Shadow

திரைச் செய்தி

தி கிரிமினல் – சஸ்பென்ஸ் த்ரில்லர்

தி கிரிமினல் – சஸ்பென்ஸ் த்ரில்லர்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிரிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பதிவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். பவன் கெளடா படத்தொகுப்பு செய்ய, சசி துரை நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். அஷ்வத் மற்றும் சரவணன் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிக்கும்படி இருந்ததோடு, படத்தைப் பார்க்க...
மாலை நேர மல்லிப்பூ – ஒரு பாலியல் தொழிலாளியின் பாசக்கதை

மாலை நேர மல்லிப்பூ – ஒரு பாலியல் தொழிலாளியின் பாசக்கதை

சினிமா, திரைச் செய்தி
21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாகப் பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்ச...
“கல்லூரி நட்பு அந்தஸ்து பார்க்காது” – தர்ஷன்

“கல்லூரி நட்பு அந்தஸ்து பார்க்காது” – தர்ஷன்

சினிமா, திரைச் செய்தி
அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வேற லெவல் ஹிட்டப்பா என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்துகொண்டார். ‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓ.டி.டி தளம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகமாக விசிலடித்து ஆர்ப்பாட்டமாக இக்குழுவினரை வரவேற்ற நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “உங்கள் ஆரவாரத்தைப் பார்க்கும்போது எனக்கு என் கல்லூரிக் காலங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் என் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும்...
“நாதலயமாகும் ஒலி சப்தம்” – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

“நாதலயமாகும் ஒலி சப்தம்” – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

சினிமா, திரைச் செய்தி
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்தியேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னணி இசையாலும் உயிர்ப்பித்து வருகிறார். சாணிக்காயிதம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையேயான உறவு குறித்து விவரிக்கையில் இடம்பெற்ற, 'மலர்ந்தும் மலராத..' என்ற பாடலின் நவீன வடிவம், இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளரும்,...
டிஜிட்டல் தமிழ் சினிமாவிற்கு வித்திட்ட வெற்றிப்படம் ‘சிலந்தி’

டிஜிட்டல் தமிழ் சினிமாவிற்கு வித்திட்ட வெற்றிப்படம் ‘சிலந்தி’

சினிமா, திரைச் செய்தி
காலங்காலமாகப் படச்சுருளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் இன்று முழுமையாக டிஜிட்டல் திரைப்படங்களாக மாறிவிட்டன. இதற்கு வழிகாட்டியதுடன் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கையைத் தந்த முதல் தென்னிந்திய சினிமாவான "சிலந்தி", 2008ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிப் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிதான் அதன் பின், எல்லோரும் டிஜிட்டல் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுத்தது. இந்தப் படத்தைத் திருப்பூரைச் சேர்ந்த சங்கர் பழனிச்சாமி ஜி கம்பெனி சார்பில் தயாரித்திருந்தார். சினிமா பத்திரிகையாளராக "மாலை முரசு" நாளிதழில் பணியாற்றிய ஆதிராஜன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குனராக அறிமுகமானார் (இவர் கன்னடத்தில் ‘ரணதந்த்ரா’, தமிழில் ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’ படங்களை இயக்கியவர்). முன்னா...
“சாணிக்காயிதத்தின் பயணம்” – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

“சாணிக்காயிதத்தின் பயணம்” – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

சினிமா, திரைச் செய்தி
சாணிக்காயிதம் பயணம் ஒரு சிறு கருவுடன் தொடங்கியது. அது நான்கு நாட்களில் உருவாகியது. மனித இயல்பைப் பற்றிய அடிப்படை புரிதல்தான் இந்தப் படத்தின் முக்கிய சாராம்சம் ஆகும். பழிவாங்கும் கதைக்களமான ராக்கி திரைப்படத்தில் இருந்தே, அருண் மாதேஸ்வரன் பழிவாங்கும் கதையை மூன்று பகுதியாய் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார். அதன் தொடர்ச்சியாகவே அவர் இந்த சாணிக் காயிதம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இது குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “தமிழ்த் திரையுலகில் பழிவாங்கும் கதைகள் புதியதல்ல. ஏற்கனவே மில்லியன் கணக்கில் இந்த மாதிரி கதைகள் வந்துள்ளன. இருப்பினும், சாணிக்காயிதம் மற்றும் எனது முந்தைய படமான ராக்கியில் காட்டப்படும் யதார்த்தத்தின் அம்சம் தமிழ் ரசிகர்களுக்கு ஒருவகையில் புதியது. மற்ற படங்களில் காட்டப்படும் வன்முறை ஸ்டைலாக இருக்கும், அதிலிருந்து இந்தப் படம் மாறுபடும். சாணிக் காயிதம் திரைப்பட...
பயணிகள் கவனிக்கவும் | சமூக வலைத்தளத்தால் ஏற்படும் பின்விளைவுகள்

