
துப்பாக்கி விமர்சனம்
சகுனி, பில்லா 2, தாண்டவம், மாற்றான் என தொடர் ஏமாற்றங்களில் இருந்து ரசிகர்கள் மீளவும், இந்த வருட தீப ஒளி திருநாளைக் கொண்டாட்டமாக்கவும் வந்திருக்கும் இளைய தளபதி விஜய்யின் படம்.விடுமுறைக்கு வரும் இராணுவ வீரர் ஒருவர், தீவிரவாதிகள் திட்டமிடப்பட்டிருக்கும் வெடுகுண்டு தாக்குதலை முறியடிக்கிறார். அதை தொடர்ந்து தீவிரவாதிகளின் தலைவன் வகுக்கும் வியூகங்களை இராணுவ வீரர் எப்படி சமாளிக்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.ஜெகதீஷ் என்னும் இராணுவ அதிகாரியாக விஜய். இளமை துள்ளலுடன் அழகாய் பாத்திரத்தில் பொருந்துகிறார். உள்ளூர் ரவுடிகளையே தொண்டைக் கிழிய கத்தியால் வெட்டுபவர், தீவிரவாதிகளை சத்தமின்றி டொப்பென சுட்டு தள்ளுகிறார். எப்பொழுதும் போல் நடனத்தில் தனி ஆர்வம் ஏதும் காட்டாமல் வந்தேன், ஆடினேன் என்பது போல் பாடல்களில் தெரிகிறார். காஜல் அகர்வால் நாயகியாக. குத்து சண்டை வீராங்கனையாக அறிமுகமாகி வழக்கமான தம...















