32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 246 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 246)
ஆஹா கல்யாணம், சந்தோஷத்தில் நானி சினிமா

ஆஹா கல்யாணம், சந்தோஷத்தில் நானி

காலத்தை வென்ற பல காதல் படங்களைத் தயாரித்த பெருமைக்குரிய யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தமிழ்த் தயாரிப்பான “ஆஹா கல்யாணம்” படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் முடிவடைந்தது. தெலுங்குத் திரையுலகின் பிரபல கதாநாயகனான நானி நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்கிற வகையில் “ஆஹா கல்யாணம்” படத்திற்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. இளைஞர்களைப் பெருமளவில் கவர்ந்து இழுக்கும் வகையில் இளமைத் துள்ளளுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடித்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது என்கிறார் […]

04/02/2014 Dinesh R
காதல் டாக்டராகிறார் சந்தானம் சினிமா

காதல் டாக்டராகிறார் சந்தானம்

மனநல மருத்துவரான சந்தானம் தன்னிடம் வரும் நோயாளிகளின் பிரச்சினையை ஒருவரியில் சொல்லச் சொல்லிக் கேட்கிறார். அது பிடித்திருந்தால் மட்டுமே ட்ரீட்மென்ட் கொடுக்கும் வித்தியாசமான டாக்டர். “கண்ணா லட்டு திண்ண ஆசையா” சேது சொல்லும் ஒரு “டபுள் ட்ராக்” ஒன்லைனர் பிடித்துப் போக அவருக்கு உதவுகிறேன் பேர்வழி என களமிறங்கி சந்தானம் கலக்கும் காமெடி பட்டாசுதான் வாங்ஸ் விஷன் தயாரிக்கும் “வாலிபராஜா“. “இந்தப் படத்தில் சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்படும். ஹீரோவின் குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், […]

03/02/2014 Dinesh R
“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா சினிமா

“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானுக்கு கிளம்பும் உற்சாகத்தில் இருந்தார் கார்த்திகா. “குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாகவும், மறக்க முடியாததாக இருந்தது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பிரசித்தி பெற்ற வீடியோகேம் கதாபாத்திரமான லாரா க்ராஃப்டை போல முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோயின் பாத்திரம். இது எனக்கு புதிய அனுபவம், மேலும் இந்தப் படத்தில் நான் ஆடியிருக்கும் “டேப்”டான்ஸ் பெரிய அளவில் பேசப்படும்” என்றார். “என் மேல் […]

31/01/2014 Dinesh R
பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய் சினிமா

பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

சைவம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார் இயக்குநர் விஜய். பொதுவாகவே படத்தின் தலைப்புக்கு மிகவும் மெனக்கெடுபவர் அவர். அது போலவே, தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்ட விரும்பினார். பல்வேறு பொருத்தமான பெயர்களின் பரீசிலித்த பிறகு, நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ‘ பாஷா’ என பெயர் இட்டு ள்ளார். Guddu என்று செல்லமாக அழைக்கப்படும் ‘ பாஷா’ அறிமுகப் படத்திலேயே இயக்குநரை பாராட்டுப் பத்திரம் வாசிக்க […]

27/01/2014 Dinesh R
கோலி சோடா விமர்சனம் சினிமா

கோலி சோடா விமர்சனம்

இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ளை அப்படியே கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அழைத்து வந்து அசத்தியுள்ளார் விஜய் மில்டன். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் நான்கு பையன்கள், ஆச்சியின் உதவியால் ஒரு மெஸ் திறக்கின்றனர். அதனால் கிடைக்கும் அடையாளத்தை இழந்ததும் அதை மீட்கப் போராடுகின்றனர். இதுதான் படத்தின் கதை. புள்ளி, சேட்டு, சித்தப்பா, குட்டிமணி ஆகியோர் தங்களது பெற்றோர் யாரென அறியாதவர்கள். மெஸ் தொடங்கியதும் ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு பிரச்சனையில் ஆளுக்கொரு திசையாகப் பிரிக்கப்படுகின்றனர். நால்வரில் நாயகன் என கொள்ளத்தக்க ‘புள்ளி’, […]

24/01/2014 Dinesh R
யாமிருக்க பயமே! சினிமா

யாமிருக்க பயமே!

  ‘பயம்’ என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சமும்  காட்சி அமைப்பும் கொண்ட படம் தான் ‘யாமிருக்க பயமே’. விண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் , நீதானே என் பொன் வசந்தம் , ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும் ‘யான்’ படத்தைத் தயாரித்து வரும் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் […]

23/01/2014 Dinesh R
தொடங்கியது “புறம்போக்கு” சினிமா

தொடங்கியது “புறம்போக்கு”

குலு மனாலியில், எஸ்.பி.ஜனநாதனின் “புறம்போக்கு” படப்பிடிப்புத் தொடங்கியது. இயக்குநர் அமீர் ஃபர்ஸ்ட் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இப்படத்தை யூ டி.வி. மோஷன் பிக்சர்சுடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் சேர்ந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

15/01/2014 Dinesh R
வீரம் விமர்சனம் சினிமா

வீரம் விமர்சனம்

தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது. அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை. விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் […]