பயணிகள் கவனிக்கவும் | சமூக வலைத்தளத்தால் ஏற்படும் பின்விளைவுகள்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் முன்னோட்டத்தினை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர். இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷாம்நாத் நாக் இசையமைத்திருக்கிறார். மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ்ப் பதிப்பான 'பயணிகள் கவனிக்கவும்' படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்...
ஆஹா தமிழில் ஜீ.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’

ஆஹா தமிழில் ஜீ.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’

சமூகம், சினிமா, திரைச் செய்தி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் கலந்து கொண்டார். ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியான செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ஐங்கரன் படத்தின் ட்ரெய்லரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இப்படம், மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து மேடையேறிய இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர், “உங்களின் இந்த உற்சாகத்தைப் பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. நான் திரைத்துறைக்...
ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறிமுக குழந்தை நட்சத்திரம் அர்னவ் விஜய் பேசுகையில்,'' இந்தப் படத்தில் நடிப்பத...
ஓ மை டாக் – டிஸ்னியின் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்

ஓ மை டாக் – டிஸ்னியின் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், ''ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் க...
“கேள்விகளுக்குப் பயந்த சூர்யா” – சிவகுமார்

“கேள்விகளுக்குப் பயந்த சூர்யா” – சிவகுமார்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ‘ஓ மை டாக்’ படக்குழுவினருடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்த்து. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார் பேசுகையில், ''வால்ட் டிஸ்னி நி...
ரீ – காதில் அலறும் மர்ம ரீங்காரம்

ரீ – காதில் அலறும் மர்ம ரீங்காரம்

சினிமா, திரைச் செய்தி
உலகையே சுருக்கி, கடல் கடந்து இருப்பவர்களை அருகில் கொண்டு வந்துவிட்டது தொழில்நுட்பம். ஆனால், பக்கத்து வீடுகளில் இருப்பவர் யார், அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத் தவறி வருகிறோம். ஆனால் 'ரீ ' படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல. அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது .அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது. 'என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா?' என்று அறிய முற்படுகிறாள். ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்னவென்பதைப் பற்றிப் பேசும் படம் தான் ''ரீ". இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார். அவரே தனது ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ...
“நெகடிவ் ரோல்களில் பிரஷாந்த் நடிக்கவேண்டும்” – ஆர்.கே.செல்வமணி

“நெகடிவ் ரோல்களில் பிரஷாந்த் நடிக்கவேண்டும்” – ஆர்.கே.செல்வமணி

சினிமா, திரைச் செய்தி
ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் ஃபெப்ஸியின் தலைவரும், அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர். இவ்விழாவில் பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது, “பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் 'அந்தகன்' திரைப்படம் பிரஷாந்த்துக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படம் ஹிந்தியில் வெளியாகிப் பெரிய வெ...
வாய்தா – வர்ணத்தையும் வர்க்கத்தையும் பேசும் பொழுதுபோக்கு சமூகப்படம்

வாய்தா – வர்ணத்தையும் வர்க்கத்தையும் பேசும் பொழுதுபோக்கு சமூகப்படம்

சினிமா, திரைச் செய்தி
புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'வாய்தா' படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் வெளியிட்டார். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வாய்தா'. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர்.ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி. லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு, ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று ...
வெற்றிமாறன், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார் – தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் ஜீ5

வெற்றிமாறன், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார் – தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் ஜீ5

சினிமா, திரைச் செய்தி
ஜீ5, சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரம்மாண்டமாக நடந்த “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்ச்சியில், தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது. பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர் “நிலமெல்லாம் ரத்தம்” எனும் ஜீ5 பிரத்தியேக தொடர் அறிவிக்கப்பட்டது. இவருடன் பன்முக ஆளுமையாளரான பிரகாஷ் ராஜ் நடிப்பில் ‘அனந்தம்’ என்ற அழகிய டிராமா தொடர், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் திரில்லர் தொடர் “கார்மேகம்” மற்றும் அரசியல் டிராமாவான “தலைமை செயலகம்” ஆகிய தொடருடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இளைஞர்கள் இதயம் வென்ற காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வரவிருக்கும் “பேப்பர் ராக்கெட்” தொடர்கள் பற்றி இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இவை தவிர, ஜீ5 தளத்தில், இயக்குநர் விஜய்யின் டீன் ஏஜ் டான்ஸ் டிராமா ஃபைவ் - சிக்ஸ்- செவன்- எயிட், வசந்த பாலன் இயக்கத்தில் 'தலைமை செயல...