
ஸ்ரீகாந்திற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் – இயக்குநர் ராஜ்தேவ்.
செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் - பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் " சத்தம் இன்றி முத்தம் தா ". மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில்..இசையமைப்பாளர் ஜுபின் பேசியதாவது...இப்பட்த்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் அன்பு கலந்த நன்றி. இந்த மேடையில் நான் இன்று இருப்பதற்கு மிக முக்கிய காரணம் ஆனந்த் சார் அவர்கள் தான். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக் கொள்கிறேன். நான் இதற்கு முன் பணியாற்றிய பிற திரைப்படங்களுக்கும் இப்படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்பட்த்தில் பாடல்கள் அனைத்து...
















