
10 எண்றதுக்குள்ள விமர்சனம்
10 எண்றதுக்குள்ள எதையும் சாதித்து முடிக்கக் கூடியவர் படத்தின் நாயகன். அதைக் கேட்டு, ‘ஐய்யய்யே.!’ என அரை லூஸு நாயகியே உதட்டைச் சுழிக்கிறார்.
படம், மிக முக்கியமான சமூக அவலத்தில் இருந்து தொடங்குகிறது. நாயகனாகப்பட்டவர் அதில் சிக்கி, அதிலிருந்து தப்பிக்க எப்படி அதை மேலும் தீ மூட்டித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
நாயகியின் பெயரை ஷகீலா என வைத்ததில் தொடங்கி, சமந்தாவின் கதாபாத்திரத்தை அதிக கவனமுடன் லூஸுத்தனமாகவே உருவாக்கியுள்ளனர். சீரியசான படத்துக்கு, மிக மிக இடைஞ்சலாய் உள்ளார் சமந்தா. அவரை விடவும் படத்தின் பாடல்கள், மிகப் பெரிய வேகத்தடையாக உள்ளது.
‘என் கடமை உயிரை விட்டு நடிப்பது’ என விக்ரம், இந்தப் படத்திலும் தன் கடமையைச் செவ்வனே செய்கிறார் விக்ரம். வயோதிகம் லேசாக முகத்தில் எட்டிப் பார்த்தாலும், ஆடல் பாடல் சண்டைக் காட்சிகளில் ஒரு குறையும் வைக்காமல் இளமை துள்ள திரையில் வலம் வருகிறார். ...















