Movie Stillsகாவியத்தலைவன் – ஸ்டில்ஸ்
[Show slideshow]

[Show slideshow]

நேரத்தைக் கொல்லும் நல்லதொரு த்ரில்லர். டிடெக்டிவ் வெற்றியால் கண்கானிக்கப்படும் ஆட்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். எதற்கு, ஏன், யார் கொலை செய்கின்றனர் என்பதுதான் கதை. மருந்துக்கு கூட வில்லாவில் சிரிக்காத அசோக் செல்வன், இப்படத்தில் சின்னதாய் மிக அழகாய்ப் புன்னகைக்கிறார். அவரின் முதல் இரண்டு படங்களைவிட பார்வையாளர்களுக்கு மிக நெருங்கி வந்துள்ளார். அதற்கு, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குரலும் ஒரு காரணம். கண்டிப்பாக அவருக்கு நல்ல பிரேக் கொடுக்கக் கூடிய படமாக இது அமையும். மதுஸ்ரீயாக ஜனனி ஐயர். நீளமான […]

‘இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சென்னை குடிசைப் பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்கிறார். இதற்காக சென்னைக்கென்று உள்ள பிரத்தியேக சென்னைத் தமிழைக் கற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல்.. அந்த பாஷையில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் ” என்றார் ‘என்னமோ நடக்குது’ படத்தின் இயக்குநரான ராஜ பாண்டி. ‘என்னமோ நடக்குது’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில் நடந்தது . இடைவிடாமல் ஐந்துநாட்கள் நடந்த படப்பிடிப்பில் அனுபவசாலியான தேசிய விருது பெற்ற சரண்யா எல்லாக் […]

தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக கொண்டாடப்படும் மசானக் கொள்ளை என்று அழைக்கப்படும் மயானக் கொள்ளை திருவிழா இன்று தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில், ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, வட சென்னையின் குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் ‘பூலோகம் ‘ படத்தின் சில முக்கிய காட்சிகள் மசானக் கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது. இந்தக் கலாச்சாரத்தை முழுமையாகக் […]

பகடை, சூது விளையாட்டு, புரட்டு ஆகிய அர்த்தங்கள் கொண்ட வார்த்தை ‘தெகிடி’. ஃபிப்ரவரி 28 வெளியாகவுள்ள தெகிடி க்ரைமும் சஸ்பென்ஸும் கலந்த படம். தொடர் கொலைகளின் பின் இருக்கும் மர்மத்தையும் ட்விஸ்ட்டையும், ஒரு டிடெக்டிவ் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை. நடிகர்கள்: >> அஷோக் செல்வன் >> ஜனனி ஐயர் >> ஜெயப்ரகாஷ் >> ஜெயகுமார் >> காளி >> ப்ரதீப் நாயர் >> கோவர்தன் >> கமலகண்ணன் >> மாதவன் >> சக்கரபாணி பணிக் குழு: >> […]

நமது பொறுமையைச் சோதித்தறிந்து கொள்ள மீண்டுமொரு ஓர் அற்புத வாய்ப்பை நல்குகிறது பிரம்மன். தான் கோயிலாக மதிக்கும் தியேட்டரைக் காப்பாற்ற புறப்படுகிறான் நாயகன். இது முதற்பாதி. நான்காவதுவரை கூட படித்த உயிர் நண்பனுக்காக எல்லாத்தையும் விட்டுக்(!?) கொடுக்கிறான். இது இரண்டாம்பாதி. தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் சிவாவாக சசிகுமார். டி-ஷர்ட், ஜீன்ஸ் என மாடர்ன் உடையில் வருகிறார். இம்முறை, “நண்பன் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி” என்ற பன்ச் வேலைக்காமல் போய்விட்டது. காரணம் அவ்வளவு திராபையான திரைக்கதை. […]

நானியின் நேரடி தமிழ்ப்படமிது என்ற போதிலும்.. தெலுங்கு ரசிகர்களுக்கும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டதாலோ என்னமோ படம் முழுவதும் வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. முதல் பாதியின் அத்தனை ஃப்ரேமிலும் பாதி ஸ்க்ரீனுக்கு மேல் இடம்பிடிப்பது சிவப்பு நிறம்தான். இதுவே தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும். சக்தியும் ஸ்ருதியும் இணைந்து, ‘ஃபினான்சும் ரொமான்சும் ஒண்ணு சேரக்கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திக் கொண்டு ‘கெட்டிமேளம்’ எனும் நிறுவனம் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ரொமான்ஸ் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ‘நான் […]

‘கேமியோ ஃபிலிம்ஸ் (Cameo Films) எனும் புது தயாரிப்பு நிறுவனம், வைபவை நாயகனாகக் கொண்டு டமால் டுமீல் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ப்ரொக்ளைம் அட்வர்டைசிங் ஏஜென்சி (Proclaim Advertising Agency)’ என்ற விளம்பர நிறுவனம்தான், கேமியோ ஃப்லிம்ஸ் என வெள்ளித்திரையை நோக்கி தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.நூறு விளம்பரப் படங்கள் தயாரித்த பின்னரே திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டமால் டுமீல்’ படம் க்ரைம் காமெடி த்ரில்லர் வகையைச் சார்ந்த படமாம்.படத்தின் நாயகி ரம்யா நம்பீசன். படத்தின் […]

Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிகப் பெரிய அதிரடிப் படம் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் ‘எதற்கும் அஞ்சாதவன்‘ என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது . நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிறகு, ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து, நவீன உலகிற்கு […]

இயக்குநர் விக்ரமணனே அசந்துவிடுவார். அப்படியொரு நெகிழ்வான பின்னணிக் கொண்டது ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் முதற்புள்ளி. பேச்சுலர்களாக இருந்த பொழுது, ஒரே அறையில் தங்கியவர்கள் தயாரிப்பாளர் கா.கலைக்கோட்டுதயமும் இயக்குநர் முத்துராமலிங்கனும். அப்பொழுது முத்துராமலிங்கன் ‘சத்ரியன்’ அரசியலிதழின் ஆசிரியர்; கலைக்கோட்டுதயம் அந்த இதழில் பணி புரியும் தலைமைச் செய்தியாளர். அந்த நட்பு இப்பொழுது அவர்களை படம் பண்ண வைத்திருக்கிறது. “நான் 12 வருஷத்துக்கு முன்னாடி சின்னத் திரைக்கு வந்தேன். ‘தமிழன்’ தொலைக்காட்சி தொடங்கினேன். அப்பவே வெள்ளித் திரைக்கு வரணும்னு ஆசை. […]

இங்கு எவரும் அவரவர் விருப்பப்படி பிறப்பதில்லை. அவரவர் தேர்விற்கு முகம் கிடைப்பதாக இருந்தால், பிறக்கும் முன்பே அடிதடியும் குழப்பமும் ஏற்பட்டு கண்டிப்பாக சிருஷ்டியே ஸ்தம்பித்திருக்கும். ஆனால் சினிமாவில் தான் விருப்பப்பட்ட முகத்தை காட்டமுடியும் என தனது பிரத்தியேக ஒளிச் சேர்க்கையினால் மாயங்கள் நிகழ்த்தியவர் பாலு மகேந்திரா. அப்படி ஒரு நாய்க்குட்டிக்கு அவர் ‘சுப்பிரமணி’ எனப் பெயரிட்டு, தமிழர்கள் மனதில் அதை படரவிட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகிறது. ஆம், ‘மூன்றாம் பிறை’ வெளியிடப்பட்ட தினம் இன்று. இன்னமும் […]

பாலுமகேந்திராவின் குரலுடன் குக்கூ இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அந்த மகா கலைஞருக்கான மரியாதையை வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று செலுத்தினர். “முருகா.. உன் கனவுகள் நனவாக என்றுமிருப்பேன் துணையாக” என விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் சிம்பிளாகத் தொடங்கி வைத்தார். குக்கூ பட இயக்குநர் ராஜூமுருகனின் முதல் குரு இவர். கண்ணன் கொடுத்த தைரியமும் நம்பிக்கையும்தான், ‘தன்னால் முடியுமா?’ என சந்தேகித்த ராஜூமுருகனை ‘வட்டியும் முதலும்’ எழுதவைத்தது. ராஜூமுருகனின் இரண்டாவது குரு, சினிமா தொழிலைக் கற்றுக் கொடுத்த […]

சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது. அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மனமில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்க்கை பயணமே ’ஆந்திரா மெஸ்’. “அனைவரும் அதென்ன ஆந்திரா மெஸ்னு தலைப்பு என்றே கேட்கிறாங்க. தலைப்பு ரொம்ப கவர்ச்சியாக இருக்கு. அப்புறம் சாப்பாடு. அனைவருக்கும் பிடிச்ச விஷயம். இதுல ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கிறது. காரம், புளிப்பு, ஸ்வீட் என கதாபாத்திரங்களின் metaphor […]

இந்தப் புகைப்படத்தில் கிராமஃபோனுக்குப் பக்கத்தில் நிற்கிற முருகேசண்ணனை நீங்கள் பார்க்க வேண்டும். குழந்தை மாதிரி திறக்காத கண்களும் நம்மைத் திறந்து வைக்கிற சிரிப்புமாக இருக்கிற முருகேசண்ணன். மூர்மார்க்கெட்டில் கடை நடத்துகிறார். இந்தக் கதையை எனக்கு பரிசளித்தவர்களில் அவரும் ஒருவர். படத்தில் ஒரு மாண்டேஜில் தோன்றுவதற்காக அவரது மனைவியையும் அழைத்தேன். காட்சி எடுப்பதற்கு முன்பாக மனைவியின் கைகளைத் தடவிப் பார்த்தவர், “ஏய்.. வளையல் போடல..” என்றபடி வளையலை வாங்கி மாட்டிவிட்டார். அது நம்மால் யோசிக்கவே முடியாத அன்பின் எட்டாவது […]

ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். உணர்வுபூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குநர் பி.வாசு இந்தக் கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார். ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்‘ என இப்படத்திற்கு தற்போது பெயரிட்டிருக்கிறார்கள். இந்தியத் திரையுலகம் கண்டிருக்காத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை […]

தேடலை தொடங்க குறைந்தபட்சம் 3 எழுத்துக்களை தட்டச்சு செய்யவும்.
உங்கள் ஊர், கிராமம் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்கள், விபத்துக்கள், திருவிழாக்கள் அல்லது பொதுப் பிரச்சனைகளை எமது செய்திப் பிரிவுக்கு உடனே பகிருங்கள்.
முக்கிய பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் உங்கள் திரையில் பெற அனுமதி வழங்கவும்.
