
ராஜா கிளி விமர்சனம்
கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார் தம்பி ராமையா. அவரது மகன் உமாபதி இப்படத்தை இயக்கியுள்ளார். முருகப்பா சென்றாயர் எனும் கோடீஸ்வரத் தொழிலதிபரின் வாழ்வையும் உயர்வையும் வீழ்ச்சியையும் பற்றிப் பேசுகிறது படம்.
தெய்வானை எனும் மனைவி இருக்க, வள்ளிமலரை இரண்டாவது திருமணம் புரிந்து கொள்கிறார். பிறகு, விஷாகா என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொள்ள விழைகிறார். விஷாகாவின் கணவன் இறந்துவிட, கொலைப்பழி வந்து சேர, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுபவரின் வாழ்க்கை என்னானது என்பதே படத்தின் முடிவு.
வள்ளிமலராக சுபா தேவராஜ் நடித்துள்ளார். அவரது கணவராக கொட்டாச்சி நடித்துள்ளர். அவர், முருகப்பா சென்றாயரிடம் ஒரு ‘பேக்கரி’ டீலிங் போட்டுக் கொள்கிறார். ‘கெதக்’கென்று இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்குள், சிந்தாமணி எனும் பாத்திரத்தில் வரும் ரேஷ்மா பசுபலேட்டி மூலம் அடுத்த அதிர்ச்சியைத் தருகிறார். அடுத்து விஷாக...