
படவா விமர்சனம் | Badavaa review
படவா என்பது போக்கிரி என்ற பொருள் வருமாறு செல்லமாகப் பயன்படுத்தப்படும் சொல்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மரக்காத்தூர் எனும் ஊருக்குள் வெட்டியாகச் சுற்றும் வேலனின் போக்கிரித்தனம் பொறுக்க முடியாமல் அவரை ஊரே சேர்ந்து மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கிறது. மலேஷியாவில் வேலை போய்விட, மீண்டும் ஊருக்கு வரத் தயங்கும் வேலன்க்கு உதவுவதற்காக, வேலனுக்கு லாட்டரியில் 10 கோடி விழுந்துள்ளதாக அவனது மலேஷிய நண்பன் பொய் சொல்லிவிடுகிறான். அதை நம்பும் ஊர்மக்கள், அவனை ஊர் தலைவராக எதிர்ப்பில்லாமல் ஏக மனதாக நியமித்துவிடுகின்றனர். ஒரு படவாவிடம் கொடுக்கப்படும் தலைவர் பொறுப்பை அவன் எப்படிப் பயன்படுத்துகின்றான் என்பதுதான் படத்தின் கதை.
வேலனின் நண்பர் உறைப்பாக சூரி நடித்துள்ளார். விடுதலை, கொட்டுக்காளி, கருடன் என புதுப் பரிமாணத்திற்குச் சென்றுவிட்ட பின், அவரைப் பழைய வழக்கமான நகைச்சுவைக் காட்சிகளில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள...