32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 245 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 245)
‘தல’ ஹீரோயின் நயன்தாரா சினிமா

‘தல’ ஹீரோயின் நயன்தாரா

சூப்பர்ஹிட் ஹிந்திப் படமான ‘கஹானி’ தமிழில் ‘நீ எங்கே என் என்பே’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் இயக்கி வருகிறார் இயக்குநர் சேகர் கம்முலா. படத்தினை அப்படியே தழுவாமல் தனது பாணியில் திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கிறார். உதாரணத்திற்கு வித்யா பாலன் ஹிந்திப் படத்தில் கர்ப்பிணியாக நடித்திருப்பார். சேகர் கம்முலாவின் படத்தில் நயன்தாரா படத்தில் கர்ப்பவதி இல்லை. படத்தைப் பற்றி, ‘கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பது வாழ்நாளில் ஒருமுறை நிகழும் அதிசயம். […]

15/02/2014 Dinesh R
பிரம்மாண்டமாய் வளர்கிறது “யான்” சினிமா

பிரம்மாண்டமாய் வளர்கிறது “யான்”

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குநராக களமிறங்கும் திரைப்படம்தான் “யான்“. RS infotainment சார்பில் திரு.எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி வரும்  ஜீவா, துளசி, நாசர், ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, ‘சூது கவ்வும் ‘ கருணா ஆகியோர் நடிக்கின்றனர். 60% படப்பிடிப்பு இங்கு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரோக்கோ நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அங்கே வரலாறு காணாத பனி பெய்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் மிகுந்த சிரமத்துடன் உக்கிரமான […]

15/02/2014 Dinesh R
மௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா சினிமா

மௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா

இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், விடுதலை ஆகியோர் எடுத்த முயற்சியினாலும், பாலுமகேந்திராவின் மகன் கௌரிசங்கரின் பெருந்தன்மையாலும்தான் தன் கணவரின் முகத்தை கடைசியாகப் பார்க்க முடிந்ததாக நடிகை மௌனிகா தெரிவித்துள்ளார். 1985இல், ‘உன் கண்ணில் நீர்வழிந்தால்’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த போதுதான் அவரை முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய உறவு கடந்த 28 ஆண்டுகளில் அன்பும் காதலும் புரிதலும் நிறைந்த உறவாக இருந்தது. கடந்த 2000இல் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு இரண்டாவது அட்டாக் வந்தபோதுதான் […]

15/02/2014 Dinesh R
காதலைக் கொண்டாடும் ‘ஆஹா கல்யாணம்’ சினிமா

காதலைக் கொண்டாடும் ‘ஆஹா கல்யாணம்’

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பேண்ட் பஜா பராட்’ படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றங்கள் செய்து தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்ற பெயரில் யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். அவர் வெளியிட்டிருக்கும் காதலர் தின வாழ்த்து செய்தியில் தனது முதல் படத்தின் மேல் உள்ள காதல் திருமண பந்தம் போல நீடித்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். “படத்தின் முதல் பிரதியைப் பார்த்து […]

15/02/2014 Dinesh R
இது கதிர்வேலன் காதல் விமர்சனம் சினிமா

இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

கதிர்வேலனின் அப்பாக்கு காதலென்றால் பிடிக்காது. ஆனால் ஆஞ்சனேய பக்தனான கதிர்வேலனுக்கு காதல் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ஓகே.ஓகே.வில் நடித்தவரா என அதிசயிக்க வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தலையை மட்டும் வேண்டிய மட்டும் ஆட்டிவந்தவரின் முகத்தில் சில பாவனைகளும் எட்டிப் பார்க்கின்றன. மீண்டும் அவருக்கு தோதான கதாபாத்திரத்தினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நடனமும் முயற்சி செய்திருக்கார். கேமிரா பற்றிய பிரக்ஞை கூடியுள்ளதால், சிரமமில்லாமல் தன்னை அழகாக திரையில் எக்ஸ்போஸ் செய்கிறார். சந்தானத்தின் துணையில்லாமலேயேகூட அடுத்த படத்தில் துணிந்து தனியாகவே […]

14/02/2014 Dinesh R
“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா கட்டுரை

“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும். தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை […]

13/02/2014 Dinesh R
இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’ சினிமா

இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

நம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படும். அப்படித் தேவைக்கேற்ப முகத்தைக் காட்டுபவன்தான் “மறுமுகம்” படத்தின் நாயகன். இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும்  ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகையைச் சார்ந்ததுதான் இப்படமும். ‘ஊமை விழிகள்’ படத்திற்குப் பிறகு ஃப்லிம் ஸ்டூடண்ட்ஸ் மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படம். படத்தின் இயக்குநரான கமல் சுப்ரமணியம் திரைப்படக் கல்லூரி மாணவர். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி அவருக்கு கல்லூரியில் சீனியர். இந்தப் படத்தின் […]

12/02/2014 Dinesh R
ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா சினிமா

ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

கோலங்கள் புகழ் ஆதி என்கிற ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்த அஜய்தான் ‘ஆதியும் அந்தமும்’ படத்தின் நாயகன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு முதன்முறை வந்திருப்பதாக மேடையில் அமர்ந்திருந்த சில பிரமுகர்கள் சொன்னார்கள். ஆனால் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1993 இல் வெளிவந்த “கர்டிஷ் (Gardish)” எனும் ஹிந்திப் படத்தில், ஜாக்கி ஷெரோஃப் தம்பியாக நடித்திருப்பார். மும்பைவாழ் பஞ்சாபிவாலாவான அவரது பெயர் அப்பொழுது கெளரவ் கபூர். தமிழில் கூட முரளி, ரோஜா நடித்த “ஊட்டி” படத்தில் வில்லனாக 1999 இலேயே […]

12/02/2014 Dinesh R
“பேய் இருக்கு!!” சினிமா

“பேய் இருக்கு!!”

சத்யா நாகராஜ், S.செல்லதுரை, சாமி.P.வெங்கட், பாலாமணி ஜெயபாலன் என நான்கு நண்பர்கள். குவைத்தில் வாழும் தமிழர்கள். ஒரு தொழில் தொடங்கும் யோசனையின் முடிவாக சினிமாவைத் தேர்ந்தெடுத்தனர். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரணும் என்ற முடிவுடன், “வரம் கிரியேஷன்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். சென்னையில் இருக்கும் பழம்பெரும் இயக்குநரான ஏ.கே.வேலனின் மகன் A.K.V.கலைஞானியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியுள்ளனர். பின் படத்தில் பணி புரியும் ஒவ்வொருவரையும் சல்லடை போட்டு எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு 60 கதைகளை வாங்கி, அதை […]

11/02/2014 Dinesh R
ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார் சினிமா

ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார்

ஆட்டோ டிரைவராக இருந்து படத் தயாரிப்பாளர் ஆனவர் K.மஞ்சு. கன்னடத்தில் 38 படங்கள் தயாரித்துள்ளார். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதற்படம் “பிரம்மன்”. கமல ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மம்மூட்டி என பலரை தமிழில் முதன்முறையாக அறிமுகம் செய்தவர் இவர்தான். வாய்ப்புத் தேடிய இயக்குநர் சாக்ரடீஸின் கதை பிடித்துவிட, “ஹீரோ யார்” எனக் கேட்டுள்ளார். “சசிக்குமார்.” “அவரது கால்ஷீட் வாங்கிட்டு வாங்க. அதுவரை வெயிட் பண்றேன்” எனச் சொல்லி அனுப்பியுள்ளார் மஞ்சு. பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி போன்ற […]