10/01/2014 admin
ஜில்லா விமர்சனம் சினிமா

ஜில்லா விமர்சனம்

இந்தமுறை பொங்கல், தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் விசேடமானது. நீண்ட நாள் கழித்து அதிசயமாய் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு பொங்கலைச் சிறப்பிக்க ‘கம்ப்ளீட் ஸ்டார்’ மோகன்லாலும் களத்தில் இறங்கியுள்ளார். மதுரையின் தனிப்பெரும் தாதா சிவன். அவர் ஏதேனும் நினைத்தாலே அதை நிறைவேற்றுவான் அவரது வளர்ப்பு மகன் சக்தி. ஒரு விபத்தினைக் காண நேர்ந்து மனம் மாறும் சக்தி, அவனது தந்தையிடம் அடிதடியை விடச்சொல்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை. பலமுறை பார்த்துச் […]

10/01/2014 admin
“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.! சினிமா

“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.!

விஜய் – மோகன்லால் இனைந்து நடிக்கும் படம் ஜில்லா. மலையாள சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் மோகன்லால் தமிழில் நடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டவை. ஜில்லா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி? ஜில்லா படத்தில் நடிக்க முதல் காரணம் விஜய். அடுத்தது சூப்பர்குட் என்ற தரமான நிறுவனம். இதற்கெல்லாம் மேலாக நான் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்த வேளையில் விடாமல் என்னைத் துரத்தி கதை சொன்ன இயக்குநர் நேசன். ஏதோ வருகிறோம், போகிறோம் என்றால் மோகன்லால் […]

07/01/2014 admin
புதிய உற்சாகத்தோடு இளையராஜா! சினிமா

புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா மருத்துவர்களின் அலோசனையின்படி கட்டாய ஓய்வில் இருந்தார். இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றாமல், வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார். தற்போது பூரண நலம்பெற்று மீண்டும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, புதிய உற்சாகத்தோடு கவிஞர் சினேகன் நடிக்கும் இராஜராஜ […]

06/01/2014 admin
அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’ சினிமா

அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’

இன்றைய இளைய சமுதாயத்தினரின் தவிர்க்க முடியாத அல்லல்களை நகைச்சுவையுடன் சொல்லவரும் ஒரு திரைப்படம். நம் சமுதாயத்தின் இரண்டு கோடிகளில் உள்ள இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும்தான் புலி வால் எனும் இத்திரைப்படம். எந்த விலை கொடுத்தும் வெற்றியை மட்டுமே தக்க வைக்க நினைக்கும் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் ஓர் ஐ.டி. நிறுவனர் கார்த்திக். கார்த்திக்கின் காதலியான மோனிகா தான் அவனின் பி.ஏ.வும் கூட. கார்த்திக்காக பிரசன்னா; மோனிகாவாக ஓவியா. சூப்பர் மார்க்கெட்டில் வேலை […]

06/01/2014 admin
வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு சினிமா

வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு

“அஜித் சார், கிராமத்துப் பின்னணில படம் பண்ணி நாளாச்சு. இது மலையாளப் படத் தழுவலோ, ரஜினியின் முரட்டுக்காளை படத் தழுவலோ இல்லை. அஜித் சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரோட அந்த முகத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கோம். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாத் தரப்பினருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஃபேமிலி என்ட்டர்டெயினராக இருக்கும்” என்றார் இயக்குநர் சிவா.  “அஜித் சாரோடவும், ஷிவா சாரோடவும் இது எனக்கு முதல்படம்” என மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். படத்தின் […]

02/01/2014 admin
கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன் சினிமா

கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன்

குறிப்பிட்ட அளவு  திறமைகள் உள்ள சிலர், தனது வாழ்நாளில் கற்பனைக்கு எட்டாத அளவில் பெரிய சாதனைகளையும்  சாகசங்களையும் நிகழ்த்தி அசத்த விரும்புகிறார்கள். அவர்களின் சாகசக்கனவு நிறைவேற நிஜ வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத வகை வகையான சோதனைகளைச் சந்திக்கிறார்கள். சதா சர்வகாலமும் கனவுலகில் சஞ்சரிக்கும் நாயகன்தான் வால்டெர் மிட்டி. லைஃப் பத்திரிகையில்  வேலை செய்யும் அவன், தன்னை ஒரு விமான ஓட்டியாகவும், மருத்துவராகவும், கொலைக்காரனாகவும் வினோத விபரீதக் கற்பனையில் மிதக்கிறான். ஆனால் நிஜ வாழ்வில் அவன் ஒரு பயந்த […]

02/01/2014 admin
ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம் சினிமா

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் புறம்போக்கு படத்தில் ஷாமும் இணைகிறார். குலு மணாலியில் ஜனவரி 14, 2014 முதல் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. பிக்கேனர், ஜெய்ப்பூர், பொக்ரான், ஜெய்சால்மர் என முதலில் வடஇந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்திவிட்டு ஹைதராபாத், சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரவுள்ளனர். “என் முதல்படம் இயற்கைக்குப் பிறகு ஷாமுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். ஷாம் வேலையில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பவர். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என 2014இன் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். பல […]

01/01/2014 admin