்
>> இசை – வித்யாசாகர்
>> ஒளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன்
>> படத்தொகுப்பு – VT விஜயன்
>> கலை - தோட்டாதரணி
>> பாடல்கள் – புலமைப்பித்தன், விவேகா
>> நடனம் – தாரா, சிவசங்கர்
>> சண்டை – சூப்பர் சுப்புராயன்
>> ஒப்பனை – நேரு, பாபு
>> உடைகள் – முர...

எட்டுத்திக்கும் மதயானை விமர்சனம்
தனது முதற்படத்தின் பெயரிலேயே ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனது இரண்டாவது படத்தை இயக்கித் தயாரித்துள்ளார் இயக்குநர் K.S.தங்கசாமி. சாகித்திய அகாதமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் நாவலொனின் தலைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதீயமும் அதிகாரமும் பண ஆசையும் இணைந்து தமிழின் தம்பியான பிரபாவைக் கொன்று விடுகிறது. தமிழ் எப்படிப் பழி வாங்குகிறான் என்பதுதான் கதை.
ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்துள்ளார். ஆனாலும் இது நாயகனுக்குரிய படமில்லை. நாயகனும் மற்றொரு பாத்திரமாகவே வருகிறார். ஆனால் சாராவாக வரும் ஸ்ரீமுகியை படத்தின் நாயகி எனச் சொல்லுமளவு நடித்துள்ளார். இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியமான கதாபாத்திரமான தமிழாக படத்தில் தோன்றியுள்ளார் K.S.தங்கசாமி. படத்தின் முக்கியமான அந்தக் கதாபாத்திரத்தை வேறு எவரையேனும் நடிக்க வைத்திருக்கலாம் அவர். காவல்துறை அதிகாரி ரகுபதியாக நடி...

கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்
(Kingsman: The Secret Service)
கிங்ஸ்மேன் என்பது ஒரு தையற்கடை. எனினும், இது ஜேம்ஸ் பாண்ட் பாணி படமென்று தலைப்பைக் கொண்டே யூகிக்கலாம்.
மனிதாபிமானத்தை வைரஸாகவும், புவி வெப்பமயமாதலை காய்ச்சலாகவும் உருவகிக்கும் கோடீஸ்வரரான ரிச்மாண்ட் வேலண்டைன்.. வைரஸ் உலகை அழிக்கும் முன் தீர்வு காணத் துடிக்கிறார். அதாவது மக்களுக்குள் வன்முறை உணர்ச்சியைக் கிளிர்ந்தெழச் செய்து, ஒருவரை ஒருவர் தாக்கி அழிந்து போகவைப்பது. இதை கிங்ஸ்மேன் குழுவினர் எப்படித் தடுக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
முதல் ஃப்ரேமில் இருந்தே படம் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ‘Manners maketh man’ என கதவைப் பூட்டி விட்டு, கொலின் ஃபிர்த் குடையை வைத்து சண்டை போடும்பொழுது திரையரங்கமே கலகலப்பாகிறது. படத்தின் நாயகன் டரோம் எகெர்ட்டன் என்றாலும் குடையுடன் வலம் வரும் கொலின் ஃபிர்த் தான் ரசிக்க வைக்கிறார். மிகவும் ஸ்டைலிஷான் ஸ்டண்ட் கா...

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம்
தலைப்பு மட்டுமன்று படமும் வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் கதைக்குப் பொருந்தும் தலைப்பாகத் தெரியவில்லை.
சூரியனின் மேற்பரப்பில் எழும் வெப்ப அலைகளால் பூமியில் காந்தப் புயல் வீசுகிறது. அதனால் செல்ஃபோன் சிக்னல்கள் வேலை செய்யாமல் போகின்றன. மீண்டும் எப்படி வேலை செய்கிறது, அதுவரை என்ன நிகழ்ந்தது என்பதே கதை.
வழக்கமான தமிழ்ப் படமாக இல்லாமல் படம் நெடுகவே நிறைய சுவாரசியங்கள் உண்டு. உதாரணத்திற்கு பிக்பாக்கெட் திருடனாக வரும் அஜய்யின் கதாபாத்திரம். எல்லாப் பாத்திரத்துக்குமே சம அளவு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனித்துவ அடையாளங்களையும் தந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு முகவர் முகிலாக வரும் அட்டகத்தி தினேஷ், கண்ணை உருட்டியவாறே இருக்கார் இப்படத்திலும். சிமியாக வரும் பிந்து மாதவியினுடனான காட்சிகள் ஈர்க்கவில்லை எனினும் அலுக்கவில்லை. சிமியின் குழந்தைப் பருவ ஃப்ளாஷ்-பேக், பிந்து மாதவியின் பாத்த...

‘பாம்புசட்டை’ படக்குழுவினர்
நடிகர்கள்:>> பாபி சிம்ஹா
>> கீர்த்தி சுரேஷ்
>> பானு
>> K.ராஜன்
>> சோமசுந்தரம்
>> ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்
>> சார்லி
>> R.V.உதயகுமார்
>> சரவண சுப்பையாபணிக்குழு:>> தயாரிப்பு - மனோபாலா, R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன்
>> தயாரிப்பு நிறுவனம் - மேஜிக் ஃப்ரேம்ஸ், மனோபாலா பிக்சர் ஹவுஸ்
>> தயாரிப்பு மேற்பார்வை - பாலகோபி
>> இயக்குநர் - ஆடம் தாசன்
>> ஒளிப்பதிவு - K.G.வெங்கடேஷ்
>> இசை - அஜீஷ் அசோக்
>> படத்தொகுப்பு - ராஜா சேதுபதி
>> வசனம் - ஆதவன்
>> கலை - பாண்டியராஜ்
>> பாடல் - கவிப்பேரரசு வைரமுத்து, யுகபாரதி, விவேகா, கார்க்கி
>> நடனம் - பிருந்தா
>> சண்டை - ‘பில்லா’ ஜகன்
>> மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா
>> புகை...