10/02/2014 Dinesh R
“என் மூலதனம்” – கமல் சினிமா

“என் மூலதனம்” – கமல்

‘தரமணியின் ஆன்மா (The Soul of Taramani)’ என்ற தனிப்பாடலை ஆங்கிலத்தில் எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரிமியா. இந்தப் பாடலை, இயக்குநர் ராமின் அடுத்த படமான “தரமணி”யின் பிரமோஷனிற்கு உபயோகிக்க அனுமதி அளித்துள்ளார் ஆண்ட்ரியா. படத்தின் இசையமைப்பாளரான யுவனும் சம்மதம் சொல்லிவிட, இந்த தனிப்பாடலை கமல் வெளியிட இயக்குநர் இமயம் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். “நல்லா பாடுவாங்கன்னு தெரியும். பல திரைப்படங்களில் நாயகிக்காக குரல் கொடுத்திருக்காங்கன்னு தெரியும். ஆனா தமிழ் பேசுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. […]

10/02/2014 Dinesh R
அசத்தலான பாடல்களுடன் ஆஹா கல்யாணம் சினிமா

அசத்தலான பாடல்களுடன் ஆஹா கல்யாணம்

யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிந்தியில் பெரிய வெற்றியைப் பெற்ற “பேண்ட் பஜா பராத்” தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. பிரபல தெலுங்கு ஹீரோவான நானி நேரடியாக தமிழில் நடிக்கும் இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படத்தின் இசை அமைப்பாளர் தரன் குமார் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். தன்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்தப் படம் முக்கியத்துவம் […]

09/02/2014 Dinesh R
கணவரைத் தேடும் நயன்தாரா சினிமா

கணவரைத் தேடும் நயன்தாரா

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘கஹானி’ திரைப்படம் தமிழில் “நீ எங்கே என் அன்பே!” என்ற பெயரில் உருவாகி வருகிறது. காணாமல் போன தன் கணவனைத் தேடி நகருக்கு வரும் ஓர் அபலை பெண்னைச் சுற்றி நடைபெறும் பரபரப்பான இந்தக் கதையில் நயன்தாரா கதை நாயகியாக நடித்திருக்கிறார். ஹிந்தியில் வித்யா பாலன் ஏற்று பெரும் புகழை பெற்ற இந்த பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகு ஊட்டி உள்ளார். சுவாரசியமான திருப்பங்களும், வித்தியாசமான கதைக் களமும் கொண்ட இந்தப் படம் […]

09/02/2014 Dinesh R
கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்” சினிமா

கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்”

கூத்துக் கலையினை மையமாக வைத்துத் தயாராகி வரும் படம்தான் “கள்ளப்படம்” . அறிமுக இயக்குநர் வடிவேல் தனது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆச்சர்யமான ஒரு புதுமையை செய்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு இயக்குநர், ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு இசையமைப்பாளர், ஒரு எடிட்டர் ஆகியோர்தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். இந்தக் கதாபாத்திரங்களில் அந்தந்த தொழில்நுட்ப கலைஞர்களே நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வேடத்தில் படத்தின் இயக்குனர் வடிவேலுவும், ஒளிப்பதிவாளர் வேடத்தில் படத்தின் ஒளிப்பதிவாளரான ஶ்ரீராம் சந்தோஷும், இசையமைப்பாளர் வேடத்தில் […]

06/02/2014 Dinesh R
ஹலோ கோச்சடையான் சினிமா

ஹலோ கோச்சடையான்

கோச்சடையான் ரிலீஸ் தேதி சொன்னாலும் சொன்னார்கள்.. ஆளாளுக்கு கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டனர். இந்தியாவின் பிரபல செல் போன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்பன் மொபைல் ரஜினி ரசிகர்களுக்காக கோச்சடையான் ஸ்பெஷல் எடிஷன் போன்களை சந்தைக்கு கொண்டுவருகிறார்கள். பத்து லட்சம் போன்களை தங்களுடைய 27000 அவுட்லெட் கடைகளின் மூலம் தென்னிந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோச்சடையான் முகமுடிகளும் கிடைக்கும். மொபைல் வெளியிடப்படும் முன், விளம்பரத்திற்காக தென்னிந்திய ரேடியோ ஸ்டேஷன்களில் 60000 நொடிகளையும், டி.வி. சேனலில் 600 நொடிகளும் விளம்பரத்திற்காக […]

06/02/2014 Dinesh R