துவங்கியது ‘பாம்பு சட்டை’
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் ‘பாம்பு சட்டை’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டு வரும் பாபி சிம்ஹா இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல தமிழ்ப் படங்களில் நடித்து வரும் வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் 'நெற்றிக்கண்' படத்தில் நடித்த முன்னாள் கதாநாயகி மேனகா அவர்களின் மகள். ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்குகிறார். இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏர்ட...

பொங்கி எழு மனோகரா விமர்சனம்
அம்மா செண்ட்டிமென்ட் கொண்டு படம் வந்து நாளாகும் குறையைத் தீர்க்க வந்துள்ள படம்.
சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் தன் சிறு வயதிலேயே தாயை விட்டுப் பிரிகிறான். மீண்டும் தனது அன்னையுடன் இணைகிறானா இல்லையா என்பதுதான் கதை.
சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்களை நினைவுப்படுத்தும் கதையும் திரைக்கதையும். திரைக்கதையிலேனும் சுவாரசியப்படுத்தல்களை கவனம் செலுத்தியிருக்கலாம். எழுதி இயக்கி இருப்பவர் ரமேஷ் ரங்கசாமி. மனோகரனாக, சுண்டாட்டம் படத்தில் நாயகன் இர்ஃபான் நடித்துள்ளார். தந்தையின் மிரட்டலுக்குப் பயப்படுவது, அம்மாவின் பாசத்துக்கு ஏங்குவது, நண்பர்களுடன் இணைந்து கும்மாளம் அடிப்பது, காதலிக்கிறேன் பேர்வழி என பேருந்துக்காகக் காத்திருப்பது, பெட்டிக் கடை வைத்திருக்கும் பெண்ணிடம் வழிவது, பால் கறந்து கேனில் சைக்கிளில் பால் கேன் கொண்டு செல்வதென படம் முழுவதும் பரபரப்பாக நடித்துள்ளார்...

என்னை அறிந்தால்… விமர்சனம்
அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா?
காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.
அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. சாதாரணமாகவே தன் படத்தில் நடிக்கும் நாயகர்களை பளிச்சென மாற்றிவிடுவார் கெளதம். அஜித் கிடைத்தால்? மீசையை கச்சிதமாக வெட்டியிருக்கும் இளமையான அஜித், தாடி வைத்த அஜித், தலை நரைத்த அஜித் என விதவிதமாய் அஜித்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். காக்...

நட்பு சூழ் கோலிவுட்
இயக்குநர் ஆகும் கனவில் இருக்கும் நண்பனுக்காக தயாரிப்பாளர்களாகப் பரிணாமிப்பவர்களின் எண்ணிக்கை கோலிவுட்டில் கணிசமான உயர்ந்து வருகிறது. சிநேகாவின் காதலர்கள், அமர காவியம், கப்பல் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்பொழுது அதில் பட்ற படமும் அடக்கமும்.
பட்ற இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜெயந்தன் மற்றும் தயாரிப்பாளர் காந்தி குமாரின் நட்பைப் பற்றி சிலாகித்த இயக்குநர் பாக்கியராஜ் தன் அனுபவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.
“நான் சேலத்துக்கு குடி பெயரந்த போது, அங்க கேரம்போர்ட் விளையாடப் போவேன். நான் ஜெயிக்கப் போற சமயத்தில் எல்லாம், ‘இப்ப பார்த்து பழனிச்சாமி இல்லையே!’ எனச் சொல்வாங்க. சரி பழனிச்சாமி ரொம்ப நல்லா விளையாடுவார் போலன்னு புரிஞ்சது. நான் போன ரெண்டு மூனு ட்ரிப்பும் அவர் இல்லை. நீங்களே ஒரு டைம் சொல்லுங்க எனச் சொல்லி, அன்னிக்கு பழனிச்சாமி கூட விளையாடினேன். நான் விளையாடத் தொடங்கும் முன், அவர் எப்பட...

இசை விமர்சனம்
தனக்குக் கிடைக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் தனது திறமை மட்டுமே காரணமென நம்பும் ஒருவன், அவனுக்கு ஏற்படும் தொய்வுக்கும் இயலாமைக்கும் மட்டும் மற்றவர் செய்யும் சதிதான் காரணமென நம்புவான். செயலூக்கம் குறைந்த சாமானிய மனிதனின் கற்பிதமிது.
அப்படித்தான் மகத்தான இசைக் கலைஞரான வெற்றிச்செல்வன் தன் சறுக்கலுக்கு தனது சிஷ்யன் ஏ.கே.ஷிவாதான் காரணமென கோபம் கொள்கிறார். தனது கோபத்தை வெற்றிச்செல்வன் எப்படித் தணித்துக் கொள்கிறார் என்பதுதான் இசை படத்தின் கதை.
சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் படம் வந்துள்ளது. சம கால பாணி பற்றிலாம் கவலைப்படாமல், தனது பிரத்தியேக முத்திரையுடன் அசராமல் களமிறங்கியுள்ளார். ரத்தமும் சதையுமாக பழி வாங்கப் புறப்படும் தமிழ்ப்பட வில்லன்களைப் போலன்றி, நாயகனுக்கு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்த முயல்கிறார் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன்.
இது போன்ற உளவியல...



